தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை ஸ்கூல் சேர்த்து விட சந்தோஷமாக இருவரும் பேசிக் கொள்கின்றனர். ரஞ்சிதாவிடம் நீ நல்லபடியா படிச்சு பேரு வாங்கணும் என சொல்லி அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட உட்கார அம்மாச்சி பரிமாறுகிறார் சிங்காரம் சோகமாக இருக்க என்னாச்சுப்பா என்று கேட்க அவங்க பக்கத்துல ஸ்கூல் இருந்துச்சு நடந்துட்டு போய் வந்துட்டா இப்போ எப்படி போயிட்டு வருவா என்று வருத்தப்படுகின்றனர். உடனே நந்தினி மற்றும் புனிதா அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை என்று சொல்லுகிறார். உனக்கு பயமா இருக்கா என்று ரஞ்சிதாவிடம் கேட்க நான் தான் அதிகமா மார்க் எடுத்ததுன்னு அவங்க தான் என்ன பார்த்து பயப்படனும் என்று சொல்ல,நீ நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கணும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு சூர்யா போன் போடுகிறார்.
என்ன பண்ற என்று கேட்க, ஸ்கூல் சேர்த்து விட்டுட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம் என்று சொல்ல அப்போ கருப்பசாமிக்கு பொங்கல் வச்சிட வேண்டியது தான் என்று கிண்டல் அடிக்கிறார் உடனே பொறுமையா சாப்பிட்டு சீக்கிரமா ரெடியாயிரு நான் வந்து கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார் நந்தினியும் சரியென சொல்லிப் போனை வைக்கிறார். மறுபக்கம் மாதவி டென்ஷன் ஆக இருக்க சுந்தரவல்லி என்ன விஷயம் என்று கேட்கிறார். எல்லா அவள நினைச்சு தான் அவ நினைக்கிறது தான் நடக்குது என்று சொல்ல அனைய போற விளக்கு பிரகாசமா தான் எரியும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். அவ்ளோ பெரிய ஸ்கூல்ல அவ தங்கச்சியை சேர்த்து விட்டிருக்காம்மா அவளுக்கு எப்படி அவங்க சீட்டு கிடைத்திருக்கும் என்று கேட்க அதுதான் அந்த வீட்ல ஒரு ஏமாளி இருக்காரே என்று கேட்க யார்மா என்று சொல்ல உங்க அப்பா தான் எல்லாத்தையும் செஞ்சிருப்பாரு. எத்தனை நாள் மறைக்க முடியும் எல்லாம் ஒரு நாள் வெளிய வந்து தான் ஆக வேண்டும், எது எது எப்ப செய்யணும்னு எனக்கு தெரியும் நீ போய் படு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் மினிஸ்டர் வேலை பார்த்துக் கொண்டிருக்க அர்ச்சனா குடித்துவிட்டு வந்து நீங்க எப்ப வந்தீங்க டாடி நான் மூணு வாட்டி வந்து உங்களை பார்த்தேன் என்று சொல்ல இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது என்று சொல்ல இவ்வளவு வேலையும் என் போன் எடுத்து பேசினீங்க ரொம்ப தேங்க்ஸ் டாடி என்று சொல்ல இன்னொரு ஸ்பெஷல் தேங்க்ஸ் டாடி நான் சொன்னேன் அதுக்காக நீங்க அந்த ஸ்கூல் சீட்டு வாங்கி கொடுத்திருக்கீங்க என்று சொல்ல மினிஸ்டர் இந்த ஒரு சீட்டை வச்சு நான் பல விஷயம் பண்ணி இருப்பேன் என்று சொல்ல அர்ச்சனா நான் மட்டும் சும்மா வாங்கல காரணத்தோட தான் வாங்கி இருக்கேன் என்று சொல்ல, நான் ரத்தினவேலோட பொண்ணுபா வேலைய முடிச்சுட்டு சொல்றேன் நீங்களே ஆச்சரியப்படுவீங்க நான் கிளம்புறேன் என சொல்லி தள்ளாடிக் கொண்டே ரூமுக்குச் செல்லுகிறார். சுந்தரவல்லி நந்தினியை கழுத்தை பிடித்து வெளியே தள்ள சிங்காரம் என் புள்ள எனக்கத்தி எழுகிறார். பிறகு கனவு என்று தெரிய வர கடவுளிடம் வேண்டிக் கொண்டு பதற்றத்துடன் தண்ணீர் குடிக்கிறார்.
உடனே நந்தினிக்கு போன் போட்டு பேசினா தான் நிம்மதியா இருக்கும் என்று சொல்லி போன் போடுகிறார். நந்தினி ஃபோனை எடுத்து என்னாச்சுப்பா இந்த நேரத்துல பண்ணி இருக்க ஏதாவது பிரச்சனையா சுதாகர் வந்துட்டானா கரண்ட் போயிடுச்சா என்று கேட்கிறார். சிங்காரம் கண் கலங்கி கொண்டு அங்க எதுவும் பிரச்சனை இல்லையேமா நல்லா தானே இருக்க என்று கேட்க, திடீர்னு நடுராத்திரியில போன் பண்ணி எதுக்கு நலம் விசாரிக்கிற என்று கேட்க ஒரு கெட்ட கனவுமா உனக்கு கெட்டது நடக்கிற மாதிரி தோணுச்சு அதுக்காக தான் போன் பண்ணேன் என சொல்லுகிறார். அது கனவு மாதிரியே இல்ல நிஜமா நடந்த மாதிரி இருக்கு என்று சொல்ல நீ என்ன நெனச்ச யோசிச்சுக்கிட்டு இருக்கிறதுனால தான் உனக்கு எப்படி இருக்கு என்று சொன்னேன் சரிம்மா மனசு கேக்காத தான் போன் பண்ண என்று சொல்ல நந்தினியும் ஆறுதல் சொல்லி போனை வைக்கிறார்.
மறுநாள் காலையில் மேனேஜர் வீட்டுக்கு வர சுந்தரவல்லி கணக்குகளை பார்த்துவிட்டு இரண்டு லட்சம் செக் பாஸ் ஆயிருக்கு என்று சொல்லுகிறார். அது எப்படி ஆகும் அம்மா தான் எல்லாமே கரெக்டா பாக்கறாங்களே என்று சொல்ல, வீடு வீடாகவே இல்லை எல்லாமே புதுசா இருக்கு என்று சுரேகா சொல்ல,புதுசு புதுசா ஆளுங்க இருக்கும்போது எல்லாமே புதுசு புதுசா நடக்குது என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து மேனேஜர் ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு என்று சொல்லி தயங்க, ரஞ்சிதா என்றவங்களுக்காக ரெண்டு லட்சம் ஸ்கூல்ல டொனேஷன் கொடுத்து இருக்கிறதா மெசேஜ் வந்திருக்கு என்று சொல்ல ஐயோ எனக்கு ஒன்னும் தெரியாது இதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல,சுந்தரவல்லி டென்ஷன் ஆகி திட்டுகிறார். இவளை பத்தி சொன்னா யாருனா கேக்குறீங்களா என்னை எவ்வளவு வாட்டி அசிங்கப்படுத்தி இருக்கீங்க என்று கோபப்பட நந்தினி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்க சுந்தரவல்லி கோபப்பட்டு திட்டுகிறார். உடனே அருணாச்சலம் நந்தினியை பார்க்க அப்படி பாக்காதீங்க ஐயா நான் தப்பு பண்ணிட்டேன் நீங்க நினைக்காதீங்க, உங்க நம்பிக்கைக்கு துரோகம் பண்ண மாட்டேன் உங்க மனசுல என்ன இருந்தாலும் கேட்டுருங்க, அமைதியா நிக்காதீங்க என்று சொல்ல அருணாச்சலம் நந்தினியிடம் செக் கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறார்.
நம்புங்க ஐயா நீங்களும் கைவிட்டுட்டீங்கன்னா நான் என்ன பண்ணுவேன் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற ஆள் நான் இல்லை என்று சொல்ல அருணாச்சலம் எதுவும் பேசாமல் நகர்ந்து செல்ல போக நந்தினி காலில் விழுந்து என்ன குற்றவாளி ஆகிட்டு நீங்க போய்டாதீங்க நீங்க எதுவும் சொல்லாம போனா என்ன திருடி என்று நினைச்சு விடுவாங்க என்று அழ, அருணாச்சலம் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார் இதனால் நந்தினி கதறி அழ, நனைக்கிறது என்னடி நினைக்கிறது உன்ன வேற என்ன சொல்லுவாங்க என்று கோபப்படுகிறார். இந்த வீட்டுக்கும் இந்த குடும்பத்துக்கும் நான் எந்த துரோகமும் பண்ணல என்று சொல்ல நீ பண்ணாம செக் எப்படி போச்சு என்று மாதவி கேட்கிறார். முதல்ல அந்த செக்கு இவகிட்ட எப்படி வந்ததுன்னு கேளுங்க என்று சுரேகா சொல்லுகிறார். உன்னோட விளக்கமே எனக்கு தேவையில்லை. போலீஸ்க்கு போன் பண்ற அவங்க வந்து விசாரிக்கிற விதத்துல விசாரிக்கட்டும் என்று சொல்ல , நான் ஸ்கூல்ல எந்த பணமும் கட்டளை என்று சொல்ல, காசு வாங்காம சேர்த்துக்கிறதுக்கு அது உங்க அப்பா வீட்டு ஸ்கூலா அது காசு இல்லாம சேர்த்துப்பாங்களா என்று சொல்ல அந்த பணத்தை நான் ஸ்கூல்ல கட்டளை என்று மீண்டும் சொல்ல அவர் உன்ன எவ்வளவு மரியாதை கொடுத்து தூக்கி வச்சு கொண்டாடினாரு என்று சுந்தரவல்லி சொல்ல நந்தினி கண்கலங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் இவங்கெல்லாம் என்ன வேணும்னாலும் நினைக்கட்டும் என் கோபம் எல்லாம் உங்க மேல தான் டாடி செக் எடுத்துட்டு போய் அவ தங்கச்சி படிப்புக்கு கொடுத்து இருப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா அவை எப்படிப்பட்ட ஆள் என்று உங்களுக்கு தெரியாதா நீங்க எப்படி டாடி அமைதியா போலாம் இவங்க எல்லாரும் சேர்ந்து செய்யாத தப்புக்கு நந்தினி மேல திருட்டுப்பழி சொன்னா, நீங்க நந்தினி அப்படிப்பட்ட பொண்ணு இல்ல அவள அடுத்தவங்க காசுக்கு ஒரு ரூபா கூட ஆசைப்பட மாட்டா என்று நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல டாடி, நீங்க சப்போர்ட் பண்ணி இருக்கலாம் இல்ல டாடி அப்ப நீங்களும் நந்தினி தப்பா நினைச்சுட்டீங்க இல்ல சொல்லுங்க டாடி என்று கோபமாக கேட்கிறார்.
என்ன டாடி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க அமைதியாவே இருக்கீங்க அப்ப நீங்களும் நந்தினி திருடினு நினைக்கிறீங்களா என்று சொல்ல, அருணாச்சலம் எதுவும் பேசாமல் இருக்க உடனே சுந்தரவல்லி என்னடா நானும் பார்த்துகிட்டு இருக்கேன் ஓவரா பேசிகிட்டு இருக்க அவ வந்த ஓடனே உன் காதுல ஓதிவிட்டுட்டாளா, அவ என்ன இங்கிலாந்து ராணியா அவளுக்கு ஓடிவந்து சப்போட்டுக்கு வர எல்லாம் எங்களுக்கு தெரியும் போய் படுடா என்று சொல்ல மரியாதை கெட்டுப் போயிடும் அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று உச்ச கட்ட கோபம் அடைகிறார் சூர்யா. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


