Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாகர்ஜூனா வீட்டில் வர போகும் முதல் வாரிசு …குட் நியூஸ் சொல்ல போகும் நாக சைதன்யா ?

nagachaithanya and shobitha latest update

சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. கடந்த ஆண்டு டிசம்பரில் ஹைதராபாத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன நிலையில், தற்போது சோபிதா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சோபிதா சமீபகாலமாக பொது இடங்களில் தளர்வான ஆடைகளில் காணப்படுவதால் இந்த யூகம் வலுத்துள்ளது.

இருப்பினும், நாக சைதன்யா குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் சோபிதா கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்துள்ளன. அவர் அணிந்திருந்த உடையின் காரணமாக அப்படித் தோன்றியதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே, இது வெறும் கிசுகிசுவா அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

nagachaithanya and shobitha latest update