Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்பெயினில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞரை ரசித்தபடி பார்க்கும் நயன்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

nayanthara latest video

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைதான் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு சில படங்களில் தீவிரமாக நடித்து வந்த நயன்தாரா சமீபத்தில் ஃபுட் பாய்சன் காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது முறையாக ஹனிமூன் சென்றுள்ள நிலையில் இருவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை நயன்தாரா ரசித்தபடி நிற்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக இவர்களின் ஹோட்டல் மற்றும் பேருந்து பயணம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தன அந்த வகையில் தற்போது இந்த வீடியோ பதிவும் இணையத்தில்
வைரலாகி வருகிறது.