தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா. இதனைத் தொடர்ந்து இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.
மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நிகழ்ச்சிகள் போட்டியாளர்களின் ஒருவராக தன்னுடைய கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டார்.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நட்சத்திராவிற்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்பா அம்மாவாக குழந்தையின் கையை பிடித்துக் கொண்டு இவர்கள் போட்டோ வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram