‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..
பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா படேகர். தமிழில், ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக, பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நாயகனாக நடித்து கவர்ந்தார்.
தற்போது, நானா படேகர் நடிகர்கள் சாகித் கபூர், டிப்தி திம்ரி நடிப்பில் உருவான ‘ஓ ரோமியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 13-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் நானா படேகர் வந்தார். ஆனால், இயக்குநர் விஷால் பரத்வாஜ் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நதிவாலா தன்னை 1 மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டதாகக் கூறி நிகழ்வில் கலந்துகொள்ளாமல் சென்றார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா தான் நடிக்கும் எந்த படத்தின் புரொமோஷன் விழாவுக்கும் வரமாட்டார். ஆனால், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘மனசங்கர காரு’ பட புரொமோஷனில் விரும்பி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


