முத்து சொன்ன வார்த்தை, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

ரோகினி போடும் திட்டத்தில் மனோஜ் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவியிடம் மன்னிப்பு கேட்க அவரும் அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கல என்று சொல்லி சமாதானமாக ரவி முத்துவை கட்டிப்பிடிக்கும் போது பேக்கில் இருந்து பாட்டில் சத்தம் கேட்கிறது. உடனே ரவி மற்றும் முத்துவின் முகம் மாற மீனா கவனித்து விடுகிறார் உடனே நம்ம மேல போலாமா என்று சொல்ல மனோஜ் வந்து விடுகிறார் மேல எல்லாம் வேணாம் எங்க ரூமுக்கே போகலாம் என்று பலகை வாங்கிக் கொண்டு சென்றுவிட ரவியும் சென்று விடுகிறார் உடனே முத்து மீனாவை சமாதானப்படுத்தி அவங்களுக்கு மனசு சரியில்ல அதனால கூப்பிடுறாங்க போகட்டுமா என்று கேட்க மனசு சரியில்லனா குடிக்கணுமா குடிக்காம கூட பேசலாமே என்று சொல்லுகிறார் ஒரு வழியாக மீனாவை சமாளித்து விட்டு முத்து வந்துவிடுகிறார். ரவி முத்துவை குடிக்க சொல்ல எனக்கு வேண்டாம் நீங்க குடிங்க நான் சும்மா இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே ரவி நீ குடிக்கறதுனால அன்னிக்கு பிரச்சினைனா நீ எழுந்து போ பரவாயில்ல எங்களால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம் என்று சொல்லுகிறார்.

அப்படியெல்லாம் இல்லடா என்று சொல்லிவிட்டு இப்பொழுது என்ன குடிக்கணும் அவ்வளவு தானே என்று சொல்லி முத்து குடிக்கிறார் பிறகு மூவரும் குடித்துக்கொண்டே இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கேன் என்று ரவியிடம் கேட்க என் மாமனார் ஒரு லூசு அவர் பண்ண விஷயத்தைனால இப்போ எனக்கும் ஸ்ருதிக்கும் பிரச்சினை பெருசாயிட்டு இருக்கு அவனும் புரிஞ்சுக்க மாட்டேங்குற என்று சொல்ல மறுபக்கம் மனோஜ் என் பிரச்சனையும் என்ன பண்றதுன்னு தெரியல அவ ஒரு மாதிரி பேசுற பயங்கர மாதிரி என்று சொல்ல உடனே முத்து ஓ பார்லர் இந்த ரூட்ல வேற போகுதா என்று முத்து சொல்லுகிறார். சரிடா ஏதாவது பேசி பார்லர் அம்மா உன்கிட்ட இருந்து பெரிய விடாம பண்ணனும் என்று முத்து சொல்லுகிறார். மறுநாள் காலையில் முத்து வெளியில் வந்து வெயிட் பண்ணிக் கொண்டிருக்க ரவி பைக்கில் வருகிறார் என்னாச்சுடா எதுக்கு என நிக்க சொன்ன என்று முத்து கேட்க நான் ஒரு ஸ்பெஷல் டிஷ் பண்ண அண்ணி கிட்ட கேட்டா நீ கிளம்பிட்டேன்னு சொன்னாங்க அதனாலதான் அங்கே இருக்க சொன்னேன் என்று சொல்லி அதை கொடுக்கிறார்.

என்னடா இதெல்லாம் புதுசா இருக்கு என்று கேட்க என் மாமனார் பண்ண முட்டாள்தனத்தினால் நான் உன் மேல சந்தேகப்பட்டுட்டேன் எப்பவுமே நான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது கிடையாது மன்னிச்சிடுடா என்று சொல்ல நீ எத்தனை வாட்டி தான் மன்னிப்பு கேட்பேன் அதெல்லாம் மனசுலையே வச்சுக்கல மனோஜ் ஒரு அண்ணனா இருந்தாலும் அவ என்னைக்குமே ஒரு அண்ணனா இருந்தது கிடையாது ஆனா நீ என்னை என்னைக்குமே விட்டுக் கொடுத்தது கிடையாது அப்பாவுக்கு அப்புறம் என்ன நம்புற ஆள்னா நீ தான் ஆனா திடீர்னு அப்படி சொல்லும் போது தான் மனசு கொஞ்சம் வலிக்குது என்று சொல்ல உடனே ரவி மீண்டும் மன்னிப்பு கேட்கிறார் சரி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அடுத்த பிறவில அண்ணன் தம்பியா பிறப்பமான்னு தெரியாது ஆனா இருக்குற பிறவியில சந்தோஷமா வாழலாம் என்று முத்து சொல்லி ரவியை அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சந்தோஷ்போனுக்கு போன் போட்ட ஒரு நபர் உங்க ஷோரூம் ஓனர் பேரு என்ன என்று கேட்கிறார். உடனே மனோஜ் ஸ்பீக்கரில் போட சொல்ல நீ எதுக்காக பேர் கேக்குற என்று சொல்லுகிறார். அவரோட ஒய்ஃப் இப்போ ஷோரூம்ல இருக்க மாட்டாங்கதானே என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார்.

எப்படி இருப்பாங்க அவங்கதான் இங்க பார்க்ல இருக்காங்களே என்று சொல்ல, ஒருத்தர் கூட உட்கார்ந்து சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க ஒன்னும் சொல்லப்போனா படத்துல வர லவ் சீன் மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டு இதை மனோஜ் சார் கிட்ட சொல்லிடாதீங்க அவர் மனசு கஷ்டப்படுவாரு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார் உடனே ரோகிணி வந்து நான் சொன்ன மாதிரி பேசிட்டியா என்று சொல்ல பிறகு ரோகிணியின் திட்டம் என தெரிய வருகிறது. அந்த நபர் எதற்காக இப்படி பேச சொன்னீங்க என்று கேட்க என் மேல பாசம் இருந்தா கண்டிப்பா மனோஜ் என்ன வந்து பாப்பா என்று சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ் என்ன முடிவெடுக்கிறார்?சீதாவை வந்து மீனா சந்திக்க என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 05-02-26
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

7 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

7 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

7 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

8 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

8 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

9 hours ago