Moondru Mudichu Serial Today Promo Update 12-07-15
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுரேகா சுந்தரவல்லி இடம் அவள கடத்துனது யாருன்னு தெரிஞ்சா இன்னும் பணம் கொடுத்து அவளை எங்கேயாவது அனுப்பி இருக்க சொல்லலாம் அவ்வளவு ஆத்திரம் வருது என்று சொல்லுகிறார். அருணாச்சலமும் கல்யாணமும் வெளியில் காத்துக் கொண்டிருக்க சூர்யா நந்தினி உடன் வருகிறார். அசோகன் இதை கவனித்து வந்து மாதவியிடம் சொல்லுகிறார். அருணாச்சலம் நீ நல்லா இருக்கில்லம்மா என்று சொல்ல நந்தினி நடந்த விஷயத்தை சொல்ல ஆரம்பிக்க எதுவும் சொல்ல வேண்டாம் நீ போய் ரெஸ்ட் எடுமா என்று சொல்லி உள்ளே அழைத்து வருகிறார். கல்யாணம் நீ வராம ரொம்ப பதறிப் போய்டம்மா என்று சொல்ல, நந்தினி அழுது கொண்டே ரொம்ப பசிக்குது அண்ணா சாப்பாடு தரீங்களா என்று கேட்க கல்யாணம் கண்கலங்கி கொண்டு சாப்பாடு போட வர நந்தினி சாப்பிடும் நேரத்தில் சுந்தரவல்லி கூப்பிடுகிறார்.
உடனே சுந்தரவல்லி அது எப்படி கடத்திட்டு 50 லட்சம் கொடுத்தவன் என்றால் கரெக்டா எடுத்துட்டு வந்து விட்டுட்டாங்களா உன் மூஞ்சி 500 ரூபாய்க்கு கூட வக்கு இல்லை என்று கோபப்படுகிறார். உடனே நந்தினி கண்கலங்கி அழ, இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னவ ஏன் போக மாட்டேங்குற நீ காணாமல் போயிட்டேன்னு சொன்ன உடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன் நீ எப்படி தொலைவ என்று கேட்க நந்தினி எங்கேயும் தொலைய மாட்டா இங்கதான் இருப்பா என்று சொல்லுகிறார். 50 லட்சம் இல்ல, இன்னும் அவளுக்கு நிறைய செய்வேன் என சூர்யா சொல்ல கோபத்தில் என்னுடைய இன்னொரு முகத்தை நீ பார்ப்பாய் என்று சுந்தரவல்லி கோபப்பட்டு பேசுகிறார்.
சூர்யா கல்யாணத்துடன் அவ ரெண்டு நாளா சாப்பிடல எவ்வளவு டயர்டா இருக்க அவளுக்கு சாப்பாடு கொடுக்க மாட்டியா என்று கேட்க கொடுத்தேன் அம்மா தான் என சொல்ல சுந்தரவல்லி மிரட்டுகிறார் உடனே போய் சாப்பாடு எடுத்துட்டு வா என்று சொல்லி நந்தினிக்கு ஊட்டி விடுகிறார். சூர்யா நந்தினி மேலே அழைத்து வந்து எந்த வேலையும் செய்ய வேண்டாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நீ ரொம்ப பயந்து போய் இருப்பேன் என்று சொல்ல ஆமா சார் ரொம்ப பயந்துட்டேன் யார் யாரோ என்னென்னமோ மிரட்டுறாங்க நம்ம தலைவிதி அவ்வளவுதான்னு நெனச்சேன் ரொம்ப நன்றி என்ன காப்பாத்துனதுக்கு என்று சொல்ல, நான் காப்பாத்தாம வேற யாரு காப்பாற்றுவாங்க என்று சொல்லி நந்தினியை உட்கார வைத்து நீ என் கூட என் வீட்ல இருக்க உன்னோட பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு என்ற சொல்லுகிறார். நல்லவங்களா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவங்களா இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு கருப்பன் போட்டோவை பார்த்து நீயாவது கொஞ்சம் புத்தி சொல்லுப்பா என்று சொல்லுகிறார்.
நான் உன்னை காப்பாற்றவில்லை நந்தினி உன் பிரண்டு கருப்பசாமி தான் காப்பாற்றினார் என்று போட்டோ முன் என்று சொல்லுகிறார். நந்தினி என்ன சார் சொல்றீங்க என்று கேட்க, நீ காணாமல் போன உடனே எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, நீ எப்படி கருப்பசாமி கிட்ட பேசுவியோ அதே மாதிரி நானும் முன்னாடி வந்து நின்னு நந்தினியை கண்டுபிடித்து கொடுக்கணும்னு வேண்டிகிட்டேன் என்று சொல்ல, அவரும் அதே மாதிரி மறுநாளே உன்னை கண்ணில் காமிச்சுட்டாரு ரொம்ப தேங்க்யூ ப்ரோ நீங்களும் இனிமேல் என்னோட பிரண்டு என சொல்லுகிறார். உடனே இனிமேல் நீ வெளியே போக வேண்டாம் அப்படி போனா ஆள கூட்டிட்டு போ என்று சொல்லி ரெஸ்ட் எடுக்க சொல்லுகிறார். பணம் வாங்காமல் நந்தினி எப்படி விட்டாங்க என்று மாதவி கேட்க, பணத்தை கொடுத்துட்டு இவங்களே நம்மகிட்ட மறைத்து இருப்பாங்க என்று சுரேகா சொல்லுகிறார்.
சூர்யாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு நந்தினி நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார். கண்டிப்பா அவ ஃபேமிலியோட தான் பிளான் பண்ணி இதை பண்ணி இருப்பா என்று சுரேகா சொல்ல சுந்தரவல்லி கோபப்பட்டு வெளியில் வந்து டெல்லிக்கு போன் போடுகிறார். அவளை கடத்தினது யார் என்று உனக்கு தெரிந்ததா என்று கேட்க இல்லை என்று சொன்னவுடன் நம்ம போட்ட பிளான் வேற ஒருத்தர் நடத்தி இருக்காங்க உங்க கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இருக்காங்க இந்த விஷயத்துல நான் இன்வால் ஆயிருக்கேன் கொஞ்சம் மாறினால் என் கழுத்துக்கு கத்தி வரும் அதனால முதல்ல அந்த கருப்பு ஆடு யாருன்னு கண்டுபிடிச்சு எனக்கு சொல்லு என்று சொல்லி போனை வைக்க டெல்லியும் யார் பண்ணி இருப்பா என்று யோசித்து விட்டு முதலில் கண்டுபிடிக்கணும் என நினைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்கு தெரியாமல் குடிக்கும் தண்ணீரில் சரக்கு கலந்து விடுகிறார்.சூர்யாவிற்கு நந்தினி மாத்திரை கொடுக்க என்ன நந்தினி எப்ப பாத்தாலும் கலர் கலரா ஏதாவது ஒரு மாத்திரை கொடுத்துகிட்டே இருக்கு என்று சொல்ல மாத்திரை கொடுத்ததெல்லாம் கை சரியாகும் சண்டை போட்டு திருப்பி ஒரு ரத்தம் கசியுது என்று சொல்லுகிறார்.
சரி நான் உங்களுக்கு தண்ணி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல வேண்டாம் நந்தினி இங்க இருக்குற தண்ணியே போதும் என்று சொல்ல எப்ப பார்த்தாலும் உங்களுக்கு குடி நெனப்பு தானா அதை ஒரு வாரத்துக்கு விட மாட்டீங்களா என்று சொல்ல குடிச்சா உடம்புக்கு நல்லது இல்லை என்ற இப்ப உடம்புக்கு நல்லா இல்லாத போது ஒரு வாரம் கழிச்சு குடிங்கன்னு சொல்ற ஒரு குடிகாரனை எப்போ நந்தினி நான் குடிக்கிறது என்று கேட்க சரி நீ போன மாத்திரை போட்டுக்கிறேன் என்று சொல்லி நந்தினி படுக்க போக சூர்யா அந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க போகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…