கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் கூட்டத்தை கொண்ட இவர் தற்பொழுது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரது தீவிர ரசிகரான நடிகரும் , இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தளபதி விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் படம் ரிலீஸ் சமயத்தில் விஜய் எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையில் தான் இருப்பார்; அதை அவரே என்னிடம் கூறினார். படத்தின் ரிலீஸ் குறித்த டென்ஷனை மனதிற்கு ஏற்றிக் கொள்ளாமல் அமைதியாக எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
