Nandita Swetha self quarantines with symptoms of COVID-19
நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…