தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை நெற்றிக்கண் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது நயன்தாரா தெரிவித்தார்.
அதன்பிறகு இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். திருமணம் முடிந்த பிறகுதான் அனைவருக்கும் கூறுவோம் என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் தேதி கூட உறுதியாகிவிட்டது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
