விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டிச்சேரி படப்பிடிப்புடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இதையடுத்து, பின்னணி வேலைகளில் படக்குழுவினர் முழு வீச்சில் இறங்க இருக்கிறார்கள்.
Thalaivi shooting in pondicherry#LadySuperstar #Nayanthara pic.twitter.com/zJ2p0NLabY
— Nayanthara Fans Club (NFKWA) (@NayantharaU_FC) August 21, 2021

