தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் ஆனந்தி சூர்யா போல் வேஷம் போட்டு நந்தினியிடம் பேச, நந்தினி அப்போதும் தயங்கிக் கொண்டே இருக்க, நான் அவர்கிட்ட மனசுல இருக்கறத சொல்லி அவர் அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டார்னா என்னால தாங்க முடியாது என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்லைன்னு உனக்கு கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன் என்று ஆனந்தி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சூர்யாவும் பூஜையை முடித்து கிளம்ப கார் பென்சர் ஆகியிருக்கிறது. பெரிய வீட்டுக்கு போன் பண்ணி கார் எடுத்துட்டு வரலாம் என்று சொல்ல பரமு ரெடி பண்ண ஆள் நடந்தே போயிடலாம் என்று சொல்ல சூர்யாவும் சம்மதித்து அனைவரும் நடக்கின்றனர். நந்தினி கண்ணாடி முன் நின்று சூர்யாவுக்கு ப்ரொபோஸ் செய்து பார்த்து வெட்கப்படுகிறார். சூர்யாவும் பெரியவர்களும் பேசிக் கொண்டு வர அந்த நேரம் பார்த்து பரமு கரண்டை கட் பண்ணி விட இருட்டில் ராஜாங்கம் சூர்யாவை வாயை பொத்தி அழுத்தி மயக்கம் அடைய செய்து தூக்கிச் சென்று விடுகிறார். நந்தினி கரண்ட் கட் ஆனவுடன் முகம் மாற ஆனந்தி வந்து இதுக்கெல்லாம் அம்மா யோசிப்ப என்று சொல்லுகிறார். கரண்ட் வந்தவுடன் ஊர் பெரியவர்கள் சூர்யாவை தேடுகின்றனர். சரி ஆனந்தி நீ இப்போ டைம் ஆயிடுச்சு சூர்யா சார் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
உடனே பரமு ரெடி பண்ண ஆள் எந்நேரம் சூர்யா சார் வீட்டுக்கு போயிருப்பாரு என்று சொல்லி அவர்களையும் நம்ப வைத்து சரி காலையில இத அவங்க வீட்ல கொடுத்துடலாம் என்று சொல்லுகின்றனர். மறுபக்கம் சூர்யாவை பரமு காலடியில் படுக்க வைக்கின்றனர். இவனை என்ன பண்ணனும் என்று ராஜாங்கம் கேட்க தூக்கிட்டு வா சொல்றேன் என சொல்லி பரமு சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி என்ன சூர்யா சார் இன்னும் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்க கண்ணாடியை பார்த்தபோது நெற்றியில் குங்குமம் வைக்க போக அப்போது குங்குமம் தவறி விழ நந்தினி இன்னும் பயப்படுகிறார். இவனை எதுக்கு கட்டிப்போட்டுகிட்டு என்கிட்ட கொடு கொன்னுடுவேன் என்று சொல்ல பரமு தடுக்கிறார். நான் பட்ட அசிங்கம் அவமானத்துக்கு இவன் உயிர் தான் கரெக்ட் என்று சொல்லுகிறார். அவசரப்பட வேணாம் நம்மளுக்கு இருக்கிறது இரண்டு வழி தான் அதில் ஒன்று இவனை சாகடிக்கிறது ஆனா உடனே செய்யக்கூடாது இவனுக்கு மயக்கம் தெளிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணிதான் சாகடிக்கணும் என்று சொல்லுகிறார். அதைவிட இன்னொரு வழி இருக்கு என்று சொல்லி ராஜாங்கத்திடம் ஒரு விஷயத்தை சொல்லுகிறார். இவன் மேல கொலை பழி இருந்தா இந்த குடும்பம் கிரீடம் வைக்க முடியாது இவன தேடி அந்த குடும்பம் அலையனும் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் சுந்தரவல்லி மட்டும் யோசிக்க கூடாது என்று சொல்ல தெரியும் அந்த அன்பு ஆனந்தி மகேஷ் என்று சொல்ல சின்ன தடயம் கூட வராம நம்ம பார்த்துக்கணும் என்று சொல்லுகிறார். அந்த சுந்தரவல்லி பிரசிடெண்ட் பதவியிலிருந்து உள்ள தூக்கணுன்னு சொன்னா ஆனா அது மட்டும் நடக்கக்கூடாது என்று சொல்ல, இப்போதைக்கு அவங்களால எதுவும் பண்ண முடியாது எல்லாத்தையும் நான் தெளிவா செஞ்சுட்டு என்று சொல்ல, இப்போதைக்கு இவன் கண்ணு முழிக்கட்டும் என்று காத்துக் கொண்டிருக்க நந்தினி சூர்யாவுக்கு போன் போட ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. சூர்யா கண் விழித்து மயக்கத்தில் யார்ரா நீங்க எங்கடா கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று கேட்க அப்போ இன்னும் தெளிய வைப்போம் என்று சொல்லி தண்ணியை சூர்யா முகத்தில் ஊற்ற டேய் ராஜாங்கம் எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்தீங்க என்று சொல்ல உடனே அவரது ஆட்களை அடிக்கச் சொல்ல அவர்களும் சூர்யாவை மாறி மாறி அடிக்க சூர்யா வலி தாங்க முடியாமல் இருக்கிறார். நேரமாய் கொண்டே இருப்பதால் நந்தினி சுந்தரவல்லி இடம் சொல்ல முடிவெடுக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வெளியில் வருகிறார். அருணாச்சலத்திடம் விஷயத்தை சொல்ல இந்நேரம் பூஜை எப்பையோ முடிஞ்சிருக்கும் நான் தர்ம கர்த்தா அவருக்கு போன் பண்றேன்னு சொல்ல அவர் போன் எடுத்து கோவிலில் நடந்த விஷயத்தை சொல்லுகிறார்.
சூர்யா வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு என்று சொல்றாங்க என்று சொல்ல, நந்தினி பதற மறுபக்கம் சூர்யாவை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். அவரது ஆட்கள் அடித்தது போதாது என்று ராஜாங்கமும் பரமுவும் இரும்பு கம்பியால் மாறி மாறி சூர்யாவை அடித்து உடம்பு முழுக்க ரத்தத்தை வரவைத்தது இல்லாமல் வாயிலும் ரத்தம் வர மயங்கி விடுகிறார். மறுபக்கம் குடும்பத்தினர் கூடி விட, சுந்தரவல்லி நந்தினியிடம் கோபமாக நடந்து கொள்கிறார். அருணாச்சலம் நந்தினிக்கு ஆறுதல் சொல்ல மகேஷ் போன் போட அப்பவும் நாட் ரீச்சபிள் என வருகிறது. ராஜாங்கம் ஏதாவது பண்ணி இருப்பானா என்று அசோகன் சொல்ல நந்தினி அப்படியெல்லாம் ஒன்றும் ஆய் இருக்காது என்ற பதற, நான் குங்குமம் வச்ச போது கீழே தவறிவிட்டது அப்போது இருந்து எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஒன்று சொல்லி காப்பாற்றிக் கொடுங்கள் என்று சொல்ல ஆனந்தி ஆறுதல் சொல்ல, சுந்தரவல்லி கோபத்தில் டென்ஷன் ஆக இருக்க கதறுகிறார்.
என்னையே ஏன் பார்த்துக்கிட்டு இருக்கீங்க யாராவது எங்கையாவது போய் தேடுங்க என்று சொல்ல,அன்பு மகேஷும் நம்ம போய் தேடலாம் என்று கூப்பிட நந்தினி நானும் வரேன் என்று சொல்ல ஆனந்தியும் அருணாச்சலமும் நந்தினியை வேண்டாம் என சொல்லிவிட்டு அருணாச்சலம் மகேஷ் அன்பு மூவரும் கிளம்புகின்றனர். சூர்யா சாருக்கு என்ன ஆயிருக்கும் என்று நந்தினி அழ, ஆனந்தி ஆறுதல் சொல்லுகிறார். மறுநாள் காலையில் குப்பை கிடக்கும் இடங்களில் ஒரு சாக்குபை ரத்தக்கரைகளுடன் இருக்கிறது அங்கே குப்பையை கிளற வந்த நபர் அதைப் பார்த்துவிட்டு பதறி அடித்து ஓடி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு அந்த இடத்துக்கு வர ராஜாங்கமும் பரமும் இருக்கின்றனர் அப்போது ஆனந்தி இவங்க தம்பி எத்தனை பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்திருக்கான்னு அதுல யாராவது இப்படி பண்ணி இருக்கலாம் என்று சொல்லுகிறார். சூர்யா சரிவர அடிச்சது உண்மைதான் ஆனால் அதுக்கப்புறம் அவரே காணாமல் போயிட்டாரு என்று நந்தினி அழுது கொண்டு சொல்ல நீங்க கம்ப்ளைன்ட் கொடுக்கறீங்களா என்று பரமு விதம் கேட்க போலீஸ் இடம் நான் இந்த பெரிய குடும்பத்து மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


