தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை எடுத்து நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் இந்த நந்தினி வேற குடிக்க விடமாட்டா ஏதாவது பண்ணனும் என்று நினைத்து சுடுதண்ணி பிளாஸ்கில் கலந்து விடுகிறார். கொஞ்ச நேரத்துல நந்தினி மாத்திரையை கொண்டு வந்து கொடுக்க, திரும்பவும் விதவிதமா மாத்திரை கொடுத்துகிட்டு இருக்க என்று சூர்யா சொல்லுகிறார். பச்ச தண்ணி வேணுமா சுடு தண்ணி வேணுமா என்று நந்தினி கேட்க எனக்கு எப்பவுமே ஹார்ட் தான் என சொல்லுகிறார். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன் என்று சொல்ல நந்தினி உடம்பு சரியில்லாத நேரத்துல யாராவது குடிப்பாங்களா என்று கேட்கிறார். பிறகு மாத்திரையை நந்தினி கொடுத்தவுடன் வாயில் போட்டுக் கொண்டு சாராயம் கலந்த தண்ணீரை குடிக்கிறார்.
முன்னாடி எல்லாம் குடும்பத்துல எவ்வளவு நிம்மதி சந்தோஷம் இருக்கும் எல்லாரும் வெளியே போவோம் ஆனா இப்போ சண்டை மட்டும்தான் நடக்குது என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உன்னோட குணம் இது கிடையாது சுந்தரவல்லி என்று சொல்ல பரவா இல்லையே என்னோட குணத்தை கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க ஆனா இங்க நடக்குற பிரச்சனையை மட்டும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறீங்க என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா வருகிறார். மேனேஜருக்கு போன் போட்டு என் பொண்டாட்டி வீட்ல இருக்கா கையெழுத்து போட வேண்டிய செக் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு லேட் பண்ணாம வீட்டுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். இதையெல்லாம் கவனிக்க நந்தினி சும்மா இருக்காரா பாருங்க ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்காரு என்று கல்யாணத்திடம் சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் மேனேஜரும் வந்துவிட செக் புக்குடன் சூர்யா நந்தினியை இழுத்து வருகிறார். நந்தினி நீங்களே கையெழுத்து போடுங்க என்று சொல்ல நீதான் மெயின் ஆள் என்று சொல்லுகிறார். இப்போ உன்னோட கையெழுத்தால எல்லாமே பெண்டிங்ல இருக்கு கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்ன மேனேஜர் என்று கேட்க ஆமாம் என்று மேனேஜரும் சொல்லுகிறார். சூர்யாவும் கட்டாயப்படுத்தி நந்தினி கையில் பெண்ணை கொடுக்க நந்தினியின் கையெழுத்து போட வர சுந்தரவல்லி கோபத்தில் செக்கை கிழித்து புடுங்கி விசிறி அடிக்கிறார்.
அருணாச்சலம் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க, நந்தினி மேல இருக்குற கோவத்தை பிசினஸ்ல எதுக்கு காட்டுற என்று கேட்க, இதுக்கு காரணம் என்னன்னு நான் சொல்லவா டாடி என்று கேட்க நான் தான் அன்னைலிருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் நந்தினியை கடத்தியதற்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொன்னேன நம்ப நீங்களா, அதனாலதான் நந்தினி வரமாட்டானு சந்தோஷமா கையெழுத்து போட்டாங்க இப்போ கிழிச்சு போடுறாங்க அவ்வளவுதான் என்று சொல்ல சுந்தரவல்லி அப்படியெல்லாம் எதுவும் கிடையாது நான் கையெழுத்து போடும் இடத்தில் இவள் போடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சுந்தரவல்லி கோபமாக நின்று கொண்டிருக்க அருணாச்சலம் வந்து உன் கோவத்தால பாதிக்கப்படுவது சூர்யாவும் நந்தினியோ கிடையாது கம்பெனியில் இருக்கிறவங்கதான் என்று சொல்லுகிறார்.
ஒரு கம்பெனியை உருவாக்குவது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும். பெயர் கெட்டு போச்சுன்னா அதை திருப்பி வர வைக்கிறது பெரிய விஷயம் என்று சொல்ல எனக்கு இந்த கம்பெனி இல்லனா வேற கம்பெனிய எனக்கு புதுசா உருவாக்க எனக்கு திறமை இருக்கு நான் கையெழுத்து போடுற இடத்துல அவ போடணுமா நாளைக்கு நான் உட்கார இடத்துல அவளை வந்து உட்கார வைப்பா யார எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும் என்று சொல்லுகிறார். சம்பளம் கொடுப்பது தள்ளி போனால் தொழிலாளிகளோட குடும்பம் நடுத்தெருவுக்கு தான் வரும் என்று சொல்ல என்ன வேணா நடக்கட்டும் இந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் நானா அவனான்னு பார்த்துக்கிறேன் நீங்க போங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா போனில் அதே மாதிரி நானா தாய்குலமான பாத்துடறேன் என சொல்ல நந்தினி வந்து அவங்களும் நானும் ஒன்னு கிடையாது நான் உங்க தோட்டத்துல வேலை செய்ற பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்காக உங்க வீட்ல இருக்கும்போது அந்த இடத்தில் நான் எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி செக்கில் நந்தினியை கையெழுத்து போட விடாததால் சூர்யா வீட்டை விற்க முடிவு செய்கிறார். வீடு விற்க முடிவெடுப்பதால் வீட்டை சேல்ஸ்க்கு வந்திருப்பதாக ஒருவர் வந்து பார்க்க சுந்தரவல்லி யார் சொன்னது என்று கோபப்படுகிறார்.
நான்தான் சொன்னேன் என சூர்யா வந்து சொல்ல யாருடைய சொத்தை யார் விற்கிறது என்று கேட்கிறார். எனக்கு தேவை பணம் வீடு வித்தாலும் சரி சைன் பண்ணாலும் சரி என்று சொல்ல சுந்தரவல்லி எல்லாம் முடிவெடுக்கப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
