தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளவர் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தத் திருமணத்தின் போது நயன்தாரா அணிந்திருந்த சிவப்பு நிற புடவையை பற்றின ரகசியங்களை கூறியுள்ளார் ஆடை வடிவமைப்பாளர் மோனிகா ஷா.
அது என்னவென்றால்கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹோய்சல என்ற 11 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோயிலின் வடிவத்தை பூ தையல் போட்டு வடிவமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாழ்வில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காக முழுக்கை பிளவுஸில் கடவுள் லக்ஷ்மியின் உருவமும் பல்வேறு மணிகளும் கோர்க்கப்பட்டு உள்ளது என்றும் அதனோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அதன்பின் அந்த புடவையின் அழகிற்கு ஏற்றார்போல் நயன்தாரா ஜாம்பியன் மரகதநாணயம், போல்கி செயின்,சாட்லடா என்ற ஐந்து அடுக்கு வைர ஆரம் போன்ற நகைகளை அணிந்து இருப்பார் என்று சீக்ரெட் கலை வெளியிட்டுள்ளார்.
