வன்மத்தோடு பேசிய ராஜாங்கம் சவால் விட்ட சூர்யா, மகேஷ் மூன்று முடிச்சு சிங்க பெண்ணே எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவும் மகேஷ் டீமும் எதிரதிராக மோத, மகேஷ் சூரியா டீமில் இருக்கும் ஒருவரை அவுடாக்கி வர சூர்யா டிமிலிருந்து அசோகன் ரைடுக்கு போக அங்க போய் டான்ஸ் ஆட அவர்கள் அசோகனை பிடித்து விடுகின்றனர். இதனால் ஸ்கோர் டிரா ஆகிறது. சூர்யா ரைடுக்குப் போக அன்பு மகேஷை தவிர அனைவரையும் அவுட் ஆக்கி விடுகிறார். அன்பு ரைடு வர அவரை அனைவரும் இழுத்துப் பிடிக்க ஒரு கட்டத்திற்கு மேல் அன்பு ஜெயித்து விட மேட்ச் டை ஆகிறது. இதனால் இரண்டு குடும்பமும் சேர்ந்து கிரீடம் வைக்கலாம் என்று சொல்ல சுந்தரவள்ளியும் பார்வதியும் மறுக்க உடனே சூர்யா ஒன் டூ ஐ ஒன் விளையாடுவது தான் கரெக்ட் என்று சொல்ல மகேஷ் மற்றும் சூர்யா இருவரும் ஒத்தைக்கு ஒத்த மோதுகின்றனர். விளையாட்டு உடனே இருவருக்கு இடையில் மோதலாக மாற ராஜாங்கமும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர்.நந்தினி அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி இடம் இந்த மேட்சை தடுத்து நிறுத்த சொல்லு ஆம்புலன்ஸில் பாம் வைத்த நபர் ராஜாங்கத்தை தனியாக சந்தித்து பேச வர நந்தினி ராஜாங்கத்திடம் அந்த நபர் பேசுவதை கவனித்து விடுகிறார்.

உடனே இவன்தான் பொய் தகவல் கொடுத்து இருக்கான் என்று சொல்ல இவர்கள் பேசுவதை நந்தினி வீடியோ எடுக்கிறார். பிறகு ராஜாங்கம் அவரது வாயாலே அனைத்து உண்மைகளையும் பரமுவிடம் சொல்கிறார். அதனை நந்தினி வீடியோ எடுத்து விடுகிறார். அந்த நந்தினியும் ஆனந்தியும் சும்மா இருக்க மாட்டாங்க நாங்க தான் கிரீடம் வைக்கணுன்னு அவங்களுக்கு தெரிஞ்சுடும் ஏற்கனவே எங்க மேல சந்தேகமா இருந்தாங்க இந்த நேரம் பார்த்து நீயும் வந்துட்ட என்று சொல்ல என்னோட பிள்ளைக்காக தான் வந்துட்டேன் என்று சொல்ல ராஜாங்கம் அவருக்கு பணத்தை கொடுத்து அனுப்பி வைத்த இந்த போட்டி சண்டையாக மாறுகிறது. உடனே நந்தினி வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி எதுக்காக இப்படி சண்டை போட்டு இருக்கீங்க இது எல்லாத்துக்கும் காரணம் ராஜாங்கமும் அவரது குடும்பமும் தான் என்று சொல்ல சூர்யா நந்தினியை வெளியில் போக சொல்லுகிறார் உடனே நந்தினி அந்த வீடியோவை எடுத்து காட்டுகிறார். குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியாக நந்தினி எல்லாத்துக்கும் காரணம் இந்த ராஜாங்கம் தான் என்று சொல்லுகிறார்.

ஊர்க்காரர்களும் குடும்பத்தினரும் ராஜாங்கத்திடம் நீ ஏன் இப்படி பண்ண என்று கேட்க உடனே ராஜாங்கமும் மற்றும் பரமு இருவரும் அவர்களது உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றனர். உடனே ஆனந்தி நம்ம வீட்ல நடந்த சின்ன பிரச்சனை முதற்கொண்டு பெரிய பிரச்சனை வரை எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான் என்று சொல்ல அன்பு நீயும் நந்தினியும் எவ்வளவோ சொல்லியும் நாங்க தான் கேட்கல என்று மகேஷ் சொல்ல, பார்வதி இப்பவே நினைச்சா கூட உன்ன போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம் என்று சொல்ல எங்களன்னா குடும்ப எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் என்று சொல்ல உடனே பஞ்சாயத்து ஆட்கள் உன்னை ஊரை விட்டு தள்ளி வைப்போம் என்று சொல்ல அதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் முதல்ல நீங்க பேசின மாதிரி ஜெயிச்சு காட்டுங்க என்று சொல்ல நாங்க என்ன சொன்னோம் என்று சொல்ல முதல்ல என் தம்பி டீம் கூட இவங்கள ஜெயிக்க சொல்லு என்று சொல்ல, ஆனந்தி சூர்யா சார் மகேஷ் சார் நீங்க ரெண்டு பேரும் இணைந்து அந்த டீமை தோற்கடித்து நீங்க ரெண்டு குடும்பமும் சேர்ந்து கிரீடத்தை வைக்கணும் என்று சொல்ல அன்பும் மகேஷும் தில்லை ராஜன் வாரிசு யாரு அருணாச்சலம் வாரிசு யாருன்னு நாளைக்கு காட்டுறோம் என்று சொல்லி சவால் விட்டு செல்கின்றனர்.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகி விடுகின்றனர். பிறகு சுந்தரவள்ளியின் கிராமத்து வீட்டுக்கு குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட அவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்காங்க என்று சொல்லி பேசுகின்றனர். பின் ஒருவருக்கொருவர் நாங்க தான் தப்பு பண்ணிட்டோம் என சொல்லுகின்றனர். எங்க எல்லாரையும் விட பாதிக்கப்பட்டது நீதான் அன்பு என்று சூர்யா சொல்லுகிறார். இவ அந்த சிலையை செய்யும்போது நான் கூடவே இருந்தேன். இவ அவ்வளவு ஆசையா அந்த சிலையை செஞ்சா அது உடைஞ்சதுனால தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சு என்று சொன்ன அன்பு மகேஷ் மேலையும் ரொம்ப பாசமா இருக்கா என்று சொல்லுகிறார். உடனே பார்வதி இனிமே அந்த ராஜாங்கம் டீமை தோற்கடித்து நம்ம ரெண்டு குடும்பம் தான் கிரீடத்தை சாத்தனும் என்று முடிவெடுக்கின்றனர். நீங்க எல்லாத்தையும் ஒன்னு மறந்துட்டீங்க ஆனந்திக்கு தாலி பிரிச்சி கோக்கணும் என்று நந்தினி சொல்ல சூர்யா ஆமா மறந்து போயிட்டோம் என்று சொல்ல அன்பும் ஆனந்தியும் இங்கே வேண்டாம் ஊரில் போய் பண்ணிக்கிறோம் என்று சொல்லுகின்றன.

எதுக்காக வேண்டாமென்று சொல்றீங்க எங்களால யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம் என்று சொல்ல, மறுபக்கம் அருணாச்சலமும் பார்வதியிடம் ஆனந்திக்கு தாலி பிரித்து போட்டு தான் ஆக வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மகேஷ் நாங்க தான் உங்க முடிவு தெரிஞ்சுக்காம இங்க கூட்டிட்டு வந்துட்டு என்று சொல்லி வருத்தப்பட அன்பு உடனே இப்ப என்ன தாலிப் பிரிச்சு போட்டிடலாம் என்று அன்பு சொல்ல மறுப்பக்கம் பார்வதியும் சரியென சம்மதிக்கிறார். இதனால் அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கட்டிப்பிடித்துக் கொள்கின்றன. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu singappenne serial promo update 01-02-16
jothika lakshu

Recent Posts

விஜய் குறித்து பேசி கைத்தட்டல்களால் அரங்கத்தை அதிர வைத்த நடிகை சுவாசிகா..!

விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

15 minutes ago

மனோஜை திட்டிய முத்து, ரோகினி போட்ட திட்டம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

41 minutes ago

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

17 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

19 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

20 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

20 hours ago