தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, ‘அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதுவே உங்களின் அடையாளம். என் மகன் படுத்த படுக்கையாக இருந்தான். அவனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய் தான். இதை பொதுவெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் என கூறியிருக்கிறீர்கள். அதைச் சொல்ல வேண்டியது எனது கடமை.

இந்த மேடையில் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மேடைகளில் சொல்லவுள்ளேன். இதற்கு இந்த மேடையில் மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

இந்த விழாவுக்கு போறேன் என்று சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்ணேன்னு சொல்லிடுங்கள் என்றான். நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்தீர்கள், அதற்கு என்னுடைய நன்றி.

‘ஜனநாயகன்’ படத்தில் இயக்குநர் முதல் டீ கொடுக்கிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. ஏனென்றால், உங்களின் கடைசிப் படம், ஒரு தவறும் நேர்ந்துவிடக் கூடாதே என்று. ஆனால், நீங்களோ எந்தவொரு பதட்டமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருந்தீர்கள். ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டுமே. நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று நீங்கள் வசனம் பேசலாம். ஆனால், இங்கிருக்கும் ரசிகர்களின் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால், நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இங்குள்ள ரசிகர்களுக்கு நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். இந்த வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று பேசினார் நாசர்.

Nassar appeals on behalf of fans to please dance again, Vijay
dinesh kumar

Recent Posts

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

2 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

20 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

20 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

20 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

21 hours ago