தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சிங்காரம் வேலை பார்க்க மாடிக்குச் செல்ல, இதுல எப்படி களவாணி பசங்க வந்திருப்பாங்க என்று மாடியை சுத்தி பார்த்துவிட்டு வெயில் தாங்க முடியாமல் நிற்க, ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழுந்து விடுகிறார். சுந்தரவல்லி மாதவி இடம் அந்த கிழவன் மயக்கம் போட்டு விழுந்திருப்பான் மயக்கம் மட்டும் போட்டு இருக்கானா இல்ல செத்துட்டானா போய் பாரு என்று அனுப்ப மாதவி மேலே வந்து பார்த்துவிட்டு சுந்தரவல்லி இடம் சந்தோஷமாக சொல்ல பச்சை தண்ணி கூட குடிக்காம அப்படியே சாகட்டும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வர வெளிய வெயில் அதிகமா இருக்கு நந்தினியை மோர் எடுத்துட்டு வர சொல்ற குடிங்க என்று சொல்ல, எங்களுக்கு வேணாம் நீங்க குடிங்க என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து விஜி போன் போட்டு 50 பேருக்கு எக்ஸ்ட்ராவா சாம்பார் தேவைப்படுது அதற்கான பொருள் வாங்கிட்டு நீ வந்துரு நந்தினி என்று சொல்லிவிட்டு போனை வைக்க, நந்தினி அருணாச்சலத்திற்கு மோர் கொடுக்கிறார். உடனே சுரேகா மற்றும் அசோகன் இருவரும் மோர் கேட்க அவர்களுக்கும் கொடுக்கிறார். உடனே அருணாச்சலம் அப்பாவுக்கு குடுத்தியாம்மா அவருக்கும் எடுத்துக்கிட்டு போய் கொடு என்று சொல்ல நந்தினி மோருடன் வந்து மேலே பார்க்க சிங்காரம் மயங்கி கிடப்பதை பார்த்து பதறுகிறார். உடனே சூர்யாவும் வந்துவிட அவரைத் தூக்கிக் கொண்டு ரூமுக்கு வர அருணாச்சலம் பதறுகிறார். உடனே சூர்யா பெட்டில் படுக்க வைக்க நந்தினி மொட்டை மாடியில் டியூட்டி பார்த்ததினால் எப்படி ஆயிடுச்சு என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் டாக்டருக்கு போன் போடுகிறார். டாக்டர் சிங்காரத்தை செக் பண்ணி கொண்டு இருக்க மறுபக்கம் சுரேகா அந்த ஆளுக்கு வந்த வாழ்க பாருங்க நம்ம வீட்ல பெட்ரூம்ல படுத்து கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். வெயில்ல உடம்பு ரொம்ப டிஹைரேட் ஆயிருக்கு டிரிப்ஸ் போட்டோ சரியா போயிடும் என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பி விடுகிறார்.
அருணாச்சலம் நந்தினி இடம் நீ அப்பாவை பார்த்துகோமா நாங்க வெளியே போயிட்டு வரோம் என்று சொல்லி வெளியில் வந்த டாக்டரை அனுப்பி விட்டு சூர்யா அருணாச்சலத்திடம் என்ன மனுஷங்க டாடி இவங்கல்லாம் ஒரு வயசான வர மொட்டை மாடியில நிக்க வச்சு இருக்காங்க நந்தினி மட்டும் பாக்கலனா செத்துப் போய் இருப்பாரு டாடி என்று சொல்ல,செத்துப் போயிருந்தா மாலை வாங்கி போட வேண்டியதுதானே என்று சுந்தரவல்லி சொல்ல சூர்யா முறைத்துக்கொண்டே மாலை தானே வாங்கி போடுறேன்னு சொல்லிவிட்டு கோபமாக கீழே இறங்குகிறார். அருணாச்சலம் அவன் தான் பேசுறேன்னா நீ கொஞ்சம் அமைதியா இருக்க கூடாதா என்று கேட்கிறார். சூர்யா கீழே வந்த செக்யூரிட்டி ஆபீஸருக்கு போன் போட்டு நீங்க புதுசா வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டி அனுப்பி இருந்தீங்கல்ல ஆமா சார் சிங்காரம் என்று சொல்ல அவரா திடீர்னு மொட்டை மாடியில யாரு டியூட்டி பார்க்க சொன்னது என்று கேட்க மேடம் தான் சார் என்று சொல்கிறார் எந்த மேடம் என்று கேட்க சுந்தரவல்லி மேடம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி திருடனங்க வந்ததாகவும் அதனால மேல நிக்க சொல்லி இருந்தாங்க ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒன்னு சொல்றேன் நீங்க அதை பக்காவா செய்வீங்களா என்று கேட்கிறார்.சூர்யா அவரிடம் சில விஷயங்களை சொல்ல அவரும் செய்வதாக சொல்லிவிடுகிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு அவரிடம் ஒரு விஷயத்தை சொல்ல கண்டிப்பா செஞ்சு விடுகிறேன் என்று அவரும் சொல்லிவிட்டு சொல்கிறார்.
சிங்காரம் நின்று கொண்டிருக்க எதுக்குப்பா எழுந்த படுத்து இருக்கலாம் இல்ல என்று சொல்லி ஜூஸ் கொடுக்கிறார். உனக்கு கஷ்டம் கொடுக்கிறனாமா என்று கேட்க, இல்லப்பா நீ மேல போகும்போதே நான் வேணாம்னு சொல்லி இருக்கணும் என்று சொல்லுகிறார். அவங்க வேணும்னே அனுப்புன மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். இவங்க எதும் செய்யவும் தயங்க மாட்டாங்க என்று சிங்காரம் சொல்ல அப்போ எதுக்குப்பா இங்க நீ வந்த என்று கேட்க, மறுபடியும் இப்படியே பேசினா எப்படிமா என்று சொல்லுகிறார். அடுத்த வாரமும் டியூட்டி இங்கே போட்டாங்கன்னா நம்ம வேற வேலை பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். நம்மளுக்கு வேலை வருமானம் முக்கியம் தான் அதை விட சுயமரியாதையும் முக்கியம் என்று சொல்லுகிறார். சரிம்மா இங்க தான் எனக்கு வேலைன்னு சொன்னாங்கனா நான் வேலையே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன் என சொல்லி ஜூஸ் குடிக்கிறார். மறுபக்கம் 10 செக்யூரிட்டிக்கு மேல் வீட்டுக்குள் வர மாதவி இவ்வளவு பேர் எதற்கு வந்திருக்காங்க என்று யோசித்து சுந்தரவல்லி கூப்பிடுகிறார். குடும்பத்தினராக வரும் வெளியில் வந்து நிற்க சுந்தரவல்லி எதுக்கு வந்தீங்க என்று கேட்க வர சொன்னாங்க என்று சொல்ல யார் வர சொன்னாங்க என்று கேட்க, நான் தான் வர சொன்னேன் என சூர்யா வந்து நிற்கிறார்.
அருணாச்சலம் எதுக்கு வர சொன்ன என்று கேட்க காரணம் இருக்கு என்று சொல்லுகிறார். இவங்கள மாதிரி செக்யூரிட்டிய நம்ப எல்லா இடத்துலயும் பார்ப்போம் தியேட்டர் மால் என்று எல்லா இடத்திலும் இருப்பாங்க ஆனா இவங்கள பத்தி நம்ம தெரிஞ்சுக்கணும்னு நினைக்க மாட்டோம் அவங்க கஷ்டத்தை நம்ம புரிஞ்சுக்க மாட்டோம் எனக்கே புரிஞ்சது இல்லை. இன்னைக்கு உங்களோட கஷ்டத்தை நான் நேருக்கு நேராக பார்த்தேன். உங்கள மாதிரி இன்னைக்கு எங்க வீட்ல செக்யூரிட்டி வேலை பார்த்தவர் வெயில் முடியாமல் மயங்கி விழுந்துட்டாரு உங்களுக்கு மரியாதை கொடுக்க நினைச்சு தான் உங்கள வர சொன்ன என்று சொல்லி கல்யாணத்தை கூப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சிங்காரத்திற்கு மாலை அணிவித்து இவர் வேற யாரும் இல்லை என்னோட அருமையான மாமனார் என்று அனைவரும் முன்னிலையில் சொல்லுகிறார். அதெல்லாம் இந்த அவ வீட்டுக்கு வரும்போது அவமானப்படுத்தி துரத்தி அனுப்பி இருக்கனும் அவன் மூஞ்சிக்காக பார்த்தேன் பாரு அதுதான் என் தப்பு என்று சொல்லுகிறார்.
சூர்யா டாடி சொன்ன மாதிரி அவரு இருக்கட்டுமே என்று சொல்ல எதுக்கு சார் தேவை இல்லாம பிரச்சனை என்று நந்தினி கேட்க என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 22-05-25