Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவிடம் ஏகாம்பரம் சொன்ன விஷயம், மேகலை சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் ப்ரோமோ.!!

MoondruMudichu Marumagal Serials Promo Update 23-06-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மேகலை மற்றும் ஆதிரை நின்று கொண்டிருக்க நந்தினி உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா தப்பா நினைச்சுக்க மாட்டீங்கல்ல என்று சொல்ல, நீங்க எதுவுமே தப்பா கேட்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் சொல்லுங்க என்று ஆதிரை சொல்லுகிறார். மறுபக்கம் ஏகாம்பரம் ,சூர்யா, பிரபுவின் தம்பி மூவரும் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்க அவன் கூட உட்கார்ந்து நான் சமபந்தி விருந்து சாப்பிடனுமா அது நடக்கவே நடக்காது என்று சொல்லுகிறார்.

ஆதிரை மேகலா இடம் நடக்கும் அத்தை என்று சொல்ல மேகலை நந்தினி பார்த்து நீ ரொம்ப சிம்பிளா கோபுரத்து மேல இருக்குற அகல் விளக்க மாதிரி இருக்க என்று சொல்ல உடனே சுந்தரவல்லி இவ கோபுரத்து மேல இருக்குற அகல் விளக்கா என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

MoondruMudichu Marumagal Serials Promo Update 23-06-25