தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா கோவிலுக்கு சென்று அங்கு வெளியில் உட்கார்ந்து இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்து எல்லோரும் என் பொண்டாட்டி நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க என்று சொல்லுகிறார்.மறுபக்கம் சுரேகா கல்யாணத்தை கன்னத்தில் அறைந்து நீ இந்த வீட்டுக்கு வேலை பாக்குறியா இல்ல நந்தினிக்கு வேலை பாக்கறியா என்று கேட்கிறார்.
பிறகு விஜியிடம் நந்தினி விடுங்கக்கா இப்படியும் சில பேர் இருக்காங்கன்னு நினைச்சுகிட்டு போக வேண்டியதுதான் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.