ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாலையை வாங்க வேண்டும் என்று சொல்ல பார்வதி இந்த வருஷம் நான் வாங்கிக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இது முன்னாடியே சொல்லி இருந்தா நான் ஒத்துக்கிட்டு இருப்பேனே இப்போ லாஸ்ட் மினிட்ல வந்து கேட்டா எப்படி என்று சொல்லுகிறார். மித்ராவுக்காக தான் இந்த முத்து மாலையை நான் வாங்க ஆசைப்படுகிறேன் அப்போதுதான் சீக்கிரம் மகேஷ்கும் மித்ராவுக்கும் கல்யாணம் ஆகும் என்று சொல்ல சூர்யாவும் நீங்க சொல்றது தான் சரி என்று சொல்லுகிறார். நான் சுரேகாவுக்காக வேண்டிக்கிட்டு வாங்க போறேன் அதையே நீ தடங்கள் சொல்ற என்று கேட்க பார்வதி சுரேகா செல்ல பொண்ணு அவளுக்கு நீ அடுத்தவாட்டி கூட வாங்கிக்கலாம் அந்த வருஷம் மகேஷ்காக நான் வாங்கிக்கிறேன் என்று சொல்லியும் சுந்தரவல்லி வாக்குவாதம் செய்கிறார். சுந்தர வள்ளியும் பார்வதியும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க ஊர் பெரியவர்கள் முத்து மாலையை ஏலம் விட முடிவெடுக்கின்றனர். உடனே சுந்தரவல்லி மற்றும் பார்வதி இருவரும் ஏலத்தை ஏத்தி அஞ்சு லட்சம் வரை எடுத்துச் செல்ல அருணாச்சலம் தடுத்து நிறுத்து திட்டுகிறார்.

உடனே ஊர் பெரியவர்கள் கலந்து பேசி சுந்தரவல்லி அம்மா பெயரையும் பார்வதி அம்மா பேரையும் சீட்டு எழுதிப்போட்டு யார் பெயர் வருகிறதோ அவங்களுக்கு முத்துமாலையே கொடுத்து விடலாம் என்று சொல்ல இருவர் பெயரை சீட்டு எழுதி போட்டு எடுக்க அதில் பார்வதியின் பெயர் வர முத்து மாலையை பார்வதியிடம் ஒப்படைக்கின்றனர். உடனே பார்வதியும் மாலையை வாங்கி மித்ராவுக்கு போட்டுவிட சுந்தரவல்லி கடுப்பாகிறார். குடும்பத்தினர் அனைவரும் வர கிரீடத்தை வைத்திருக்கும் நபர் திருவிழா முடிஞ்ச உடனே இந்த கிரீடத்தை இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து அம்மன் தலையில் வைக்கணும் என்று சொல்ல, பரமு இரண்டு குடும்பமும் ஒன்னா செய்யறதுதாம்மா நல்லது என்று சுந்தரவல்லி இடம் சொன்ன இங்க எல்லாமே முறையாவா நடக்குது என்று கோபப்பட பார்வதி இன்னுமா நீ அதை நினைச்சுகிட்டு இருக்க என்று கேட்க நீதான் நினைச்சது சாதிச்சிட்ட இல்ல என்று சொல்ல, இத்தனை வருஷமா நாங்க விட்டுக் கொடுத்து தானே உங்களுக்கு கிடைச்சிருக்கு என்று சொல்ல உடனே சுந்தரவல்லி கிரீடத்தை ஏதாவது ஒரு குடும்பம் தான் சாத்தா வேண்டும் ஒன்னு நாங்க இல்லன்னா அவங்க என்று சுந்தரவல்லி சொல்லி விடுகிறார்.

உடனே மற்றவர்கள் இப்படி சொன்னா என்ன பண்றது என்று சொல்ல பஞ்சாயத்தை கூட்டுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் பஞ்சாயத்தும் கூடுகிறது. இனிமே இந்த ரெண்டு குடும்பமும் சேர்ந்து வைக்கப் போறது கிடையாது யார் வைக்கணும்ன்றது மட்டும் சொல்லுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இப்போ என்ன இந்த முத்து மாலையை கொடுக்கணும் அவ்வளவுதானே என்று சொல்லி மகேஷ் மித்ராவை கழட்டி கொடுக்கச் சொல்ல பார்வதி வேண்டாம் என சொல்லுகிறார். எனக்காக யாரும் பிச்சை போட வேண்டாம் என்று சொல்ல அருணாச்சலமும் மகேஷும் அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். மீண்டும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டே இருக்கின்றனர். மகேஷ் மித்ராவுக்கு இருக்கிற மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் பிரச்சனை இருக்கிறதுனால தான் முத்து மாலையை கேட்டேன் என்று சொல்ல, வழக்கமா நடக்கிற விஷயத்தை விட்டுக் கொடுத்து நடக்கிற மாதிரி நீ சொன்ன இல்ல அதனாலதான் கிரீடம் வைக்கிறது யாராவது ஒருத்தரா பண்ணட்டும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே கபடி போட்டி வைத்து எந்தக் குடும்பம் ஜெயிக்கிறதோ அந்த குடும்ப கிரீடம் வைக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர். உடனே ராஜாங்கத்தின் தம்பி அப்போ ஊர் சார்பாக எங்களுடைய டீமும் கிரீடம் வைக்க விளையாடுமென்று சொல்ல சூர்யா எங்க ரெண்டு குடும்பமும் வேண்டாம் எந்த போட்டியும் வேண்டாம் ஊர் சார்பாக நீங்களே கிரீடம் வைங்க என்று சூர்யா சொல்ல ராஜாங்கத்தின் தம்பி நேர்மையா போட்டி வைங்கன்னு தான் சொல்றேன் என்று சொல்ல சூர்யாவும் மகேஷும் போட்டி வைக்க ஒப்புக்கொள்கின்றனர்.

மகேஷ் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா வந்து என்னாச்சு என கேட்கிறார். இங்கே ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று மகேஷ் சொல்லுகிறார். இத்தனை நாளா எங்க அம்மாவும் சுந்தரவல்லி ஆண்டியும் அவ்வளவு ஒத்துமையா இருந்தாங்க நடுவுல யாரோ ஏதோ கன்பியூஸ் பண்ணி இருக்காங்க என்று சொல்ல சூர்யா அது எங்க அம்மாவோட ஈகோ என்று சொல்ல எங்க அம்மாவுக்கும் ஈகோ இருக்கு ஆனா அதை யாரோ ட்ரிகர் பண்ணி இருக்காங்க என்று சொல்ல, அது யாரோ ஒண்ணா இருக்கட்டும் நம்ம ஒன்னா சேர்ந்து அவங்களை அழிப்போம் என்று சொல்ல, உடனே ஆனந்தி அதைவிட சுந்தரவல்லி அம்மாவுக்கும் பார்வதி அம்மாவையும் சமாதானம் படுத்தனும் என்று சொல்ல, முதலில் கபடி போட்டியில் மகேஷ் ஜெயிக்கணும் அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் டிரா பண்ணிட்டா ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்து வக்கிற மாதிரி ஆயிடும் என்று சொல்ல, நந்தினி அவங்க ரெண்டு பேரையும் முதல்ல ஒண்ணா பேச வச்சாலே சரியா போயிடும் என்று சொல்ல, நல்ல ஐடியா தான் என்று சொல்லி முடிவெடுத்து செல்கின்றனர். இதையெல்லாம் மறைந்து இருந்து கேட்ட ராஜாங்கம் அவங்களால கபடி போட்டியில் என்னை ஜெயிக்க முடியாது என்று சொல்லுகிறார். உடனே பரமு இவங்களை அவ்வளவு லேசுல எடை போடக்கூடாது நம்ம பிரிக்க வேண்டியது பெரியவர்கள் அல்ல அந்த வீட்டு வாரிசுங்களா தான் என்ன செய்யணுமோ அதை செஞ்சுடு என சொல்லி அனுப்பி விடுகிறார்.

அவர்கள் சொல்லியபடி அனைவரும் சாப்பிட வர பார்வதியும் சுந்தரவல்லியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர். ராஜாங்கம் அனைவரும் உட்கார்ந்த சாப்பிடுங்க என்று சொல்ல, வழக்கம்போல் மீண்டும் முத்து மாலை பிரச்சனையைப் பற்றி சுந்தரவள்ளியும் பார்வதியும் பேச உடனே ஆனந்தி சாப்பாட்டு விஷயத்தில் கோபத்தை காட்ட வேண்டாம் என்று சொல்ல, உடனே ஆனந்தியை அதட்டி என் கண்ணு முன்னாடி நிக்காத அவ்வளவுதான் என்று திட்டி விட்டு இருவரும் மாறி மாறி சண்டை போட இதெல்லாம் நல்லா இல்லை என்று அருணாச்சலம் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியிடம் சிலை செய்ய கொடுக்க வர உடனே பார்வதி எத்தனை வருஷமா எப்படி நடந்ததோ அப்படியே நடக்கட்டும் என்று சொல்ல அப்போ உன்னோட மருமக கிட்ட சொல்லி செய்ய சொல்லி என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் என் மருமக என்ன செல செய்ற குடும்பத்தில் இருந்தால் கூட்டிக்கிட்டு வந்து இருக்கேன் என்று கேட்கிறார். உடனே சூர்யா நீங்க எதுவா இருந்தாலும் அங்க பேசுங்க எங்க பேசாதீங்க என்று சொல்ல உடனே சூர்யா மற்றும் மகேஷ் இடையே வாக்குவாதம் வருகிறது.

எல்லாம் சரியாயிடும்னு நினைச்சா இப்படி ஆயிடுச்சே என்று ஆனந்தி நந்தினி இடம் சொல்ல சுந்தரவல்லி அம்மாவுக்கு கோபம்னா அது என் மேல தான் என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serials promo update 24-01-26
jothika lakshu

Recent Posts

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

2 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

19 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

19 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

20 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

21 hours ago

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…

21 hours ago