தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டி நடந்து முடிய இருவரும் ரிசல்ட்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரபு ஆதிரை மற்றும் சூர்யா நந்தினி இருவரும் ஒரே மதிப்பெண் இருப்பதால் நந்தினி மற்றும் ஆதிரையை ஆட வைத்து இவங்க ரெண்டு பேர்ல யார் நல்லா ஆடுறாங்களோ அவங்களுக்கு தான் தங்கச் செயின் என்று சொல்லுகின்றனர். ஆதிரையும் நந்தினியும் டான்ஸ் ஆட ஒரு கட்டத்திற்கு மேல் ஆதிரை கீழே விழ அவருக்கு கால் அடி பட்டு விட அவர் கீழே உட்கார்ந்து விடுகிறார் பிறகு நந்தினி டான்ஸ் ஆடி முடிக்க சூர்யா நந்தினி வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். அவர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசு கொடுக்க சுந்தரவல்லி குடும்பத்தினர் கடுப்பாகின்றனர். பிரபு ஆதிரையை தனியாக அழைத்து வந்து நீ எதுக்காக தோத்த உண்மையை சொல்லு என்று சொல்ல, ஆதிரை என்னால நிஜமாகவே டான்ஸ் ஆட முடியலை எனக்கு சுளுக்கு புடுச்சு இருக்கு என்று சொல்ல பிரபு எந்த இடத்துல சொல்லிட்டு இருக்கு காட்டு என்று சொல்லி காலை ஆட்டிப் பார்க்க அப்படி எதுவும் தெரியலையே என்று கேட்கிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி குடும்பத்தினர் ஒன்றாக நின்று கொண்டிருக்க மாதவி மற்றும் சுரேகா இருவரும் நந்தினி எப்படி இத ஜெயிச்சா என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் சூர்யா தான் காரணம் என்று சொல்லுகிறார். உடனே இதுல உங்களுக்கு என்ன பெருமை நெனச்சாலே அசிங்கமா இருக்கு என்று கோபப்படுகிறார். மாதவி அந்த ஆதிரையை பற்றி விசாரிச்சோம் அவ டான்ஸ்ல நல்ல ப்ரைஸ் எல்லாம் வாங்கி இருக்கா ஆனா எப்படி தோத்தானு தெரியல என்று சொல்ல அருணாச்சலம் நந்தினி ஜெயிச்சதை பற்றி பேச மாட்டீங்களா என்று கேட்க அவர்கள் கோபமாக சென்ற விடுகின்றனர். நந்தினி சூர்யா பிரபு ஆதிரையை வந்து சந்திக்கின்றனர். நந்தினி ஆதிரையிடம் செயினை கொடுக்க, நீங்கதானே ஜெயிச்சீங்க எனக்கு எதுக்கு கொடுக்குறீங்க என்று சொல்ல நீ விட்டுக்கொடுத்ததினால் தான் நான் ஜெயிச்சிருக்கேன் என்று சொல்ல பிரபு அப்போ நான் சொன்னது கரெக்ட் தானே என்று கோபப்படுகிறார். அப்படியெல்லாம் இல்லைங்க என்று சொல்ல அப்படின்னா என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணு என்று சொல்ல ஆதிரை அதிர்ச்சி அடைகிறார்.
இவன்தான் உன்ன தோத்துப்போக சொன்னானா என்று சூர்யாவிடம் வம்பு இழுக்க இருவரும் சட்டையைப் பிடித்து சண்டை போடுகின்றனர். எதுக்காக இப்படி சண்டை போடுறீங்க என்று ஆதிரை கேட்க எல்லாம் உன்னால தான் நீ தானே இப்படி பண்ண என்ற சொல்ல நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கல நந்தினிக்காக தான் என்று சொல்லி சுந்தரவல்லி மாதவியும் நந்தினி ஆடி ஜெயிக்க முடியாது என்று அசிங்கப்படுத்தி பேசியதை ஆதிரை கவனித்து விட்டு தான் விட்டுக் கொடுத்ததாக சொல்லுகிறார். உங்க திறமையை குறைச்சலா எடை போட்ட உங்க மாமியாருக்கும் உங்க நாத்தனாருக்கும் தான் நான் உன்ன ஜெயிக்க வைத்தேன் நந்தினி அவர்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும் என்று சொல்ல, சூர்யா ஆதிரையிடம் நான் இந்த போட்டிய ஒரு மாதிரி பார்த்தா நீங்க ஒரு மாதிரி பார்த்து இருக்கீங்க உங்களை நான் நிஜமான சிஸ்டர் பார்க்கிறேன் என்று சொல்ல ஆதிரை இந்த செயின் உங்களுக்கு தான் நந்தினி இத பார்க்கும்போதெல்லாம் அவங்களுக்கு நீ ஜெயிச்சது தோணனும் என்று சொல்ல, நந்தினி நன்றி சொல்லுகிறார்.
ஆதிரை பிரபுவிடம் மன்னிப்பு கேட்க, நீ எல்லாருடைய மனச ஜெயிச்சுட்ட என்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று சொல்லுகிறார். அம்மனின் நகைப்பெட்டி ஊர்வலமாக கொண்டு வர திருடர்கள் நகை பெட்டியை கவனிக்க அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். பட்டாசு வெடித்தவுடன் புகை வந்ததில் திருடர்கள் பெட்டியை மாற்றி விடுகின்றனர். பிறகு ராஜா தம்பி நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அம்மன் சன்னதிக்குள் வர பூசாரி அம்மன் பாதத்தில் வைத்து தீபாரதனை செய்து தொட்டியை திறக்க அதில் செங்கல் இருக்கிறது. உடனே பூசாரி அதிர்ச்சி ஆகி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து வெளியில் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ்காரர்கள் நாங்க செக் பண்ணி தான் எடுத்துட்டு வந்தோம் வர வழியில் தான் ஏதோ திருடு நடந்திருக்கு என்று சொல்லுகிறார். நந்தினி போலீஸ் இடம் பேச சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார். போலீஸ்காரர்கள் நாங்க உடனே கண்டுபிடிக்கிறோம் என்று சொல்ல அதுவரைக்கும் திருவிழாவை நிறுத்த முடியுமா என்று பூசாரி கேட்கிறார்.
திருவிழா நம்ப நடத்தல அந்த ஆத்தாவே நடத்துறது எல்லாமே ஒரு காரணத்துக்காக தான் இருக்கும். யார்கிட்டயும் இந்த பிரச்சனையை பத்தி சொல்ல வேணாம் திருவிழா நடக்கட்டும். பூமிதி திருவிழாவும், சமபந்தி விருந்தும் நடக்கட்டும் அதுக்குள்ள நகை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர். கொஞ்ச நேரத்தில் ஐஸ் வண்டியை தள்ளிக் கொண்டு போன திருடன் மற்றொருவரிடம் ஃபர்ஸ் திருட போக ஆதிரை பார்த்து விட்டு சத்தம் போடுகிறார். உடனே வண்டியை நிறுத்திவிட்டு திருடன் ஓடு விட, பிரபு அந்த ஐஸ் வண்டியை தள்ளிக் கொண்டு வர, ஆதிரை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தள்ளிக்கொண்டு வர போலீஸ் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். பிறகு ஆதிரை நடந்த விஷயத்தை போலீஸிடம் சொல்ல அவர்கள் பூட்டை உடைக்க சொல்லுகின்றனர்.
பிறகு உள்ளே நகைப்பெட்டி இருக்க, குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட என்ன விஷயம் என்று கேட்க பெட்டியை திறந்து பார்க்க அதிலும் செங்கல் இருப்பதால் போலீஸ் பிரபு மீது சந்தேகப்பட்டு கேட்கின்றனர். உடனே ராஜா தம்பி அவங்க நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பிரபு தம்பிக்கு அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஆதிரையும் பிரபுவும் செருப்பு வாங்கிக் கொண்டு வர வழியில் மாற்றுத்திறனாளி வர அவருக்கு அந்த செருப்பையும் பணத்தையும் கொடுக்க பிரபுவின் குணத்தை பார்த்து ஆதிரை சந்தோஷப்படுகிறார். உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல என்று சொல்ல என்ன பொறுத்த வரைக்கும் எல்லாருக்கும் கிடைக்கணும் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சூர்யா ஏகாம்பரத்துடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருக்க பிரபுவை கஞ்ச பையன் என்று ஏகாம்பரம் சொல்ல அந்தப் பெயர் சூப்பரா இருக்கு என்று சொல்ல இதைக் கேட்ட பிரபு வந்து சூர்யாவிடம் கேட்க இருவருக்கிடையில் சண்டை ஏற்பட அனைவரும் தடுக்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


