Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 07-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் தொழிலாளர்கள் சூர்யா பிக்சட் டெபாசிட் விஷயத்தையும் இந்த ஐடியாவை கொடுத்தது சின்ன முதலாளி அம்மா தான் என்ற விஷயத்தையும் அருணாச்சலத்திடம் சொல்ல அவர் நந்தினியை கூப்பிடுகிறார். நந்தினி வரும்போது தொழிலாளர்கள் அனைவரும் கையெடுத்து கும்பிட்டு மாலை மரியாதை செய்கின்றனர். இதனால் கடுப்பான சுந்தரவல்லி நந்தினி கழுத்தில் இருக்கும் மாலையை தூக்கி விசிறி எரிகிறார். உடனே என் வீட்டு பணத்தை எடுத்து இப்படி பண்ணி இருக்க, இவ என்ன பண்ணாலும் நீங்க அப்படியே ஒத்துப்பீங்களா நான் முதலாளி என்றால் அவ சின்ன அம்மாவா என்று தொழிலாளிகளை கோபப்பட்டு திட்டுகிறார். அவன் தான் கொடுத்தானா இவங்க வாங்கிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே இப்போ வீட்டுக்கு வந்து இதையெல்லாம் தேவையா என்று கோபப்படுகிறார்.

அதில் தொழிலாளி ஒருவர் உங்க அப்பா காலத்துல இருந்து நாங்க வேலை பார்த்துகிட்டு இருக்கோம் உங்களுக்கு அப்புறம் உங்க பையன் தானே எல்லாத்தையும் பாத்துக்கணும் அதுக்காக தான் இப்படி பண்ணும் என்று சொல்ல உடனே ஒருத்தரும் என்னோட முகத்துல முழிக்காதீங்க என்று சொல்லி திட்டி அனுப்பிவிட்டு கோபமாக ரூமுக்குள் வந்து உட்கார்ந்து விடுகிறார். மறுபக்கம் நந்தினி வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க கல்யாணம் வந்து இங்க எதுக்குமா உக்காந்துகிட்டு இருக்க என்று கேட்க சூர்யா சார் எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று தெரியல, எவ்வளவு சண்ட பாத்தீங்களா இதெல்லாம் தேவையா என்று நந்தினி கேட்கிறார். இது நம்மளோட முதலாளி அம்மாவுக்கு எவ்வளவு அவமரியாதையாய் இருக்கும் என்று கேட்கிறார். சுந்தரவல்லி இடம் அருணாச்சலம் அவங்க எல்லாம் யாரு நம்ம கம்பெனியோட எம்பிளாய் அவங்க முன்னாடி இப்படி பேசிக்கிட்டு இருக்க, இது உனக்கு அசிங்கமா தெரியலையா என்று கோபப்படுகிறார். அவங்களுக்கு நம்ம வீட்டுல நடக்கிறது எல்லாம் தெரியுமா அவங்கள அனுப்பிட்டு கூட பேசி இருக்கலாம் உனக்கு எதுக்கு இவ்வளவு ஆத்திரம் என்று கேட்ட ஆமாம் எனக்கு ஆத்திரம் தான் என் கண்ணு தெரியலையே அவளுக்கு மாலை மரியாதை பண்ணுவாங்க அதை பார்த்துகிட்டு நான் சும்மா இருக்கணுமா என்று கேட்கிறார்.

இது என்னோட சொத்து இது என்னோட பணம் யாரைக் கேட்டு என்னோட பணத்தை தூக்கி கொடுத்து இருக்கா என்று கேட்க ஏன்னா அவ இந்த வீட்டோட மருமக சூர்யா ஓட பொண்டாட்டி என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி கோபமாக பேசிக்கொண்டு இருப்பார் அவருடைய பிரண்டு போன் பண்ணி உன்னோட கம்பெனிக்கு பெஸ்ட் ப்ரொடக்ஷன் அவார்டு கிடைச்சிருக்கு கங்கிராட்ஸ் என்று சொல்ல சுந்தரவல்லிக்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறது முதல்ல போய் டிவி போட்டு பாரு என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து டிவி பார்க்கின்றனர். அப்போது சூர்யாவின் பேட்டி ஒளிபரப்பாகிறது. அப்போது இந்த வெற்றிக்கான காரணம் என்ன என்று ஆங்கர் கேட்க எல்லாருடைய வெற்றி பின்னாடி ஒரு பொண்ணு இருப்பாங்க என்று சொல்ல உடனே நானே சொல்றேன் உங்க அம்மா தானே என்று சொல்ல இல்ல, அவங்களோட வெற்றிக்கு பின்னாடி அருணாச்சலம் என்கிற என்னோட டாடி இருக்காரு ஆனா என்னோட வெற்றிக்கு பின்னாடி நந்தினி இருக்கா என்று சொல்ல அனைவரும் கடுப்பாகின்றனர்.

கல்யாணம் நந்தினி இடம் கேட்டுக்கோ என்று சொல்ல, அந்த ஆங்கர் நான் அவங்கள பத்தி கேள்விப்பட்டது இல்ல கொஞ்சம் சொல்றீங்களா என்று கேட்க சூர்யாவும் நந்தினி கிராமத்தில் இருந்து வந்த பொண்ணு அவ அதிகமா படிச்சதில்ல ஆனால் மெச்சூரிட்டியான பொண்ணு. நானே தப்பு பண்ணாலும் பேஸ் டூ பேஸ் சொல்லிடுவா என்று சொல்லுகிறார். இப்ப இருக்கிற சூர்யா நான் இல்ல இதுக்கு முன்னாடி என்னோட லைஃப்ல நடந்த விஷயங்களை வேற, இப்போ பிசினஸ் நல்லா பண்ணனும் அப்பதான் தொழிலாளர்களோட குடும்பம் நல்லா இருக்கும்னு யோசிக்க தோணுது என்று சொல்லுகிறார். உங்க மனைவியோட போட்டோ இருக்கா காட்டுங்க என்று சொல்ல சூர்யா, போனிலிருந்து நந்தினியின் போட்டோவை எடுத்துக்காட்ட சுந்தரவல்லி கடுப்பாகி சென்றுவிட, நந்தினி மயங்கி விழுந்து விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சூரியா உயிராக நினைக்கும் சட்டையை எடுத்து சுரேகாவிடம் கொடுத்து கிச்சனில் வைக்க சொல்ல நந்தினியும் அது வேஸ்ட் துணி என நினைத்து டேபிள் துடைக்கிறார் சூர்யா இதை கவனித்து துணியை வாங்கி பார்த்துவிட்டு யாரைக் கேட்டு இந்த துணியை எடுத்த என கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் சுந்தரவல்லி போட்ட திட்டம் நிறைவேறி விடுகிறது நந்தினி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்

moondru mudichu serial promo update 07-09-25