சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்களில், நாக சைதன்யா அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார்.

அதன்பின் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதைவைத்து இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து விவாகரத்து முடிவை முதலில் எடுத்தது சமந்தா என்றும் அதன் பிறகு நாக சைதன்யா ஒத்துக் கொண்டதாகவும் நாகார்ஜுனா கூறியதாக செய்திகள் வெளியானது. இது போலியான செய்தி என்று தற்போது நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். அதில், “சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Suresh

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

13 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

15 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

15 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

16 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

20 hours ago