Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நானியின் 31 வது படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.வைரலாகும் தகவல்

nani-31-movie latest update

“தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.நானி 31 போஸ்டர்இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை ‘அடடே சுந்தரா’ இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. “,

nani-31-movie latest update
nani-31-movie latest update