நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முருங்கைக்கீரை மிகவும் உதவுகிறது.
பொதுவாக முருங்கை மரத்தில் இருந்து வரும் இலைகள் பூ காய் என அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். நாம் ஏற்கனவே கீரை மற்றும் காயை சமையலில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று.
இதில் இரும்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே.
மற்ற உணவுகளை காட்டிலும் முருங்கைக் கீரையில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது இது ரத்த சோகை பிரச்சனையை போக்க பெருமளவில் உதவுகிறது. அப்படி நம் உணர்வில் தினமும் முருங்கை கீரை சேர்த்துக் கொள்ள முடியாமல் போனால் நாம் முருங்கைக் கீரையை பவுடராக சேமித்து வைத்து பயன்படுத்துவது எளிதாக அமையும். முருங்கைக் கீரையை நன்றாக உலர வைத்து பொடியாக அரைத்து நாம் சேமித்துக் கொள்ள வேண்டும்.
இந்த முருங்கைக் கீரையை கஷாயம் வைத்து காலையில் குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் பற்களை வலுப்படுத்த பெருமளவில் உதவுகிறது.
கசாயம் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரில் முருங்கை இலை அல்லது பொடியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் எலும்பு பிரச்சனைக்கு பெரிதும் ஒரு உதவுகிறது. எனவே இதனை சர்க்கரை நோயாளிகளுக்கும் இதே நோயாளிகளுக்கும் பெருமளவில் உதவும்.