“அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் இருக்க மாட்டார்”: ரஜினிகாந்த் குறித்து ஐஸ்வர்யா பேச்சு

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் ‘லால் சலாம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடந்தது.இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:-இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். ‘லால் சலாம்’ படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் ‘லால் சலாம்’ படத்தில் இருக்க மாட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.”,

my-father-not-sanghi-says-aishwarya-rajinikanth update
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

18 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

21 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

21 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

21 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

21 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

21 hours ago