Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்துடன் சந்திப்பு..யுவன் சங்கர் ராஜா போட்ட ட்வீட்.!!

music director yuvan shankar raja meet ajithkumar

அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. படங்களின் ரிலீஸ் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் அதிகமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு புதிய ரேஸ் கார் ஒன்றை வாங்கி இருப்பதாக புகைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.இது குறித்து யுவன் சங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், கார்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.