ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த 71 வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டாவது முறையாக வாத்தி படத்திற்காக விருது வாங்கினார். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இவருக்கு பரிசளித்துள்ளார்.
அதாவது ஏ ஆர் ரகுமான் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோவை ஜிவி பிரகாஷிற்கு பரிசளித்துள்ளார் இதனை புகைப்படத்துடன் வெளியிட்ட ஜிவி பிரகாஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram