Nayanthara playing a politician in the film Mohan Raja
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
இதன் ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றியுள்ளார். இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கதைப்படி அது ஒரு பெண் அரசியல்வாதி கதாபாத்திரம். இந்தக் கூட்டணி உறுதியானால், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இணையும் இரண்டாவது படமாக இது அமையும்.
அவர்கள் இருவரும் ஏற்கனவே சைரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…