பரமு சதியில் சிக்கிய சூர்யா..வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது

நேற்றையே எபிசோடில் நந்தினி பாத்ரூமுக்குள் செல்ல இதை கவனித்த வீரா யாரும் வராத நேரம் பார்த்து பாத்ரூமுக்குள் செல்கிறார். மறுபக்கம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நந்தினி நீங்க என்னடா பண்ற வெளியே போடா என்று சொல்லுகிறார். இங்க கபடி ஆடிடலாமா என்று நந்தினியின் புடவையை பிடித்து இழுக்க விடுடா என்று கத்துகிறார். தொடர்ந்து நன்னினியை விடாமல் இழுத்துக் கொண்டே இருக்க சந்தேகம் வந்த சூர்யா பாத்ரூம் பக்கத்தில் வந்து நந்தினி என வந்து கூப்பிட நந்தினி சத்தம் கேட்டு சூர்யா சார் என கத்த வீரா வாயை அடைத்து விடுகிறார். நந்தினி ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வந்து சூர்யாவை கட்டிப்பிடித்து அழ வீரா வெளியே வருவதைப் பார்த்து சூர்யா முறைக்கிறார். பிறகு சூர்யா வீராவை அடி வெளுத்து வாங்குகிறார். அவரை அடித்துக் கொண்டு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சூலத்தை எடுத்து குத்த போக அங்கு இருக்கும் மகேஷ் அன்பு என அனைவரும் தடுத்து நிறுத்துகின்றனர். வீரா எழுந்திருச்சு ஓடிவிட உன்ன சாவடிக்காம விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு சொல்கிறார். நந்தினி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஆனந்தி வந்து பேச நந்தினி கண்கலங்குகிறார். இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா நாளைக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கும் என்று சொல்லுகிறார்.

என்னால சுந்தரவல்லி அம்மா குடும்பத்தோட மானம் மரியாதை போயிடுச்சுல்ல என்று சொல்ல, என்னால வேணும்னா அன்பு குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் அசிங்கம்னு சொல்லலாம் சூர்யா சார் உன் கூட இருக்கிற வரைக்கும் கவலைப்படாதே என்று ஆனந்தி சொல்லுகிறார். நந்தினி ஆனந்தியிடம் இந்த உலகத்துக்காக நீ வாழ வேண்டாம் உன்னோட அன்புக்காக நீ இருந்தால் போதும் என்று ஆனந்திக்கு ஆறுதல் சொல்லுகிறார். திருவிழா முடியறதுக்குள்ள சூர்யா சாருக்கு உன்மேல இருக்கிற அன்பை காற்றேன் என்று சொல்ல, நானும் சொல்றேன் அவருக்கு என்மேல இருக்கிறது வெறும் அனுதாபம் தான் என்று சொல்லுகிறார். கண்டிப்பா சூர்யா சார் மனசுல நீ இருக்க நீ தான் முயற்சி பண்ணி உன் மனசுல இருப்பது அவர் கிட்ட சொல்லணும், சரி சூர்யா சார் மனசுல நீ இருக்கிறதும் இல்லாததும் அப்புறம் முதல்ல உன் மனசுல இருக்குற விஷயத்தை நீ சொல்லியே ஆகணும் என்று சொல்ல நந்தினி யோசிக்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி குடும்பத்தினர் மற்றும் பார்வதி குடும்பத்தினர் கோபமாக நாட்டாமையுடம் பேச நந்தினியும் ஆனந்தியும் கேட்கின்றனர்.

உங்க வீட்டு பொண்ணுக்கு இது மாதிரி நடந்தது தான் நாங்களே திகைத்து போய் இருக்கும். இப்போ இதுக்கு என்ன தான் தீர்வு நீங்க அந்த ராஜாங்கம் குடும்பத்தை என்ன பண்ண போறீங்க என்று கேட்க நாங்க அவங்க வீட்ல போய் பேச போனோம் ஆனா அவங்க வீடு பூட்டி இருக்கு என்று நாட்டாமை சொல்லுகிறார். அவன் எங்க இருக்கான் என்று யாருக்குமே தெரியல என்று சொல்ல, சூர்யா என் பொண்டாட்டி மேல கை வச்சவனை இவங்க தடுக்காம இருந்தா இந்நேரம் கொன்னுருப்பேன் என்று சொல்ல, ஆனந்தி நந்தினியிடம் இதுவும் அனுதாபம்தான்னு சொல்றியா என்று கேட்கிறார். எல்லாத்தையும் தாண்டி சூர்யா சார்கிட்ட இருந்து ஒரு காதல் தெரியுது அது உன் மேல தான் என்று சொல்ல சுந்தரவல்லி இது மாதிரி நடந்தா பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிறார். திருவிழா முடிச்சிட்டு அவனை பார்த்துக்கலாம் என்று நாட்டாமை சொல்ல எல்லைச்சாமி கோவிலில் பூஜை இருக்கு நீங்கதான் சூர்யா தம்பி வந்து செய்யணும் என்று சொல்ல சூர்யா மகேஷ் பண்ணட்டும் என்று சொல்ல மித்ராவும் மகேஷும் கரெக்ட் என்று சொல்லுகின்றனர்.

அண்ணாமலை சூர்யா கூட மகேஷ் மற்றும் அன்பு வரட்டும் என்று சொல்ல அப்போ வீட்டில் இருப்பவர்களை யார் பார்க்கிறது என்று கேட்க சூர்யா மகேஷ் வீட்ல இருக்கட்டும் என்று சொல்ல அப்போ நான் சூர்யா கூட வரேன் என்று அன்பு சொல்ல நாங்க பாத்துக்குறோம் என்று நாட்டாமை சொல்லுகின்றன. உடனே சூர்யா நாட்டாமை மற்றும் ஊர் பெரியவர்களுடன் கிளம்புகிறார். ஆனந்தி இதுதான் சமயம் போய் சொல்லு என்று சொல்லிவிட்டு ஓடிவிட நந்தினியும் சூர்யாவை கூப்பிடுகிறார். தயங்கிக் கொண்டே இருக்க என்னாச்சு நந்தினி என்று கேட்க ஒன்னும் இல்ல நீங்க பத்திரமா போயிட்டு வாங்க என்று சொல்லிவிட ஆனந்தி வந்து எதுக்கு நந்தினி இப்படி சொதப்பிட்ட என்று கேட்கிறார். சரி இதுக்குன்னு என்னோட சந்தர்ப்பம் கிடைக்கும் வா போகலாம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் எல்லைச்சாமி கோவிலுக்கு வந்த சூர்யா பூஜைக்கு ரெடி ஆகிறார். ஆனந்தி நந்தினியை அழகாக தயார்படுத்தி சூர்யா சார் என்ன பாத்து மயங்கி நிக்கும்போது பட்டுனு பேசிடு என்று சொல்லுகிறார். மறுபக்கம் ராஜாங்கம் அழுது கொண்டிருக்க பரமு வந்து நம்ம அனுபவிக்கிற வலியை அவங்களுக்கு கொடுக்கணும் என்று சொல்லுகிறார். உன்னால முடியலன்னா விடு நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு நடக்கப் போற விஷயத்தை நமக்கு சாதகமா மாத்த போறேன் என்று சொல்லுகிறார்.

இன்னைக்கு சூர்யா எல்லைச்சாமி கோவிலுக்கு பூஜைக்கு தனியா போயிருக்கான் அவனைத் தூக்கணும் என்று சொல்ல, அந்த சூர்யா சாதாரணமான ஆள் கிடையாது என்று சொல்ல, உனக்கு பயமா இருந்தா உன்னோட வச்சுக்கோ என்னோட ஆட்டத்தை பொறுத்திருந்து பார் என்று சொல்லுகிறார். அப்போதுதான் நாட்டாமை மற்றும் ஊர் பெரியவர்களில் ஒருவர் பரமு ஆள் என தெரிய வருகிறது. உடனே அவரிடம் நீங்க வந்த கார்ல திரும்பி போகக்கூடாது அந்த கார் ஓட டயர் காத்த இறக்கிடுங்க சூர்யாவுடன் மூச்சு காத்த இறக்குவதை நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லி போனை வைக்க அவரும் அதே போல் செய்கிறார். பூஜையும் சூர்யா செய்து முடிக்க அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். நந்தினி சூர்யாவுக்கு போன் போட்டு பூஜை முடிஞ்சிடுச்சா என்று கேட்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்லுகிறார். சரின்னு சொல்ல வந்ததை சொல்லு என்று ஆனந்தி சொல்ல நந்தினி மீண்டும் தயங்குகிறார். என்ன புதுசா இருக்கு நீ இப்படி கால் பண்ண மாட்டியே என்று கேட்க நான் உங்ககிட்ட நான் ஒரு புது புடவை கட்டி இருக்கேன் நீங்க நல்லாருக்கான சொல்லணும் என்று சொல்ல அதற்கு ஒன் ஹவர் ஆகும் என்று சொல்ல நான் வெயிட் பண்றேன் வாங்க என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ஆனந்தி இப்படியே பண்ணா நீங்க சொல்ல மாட்டீங்க இருங்க வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யாவும் நல்லபடியாக பூஜையை முடிக்கிறார்.

மறுபக்கம் நந்தினி யோசித்துக்கொண்டிருக்க, ஆனந்தி சூர்யா கெட்டப்பில் வந்து நிற்க நந்தினி எதற்காக இப்படி வந்திருக்க என்று கேட்கிறார். இப்போ நான் தான் சூர்யா சார் நீதான் நந்தினி இப்போ நீ உன் மனசுல இருக்குறத என்கிட்ட சொல்லு என்று ஆனந்தி சூர்யா வாய்ஸ் இல் பேசுகிறார். நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்று நந்தினி தயங்க, ஆனந்தி சூர்யா வாய்ஸில் என்கிட்ட சொன்ன என்ன தயக்கம் சொல்லு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் நடந்து வந்து கொண்டிருக்க பரமு பீஸ் கேரியர் புடுங்கி விடுகிறார்கள் உடனே ராஜாங்கம் வந்து சூர்யாவின் வாயில் துணியை வைத்து மயக்கம் அடையச் செய்து தூக்கி விட்டு சென்று விடுகின்றனர். என்னாச்சு திடீர்னு கரண்ட் கட் ஆயிடுச்சு என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serial promo update 05-02-26
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago