எம்.பி. வாய்ப்பை ஏற்க மறுத்த சோனு சூட்

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்த பிரபல இந்தி நடிகர் சோனுசூட், கொரோனா காலத்தில் நடைபயணமாக சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இதையடுத்து வெளிநாடுகளில் தவித்த மாணவர்களை, தனி விமானம் அனுப்பி அழைத்து வந்தது, 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது என ஏராளமான உதவிகளை செய்தார். தனது சொத்துக்களை அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கி இத்தகைய உதவிகளை அவர் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சோனுசூட்டை எம்.பி. ஆக்க முயற்சி நடந்ததாகவும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சோனு சூட்டுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “சோனுசூட் செய்த சமூக நலப்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு அவருக்கு ராஜ்ய சபை எம்.பி. சீட் வழங்க முன்வந்தது.

ஆனால் சோனுசூட் அந்த வாய்பை பணிவோடு நிராகரித்தார். எந்த அரசியல் அமைப்பிலும் சார்ந்து இருக்க விரும்பவில்லை. அரசியல் கட்சிகள் சாயல் இல்லாமல் தனது பணிகளை தொடர விரும்புகிறேன் என்று சொல்லி வேட்புமனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்” என்றனர்.

Suresh

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

12 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

13 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

14 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

16 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

19 hours ago