தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் அருணாச்சலம் என் மேல இருக்கிற நம்பிக்கை உனக்கு உடைஞ்சு இருக்கும் எனக்கு தெரியும் ஆனால் என் மருமகளா உன்னை இந்த வீட்டில தங்க வைக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரியல என்று சொல்லுகிறார். இருந்தாலும் பரவால்ல நந்தினி இவ்வளவு தூரம் வந்துட்டோம் உனக்கும் விஷயம் எல்லாம் தெரிஞ்சுச்சு இன்னொரு ஃபார்ம் வாங்குறேன். நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க என்று சொல்ல, நந்தினி இப்ப கூட நீங்க என்ன புரிஞ்சிக்கல, நான் இங்கே இருக்கிறதுக்கு என்ன பண்ணனுமோ அதை தான் நீங்க எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க இனிமே உங்க யாரையும் நம்புறதா இல்ல என்று அங்கிருந்து வெளியே வருகிறார். உடனே அருணாச்சலம் மற்றும் மற்றவர்கள் வந்து எல்லாமே உனக்காக தான் பண்றோம் புரிந்துகொள் நந்தினி என்று சொல்லுகிறார்.
பிறகு அருணாச்சலம் எல்லாமே என்னோட தப்பு தான் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று சொல்லி அங்கிருந்து அனைவரும் கிளம்புகின்றனர்.உடனே அர்ச்சனாவின் ஆல் போன் போட்டு நீங்க பிளான் பண்ண மாதிரி பக்காவா நடந்துடுச்சு என்று சொல்லுகிறார். அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி ரெஜிஸ்ட்ரேஷன் நின்ற விஷயத்தை சொல்லுகிறார். அர்ச்சனாவும் சந்தோஷப்பட்டு போனை வைக்கிறார்.
சூர்யா நந்தினி இடம் நீ டென்ஷனா பேசும்போது பத்ரகாளி மாதிரி இருந்தது என்று சொல்லுகிறார். மகாலட்சுமி மாறி இருந்துகிட்டு பத்ரகாளி மாதிரி முறைச்சா எப்படி என்று கேட்கிறார். சூர்யாவிடம் உங்களால எவ்வளவு சுயநலமா எப்படி இருக்க முடியுது என்று கேட்கிறார். என் வாழ்க்கையை கெடுத்தது மட்டுமில்லாமல் ரிஜிஸ்ட்ரேஷன் வரைக்கும் வந்திருக்கீங்க குற்ற உணர்ச்சியே இல்லாம சினிமாவுக்கு வந்த மாதிரி பண்றீங்க என்று சொல்லி கோபப்படுகிறார். இது மட்டும் இல்லாமல் நீங்க அந்த வீட்டில புருஷன் பொண்டாட்டியா நடிச்சா மட்டும் போதும்னுதான சொன்னீங்க ஆனா இப்ப எதுக்கு பதிவு பண்றீங்க என்று கேட்கிறார். அது நான் பண்ணல அப்பா தான் பண்ணாரு என்று சொல்ல உங்களுக்கு தெரிஞ்சு தானே பண்றீங்க என்று கேட்கிறார். சரக்கு பாட்டில ஒளிச்சு வச்ச போது பொண்டாட்டி மாதிரின்னு சொன்னீங்க இல்ல அதே மாதிரி, இவளும் என் பொண்டாட்டி மாதிரி தான் பதிவு பண்ண வேணாம்னு சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சூர்யா மறுபடியும் சொல்றேன் இதுக்கெல்லாம் காரணம் என்னோட அப்பா தான் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் போனில் நடந்த விஷயங்களை வாய்சோவர் செய்து விஜிக்கு அனுப்ப, விஜி கணவரிடம் என்னங்க இப்படி ஆயிடுச்சு என்ன கூட பொறந்த அக்காவா தான் பார்த்தா ஆனா இப்படி ஆயிடுச்சு நம்ம மேல கோவமா இருப்பாள என்று சொல்ல போன் பண்ணி பேசு என்று சொல்லுகிறார். விஜி போன் பண்ண நந்தினி கட் பண்ணுகிறார். இரண்டாவது முறை பண்ணியும் கட் பண்ண வீட்டுக்கு போய் பார்க்கலாமா என்று முடிவெடுக்க விஜி வேண்டாம் அங்க போனா சுந்தரவல்லி அம்மா கோபப்படுவாங்க என்று சொல்ல சரி அப்புறம் பாத்துக்கலாம் என்று பேசுகின்றனர். பிறகு மூவரும் அம்மா எப்படி அங்கு வந்தாங்க என்று யோசித்துக் கொண்டு வர, அம்மாவே வரலைன்னாலும் இந்த நந்தினி ஓகே சொல்லி இருக்க மாட்டா போல இருக்கு என்று பேசிக்கொண்டு வர மாதவி வீட்ல அம்மாவை எப்படிப்பா சமாளிக்கிறது என்று கேட்கிறார்.
அனைவரும் வீட்டிற்கு வந்த இறங்க சுந்தரவல்லி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். மூவரும் அம்மா என்ன சொல்லப் போறாங்களோன்னு பயமா இருக்கு என்று பயத்தில் நடுங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் அமைதியாக இருங்க எதுவும் பேச வேண்டாம் என்று அருணாச்சலம் கூப்பிடுகிறார். இது சுந்தரவல்லி வீடு தான் என்ன மீறி எதுவும் நடக்காதுன்னு நினைச்சா ஆனா நான் தனி மரம் தான் என்று நெத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க இல்ல என்று கேட்கிறார். முதலில் அருணாச்சலத்தை திட்டி விட்டு உடனே அசோகனிடம் வந்து, எவ்வளவு பாசம் காட்டுனீங்க செருப்பு எடுத்து வைக்கிறது என்ன ஏசி ஆன் பண்றது என்ன என்று சொல்லி கோபப்படுகிறார். சுந்தரவல்லி என்றால் கெத்துன்னு நினைச்சேன் ஆனா அப்படியெல்லாம் இல்ல கோமாளின்னு நிரூபிச்சிட்டீங்க இல்ல என்று சொல்லுகிறார். அப்படியெல்லாம் இல்லம்மா என்ற மாதிரி சொல்ல வேற எப்படி தங்கம் என்று சுந்தரவல்லி கேட்கிறார்.
சுரேகாவை பார்த்து நீ ஊம குசும்புன்னு தெரியும் ஆனா என்கிட்டயே காட்டுற பாத்தியா என்று திட்டுகிறார். நடந்தது கல்யாணமே கிடையாதுன்னு சொன்னா அதை ரிஜிஸ்டர் பண்றதுக்கு குடும்பமா போறீங்களா. பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் இல்ல என்று திட்டி விட்ட அருணாச்சலத்திடம் என்ன டீம் லீடர் பார்த்துகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்ல இனிமே பேசறதுக்கு எதுவும் இல்லை நீங்க எல்லாம் ஒரு கூட்டமாக இருந்துக்கோங்க நான் தனியாவே இருந்துக்கறேன். நீங்களும் எதுவும் பேசாதீங்க நானும் எதுவும் பேச மாட்டேன் என்று கோபமாக சென்று விடுகிறார். உடனே சூர்யா என்னப்பா இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சு என்று கேட்கிறார். நான் கவுண்டர் டயலாக் எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன் எல்லாம் வேஸ்ட்டா போச்சு என்று சொல்லுகிறார். நல்லவேளை அம்மா எதுவும் பெருசா காமிக்கலை என்று சுரேகா சொல்ல அவ கோபப்பட்டு இருந்தா கூட தெரிஞ்சிருக்காது இதுக்கு மேல தான் பிரச்சனையே இருக்கு என்று அருணாச்சலம் சொல்லுகிறார். சரி வாங்க எல்லாரும் உள்ள போலாம் என்று சூர்யா கேட்க நந்தினி நிறுத்தி நான் பேசணும் என்று சொல்லுகிறார்.
நந்தினி அருணாச்சலத்திடம் நீங்க இப்படி பண்ணுவிங்க என்று நினைக்கல நீங்க பண்ற எல்லா விஷயமும் என்னை எவ்வளவு பாதிக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? என்ன அனுப்பினாலும் அனுப்ப மாட்டீங்க இங்கே இருக்க வைக்க என்ன பண்ணனுமோ அதை எல்லாம் பண்றீங்க, அம்மா சொன்ன மாதிரி இங்க இருக்குற யார் மேல எனக்கும் நம்பிக்கை இல்லை நான் இங்க இருக்கிற வேலைக்காரியா இருந்துட்டு போயிடுறேன் தயவு செஞ்சு என்னை விட்ருங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
ரூமுக்கு வந்தா சூரியா ஜஸ்ட் மிஸ் நீ மட்டும் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு ஓகே சொல்லி இருந்தேனா வேற மாதிரி இருந்திருக்கும். இதுக்கே எங்க அம்மா மூஞ்சில அல்லு இல்லை. ரெஜிஸ்ட்ரேஷன் மட்டும் நடந்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும் என்று சொல்லுகிறார். நந்தினி எதுவும் சொல்லாமல் இருக்க சூர்யா தாய்குலம் பேசினதெல்லாம் பெருசா எடுத்துக்காத என்று சொல்லுகிறார். மறுபக்கம் விஜி நந்தினிக்கு போன் போடலாமா என்று கேட்க ஏற்கனவே பண்ணி எடுக்கல இப்ப மட்டும் எடுக்கவா போறா என்று சொல்ல ,சரி பண்ணி பாரு என்று சொல்லுகிறார். சூர்யா நந்தினி போன் வருது பாரு எடு என்று சொல்ல எடுக்காமல் இருக்கிறார் உடனே விஜி சூர்யாவிற்கு ஃபோன் போடுகிறார். சூர்யா போனை எடுத்து பேச நந்தினி கிட்ட பேசறதுக்காக பண்ண அவ எடுக்கல அதனால பேசுறதுக்காக பண்ணேன் என்று சொல்ல நந்தினி இடம் கொடுக்க சொல்லுகிறார். நந்தினி பேச மறுக்க என் மேல தான கோபம் பாவம் இல்ல விஜி கிட்ட பேசு என்று சொல்லி கையில் போனை கொடுக்கிறார். நந்தினி ஹலோ சொல்லுங்க அக்கா என்று சொல்லிய உடன் நான் உனக்கு நடந்ததெல்லாம் அப்புறமா சொல்றேன் நந்தினி, ஆனா உன்னோட நம்பிக்கையை உடைததற்கு என்ன மன்னிச்சிடு என்று சொல்ல நீங்களும் உங்க மேல இருந்தா நம்பிக்கையே ஒடச்சிடிங்க என்று சொல்ல விஜி கஷ்டப்படுகிறார். நந்தினி கண் கலங்கி பேச, விஜி எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நடந்ததை கல்யாணமாவே நான் நினைக்கல இதனால என் குடும்பமே பிரிஞ்சிடுச்சு என்று நந்தினி அருணாச்சலத்திடம் சொல்லுகிறார்.
அம்மாவால பிரச்சனை வராமல் இருந்தா போதும் அது உன் கையில தான் இருக்கு என்று சூர்யாவிடம் சொல்ல சிறப்பாக செஞ்சுருவோம் என்று சொல்லுகிறார். நந்தினி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல கண்டிப்பா தாலிப் பிரிச்சி கோக்குற பங்ஷன் நடக்கணும் என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 31-12-2024,moondru mudichu ,serial, promo update, 31-12-2024,அருணாச்சலம் ,அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு,மூன்று முடிச்சு, நந்தன் சி.முத்தையா,