Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆனந்தி சொன்ன வார்த்தை, மகேஷ் விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ..!

moondru mudichu singappenne serial promo update 29-01-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் அனைவரும் எதிர்பார்த்த கபடி போட்டி நடக்க மகேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிறகு வீரா ரைடு வருகிறார். வீரா டீம் அதிக மதிப்பெண்களுடன் இருக்க மகேஷ் முத்துவை களம் இறக்குகிறார். சூர்யா வீரா டீமை ஆதரவு கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார். வீரா டீம் 7 புள்ளிகள் இருக்க,மகேஷ் டீம் 4 புள்ளிகளுடன் இருக்க சூர்யா வெறுப்பு ஏற்றுகிறார். மறுபக்கம் அன்பு எழுந்து உட்கார்ந்து கபடி போட்டி பற்றி கேட்ப ஆனந்தி அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். இன்னும் எவ்வளவு தண்ணி வேணாலும் கொடுக்கலாம் ஆனா இப்ப கொடுத்திருக்கிற மருந்து கொஞ்சம் கண் அசர மாதிரி இருக்கும் ஆனா அவர தூங்க விடக்கூடாது என்று சொல்ல ஆனந்தி நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மீண்டும் கபடி தொடங்கி வீர அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அன்புவிற்கு தூக்கம் வருவது போல இருக்க ஆனந்தி நான் பேசுவதற்கு பதில் சொல்லிக்கிட்டே இருங்க என்று பதறிப் போகிறார்.

பார்வதி மகேஷை கூப்பிட்டு என்னாச்சு மகேஷ் ஆரம்பத்துல நல்லா தானே விளையாடிகிட்டு இருந்த என்று கேட்க அவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, சூர்யாவும் அவர்களது குடும்பத்தினரும் மகேஷை கிண்டல் அடித்து பேசுகின்றனர். அதற்கு மகேஷ் நேரடியா மோத முடியாதவங்க தான் டம்மி கண்டிப்பா அன்பு வருவான் என்று சொல்ல அப்ப அன்பு இல்லன்னா உங்க டீம் டம்மின்னு ஒத்துக்கோங்க என்று சொல்லுகிறார். உடனே ராஜாங்கம் வழக்கம்போல் ஏத்தி விட பார்வதியும் சுந்தரவள்ளியும் மாறி மாறி பேசிக்கொள்ள அருணாச்சலம் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல சூர்யா நீதா வீரா ஜெயிக்கணும் என்று சொல்லி கத்துகிறார். மறுபக்கம் ஆனந்தி அன்புவை பார்த்துக் கொள்ள நந்தினி ஆனந்திக்கு போன் போட்டு முதலில் அன்புவை பற்றி விசாரித்துவிட்டு மகேஷ் சார் டீம் கம்மியான பாயிண்டில் இருப்பதாக சொல்ல, ஸ்பீக்கரில் அன்பு நந்தினியிடம் பேசுகிறார். நீங்க மகேஷ் சாருக்கு போன் பண்ணி பேசுங்க அவர் கொஞ்சம் தெம்பா இருப்பாரு என்று சொல்ல அன்பு சரியென சொல்லி மகேஷ் சாருக்கு போன் பண்ண சொல்லி டீமுக்குள்ள ரெண்டு சண்டை போட்டு இருக்கிறவங்களை தூக்கிட்டு சப்சியிட்டு உள்ள எடுத்துட்டு எதிர் டீம்ல யாரு வெயிட்னு தோணுதோ அவங்கள முதல்ல அவுட் பண்ணீங்கன்னா மேட்ச் நம்ம பக்கம் வந்துரும் என்று சொன்ன மகேஷ் சரியான சொல்லுகிறார்.

இதனை மறைந்திருந்து கேட்ட ராஜாங்கமும் அவரது மனைவி பரமு நீ மகேஷ் பாத்துக்கோ அன்பு உயிரோடு இருக்கிற வரைக்கும் இது மாதிரி பிரச்சனை வரும் அவன் கதையை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். மீண்டும் கபடி போட்டி தொடங்கி மகேஷ் இரண்டு பாயிண்டுகளை வென்று அன்பு சொன்னது போல் இரண்டு சப்ஸ்யூட்களை உள்ளே கூப்பிடுகிறார். அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். மகேஷ் சிறப்பாக ஆடுவதை பார்த்து பரமு அவருக்கு மந்திரிச்ச மோரை கலந்து கொடுத்து விடுகிறார். மறுபக்கம் அன்புவை கொலை பண்ண இரண்டு ஆட்கள் வர ஆனந்தி அவர்களுடன் சண்டை போட்டு அன்புவை காப்பாற்ற போக ஒரு கட்டத்திற்கு மேல் அன்பு மயங்கி விழுந்து விடுகிறார் கபடி போட்டியில் மகேஷும் மயக்கம் வருவது போல சரியாக ஆட முடியாமல் தடுமாற, அவர்களது அணியினர் முடியலன்னா திரும்பி வந்துருங்க என்று சொல்லி விட்டார்கள்.

உடனே வீரா வந்து அனைவரையும் அவுட் ஆக்க மகேஷ் மயக்கத்துடன் ரைடு வருகிறார். மறுபக்கம் ரவுடிகள் ஆனந்தியை பிடித்து இழுத்து கொலை பண்ண வர அன்பு எழுந்து தடுத்து நிறுத்துகிறார். மகேஷை அனைவரும் பிடித்து விட அவர் கோட்டை தொடுவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வர அன்பு ரவுடிகளிடம் சண்டை போடுகிறார். மறுபக்கம் மகேஷ் கோட்டை தொட போராடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் கபடி ஆடும் இடத்துக்கு வந்து வைத்தியசாலையில் இவரை அடிக்க ஆள் வந்தாங்க என்று சொல்ல அடிக்க இல்ல கொள்ள என்று சொல்ல மகேஷ் சூர்யா குடும்பத்தை பார்த்து முறைக்கிறார். உடனே சூர்யா இந்த கிரவுண்ட்லயே உங்க ரெண்டு பேரையும் ஓட விடுறேன் என்று சொல்ல ஓட போறது நீங்களா இல்ல நானா என்று மகேஷ் சொல்லுகிறார் மறுபக்கம் நந்தினியும் ஆனந்தியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அதை பரமு கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்போது நந்தினி எதை எப்படி யோசிச்சு பார்த்தாலும் முடிவுல ராஜாங்கம், பரமு,வீரா இவங்க மூணு பேர்தான் வந்து நிற்கிறார்கள் என்று சொல்ல என்கிட்ட பதில் இருக்கு என்று ஆனந்தி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serial promo update 29-01-26
moondru mudichu singappenne serial promo update 29-01-26