Karthik starts dubbing for Andhagan
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக தொடங்கி நடைபெறுகின்றன.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கார்த்திக், குணமடைந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளை விரைவாக முடித்துக்கொடுத்தார். அத்துடன், உற்சாகத்துடன் இன்று டப்பிங் பணியையும் தொடங்கினார். டப்பிங் ஸ்டுடியோவில் தியாகராஜன் மற்றும் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ள அந்தகன் விரைவில் ரிலீசாக உள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…