சுந்தரவல்லி செய்த வேலை, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் விஜி நந்தினி இடம் நீ இவ்வளவு பெரிய பாவத்தை பண்ண வச்சுட்ட என்று சொல்ல, அதுக்கு அவர் என்ன சொன்னார் என்று சொல்ல அவர் உடைஞ்சு போயிட்டாரு அப்போ இவ்வளவு நாள் எங்க வீட்ல இருக்கறவங்க சொன்னதெல்லாம் உண்மை தானா என்று கேட்கும்போது என் மனசாட்சி உறுத்துது இந்த பாவத்தை நான் எப்படி தீர்க்க போகிறேன் என்னை இந்த நிலைமைக்கு ஏன் ஆளாக்கன என்ற கதறி அழுகிறார். ஆனா உனக்கு ஒரு விஷயத்தை நான் சொல்றேன் அவங்க உன்னை என்ன சொன்னாலும் கழுத்தை புடிச்சு வெளியே தள்ளினாலும் நீ வீட்டை விட்டு போகாத சூர்யா அண்ணா எழுந்திருச்சு வந்து முதல்ல உன்ன தான் பாக்கணும் நான் என் அண்ணனை தொலைத்து விட்டேன். ஆனால் நீ சூர்யா சார் பக்கத்தில் தான் இருக்கணும் நீ ஜெயிக்கணும் எங்கேயும் போய்டாத இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சுந்தரவல்லி போலீசுக்கு போன் போட்டு அந்த பையனை விட்டு விடுங்கள் என்று சொல்லுகிறார் உடனே மாதவி நம்ம போட்ட பிளான் எல்லாமே கரெக்டா நடந்திருக்கு இவ்வளவு தூரம் நம்ம சொல்லியும் கேட்காத சூர்யா விஜி சொன்னவுடனே நம்பிட்டான் என்று சொல்ல அதற்கு சுரேகா அதுதான் அனுபவம்னு சொல்றது என்று சொல்லுகிறார் இதுக்கு அப்புறம் என்ன பண்றது என்று கேட்க அம்மாதான் சொல்லணும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அசோகன் வீட்டுக்கு வருகிறார் நீங்க சொன்ன மாதிரி எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சி என்று சொல்ல மாதவி அசோகனிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார் பிறகு நடந்த விஷயம் அனைத்தையும் மாதவி இடம் அசோகன் சொல்லுகிறார். சரி நடந்து விஷயத்தை விடுங்க இதுக்கப்புறம் என்ன பண்ணப் போறோம் என்று கேட்க இவ்வளவு நாளா சூர்யா நம்மள நம்பாம இருந்தா ஆனா இப்போ அவனுக்கு நம்ம மேல ஒரு கில்ட் வந்து இருக்கும் என்று சொல்லுகிறார். கல்யாணம் கீழே இருந்து இவர்கள் பேசுவதைக் கேட்க உடனே சுரேகா இப்போ அவளை இந்த வீட்டை விட்டு எப்படி துரத்துவது என்று கேட்க பஸ்ல ட்ரெயின்ல எல்லாம் ஏத்தி விடக்கூடாது நம்மளை கார்ல ஏத்தி எடுத்துட்டு போய் விடனும் என்று சொல்லுகிறார். உடனே அசோகன் டெல்லியில் இருந்து வரும் மாமாவை எப்படி சமாளிக்கிறது என்று கேட்கிறார்.

உடனே சுரேகா முதல்ல வந்த உடனே அவரு நந்தினிக்கு போன் பண்ணுவாரு அவன் எடுக்கலைன்னா குடும்பத்துக்கு போன் பண்ணுவாரு அப்படியும் இல்லனா நேர்ல போய் கூட்டிட்டு வந்துருவாரு என்று சொல்ல மாதவி அப்போ நம்ம இவ்வளவு நாள் செஞ்சது எல்லாமே வேஸ்டா என்று கேட்கிறார். நான் இப்போ ஊர்ல எடுத்துட்டு போய் விட போறான்னு யார் சொன்னது. இவ்வளவு திட்டம் போட்டு எடுத்து கிட்ட போய் ஊர்ல விடுவனா அவளை பைத்தியக்காரா ஹாஸ்பிடல்ல கூட்டி போய்விட்டு அங்கேயே புலம்ப வச்சுடுவேன் என்று சொல்ல கல்யாணம் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். சுரேகா இது சூப்பரான ஐடியா அம்மா சூர்யாவால இதை யோசித்து கூட பார்க்க முடியாது என்று சொல்லி சந்தோஷப்பட கல்யாணம் அடப்பாவிங்களா இந்த புள்ளையை கொடுமைப்படுத்த இப்படி திட்டம் போடுறீங்களே என்று சொல்லிவிட்டு நந்தினியிடம் பேச சொல்கிறார்.

சின்னையா மட்டும் நடந்துகிட்டு இருந்தா இது மாதிரி நடக்குமா இப்பதான் அவர் ஏன் இவங்கள எல்லாரும் திட்டிக்கிட்டு இருக்காருன்னு தெரியுது இது ஒன்னும் சின்ன திட்டம் மாதிரி தெரியல ஒட்டு மொத்தமா சேர்ந்து வெளிய அனுப்ப குடும்பமா திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அவங்க என்ன வீட்டை விட்டு தொரத்தினா கூட பரவால்ல அவர ஒரு வாட்டி பார்த்தால் மட்டும் போதும் என்று சொல்லுகிறார். நீ ஏமா இப்படி பேசுற அதுக்கு முன்னாடி பேசுன இல்ல சூர்யா சார் பொண்டாட்டியா என்று சொல்ல அதுக்கெல்லாம் இப்போ எனக்கு தெம்பு இல்லன்ன அவங்க என்ன கண்டிப்பா வெளியே அனுப்பிடுவாங்க அதுக்காக தான் இவ்வளவு பெரிய திட்டம் போட்டு இருக்காங்க சூர்யா சார் என்ன நன்றி கெட்டவளா நினைச்சிட கூடாது நான் ஒருவாட்டி அவர பார்த்துட்டா கூட போதும் என்று சொல்லுகிறார். கண்டிப்பா நீ நினைக்கிறது நடக்கும் என்று கல்யாணம் சொல்லுகிறார்.

மறுபக்கம் மாதவி நீங்க சொன்ன குடும்பம் எப்ப வரும் என்று சொல்ல வருவாங்க என்று சொல்லுகிறார். நீங்க சொன்ன மாதிரி அந்த ஊர்ல எடுத்துட்டு போய் அவளை விட்டுட்டு மட்டும் இல்லாம மொட்டையும் அடிச்சுடனும் அப்போதான் அடையாளம் தெரியாது என்று சுரேகா சொல்லுகிறார். உடனே மாதவி அவள் அனுப்புன கையோட இந்த கல்யாணத்தையும் கணக்க முடிச்சு அனுப்பிடனும் என்று சொல்ல சுந்தரவல்லி ஏன் என கேட்கிறார். நந்தினியை நம்ப தான் வீட்டை விட்டு அனுப்பனும்னு அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும் அவன் அப்பாகிட்டயும் சூர்யா கிட்டயும் விஷயத்தை சொல்லிட்டா அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவள்ளியும் அப்படியே பண்ணிடலாம் என்று சொல்லிவிட சுரேகா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எனக்கு புடிச்ச ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிட போறேன் என்று சொல்ல நீ எதுக்கு ஆர்டர் பண்ணனும் அந்த வேலைக்காரியை சமைக்க சொல்லலாம் என மாதிரி சொல்லுகிறார். எதற்கு என்று சுந்தரவல்லி கேட்க இன்னைக்கு ஃபுல்லா அவ்வளவு வேலை வாங்கிட்டு துரத்தி விடுவோம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர் உடனே சுரேகா கல்யாணம் மற்றும் நந்தினியை உள்ளே கூப்பிட என்ன ஏழ்றைய சொல்ல காத்து இருக்காங்களோ தெரியல என்று சொல்லி உள்ளே வருகின்றனர்.

பிறகு உள்ளே வந்தவுடன் போய் எல்லாருக்கும் சமைக்கணும் என்று சொல்ல நந்தினி என்னதான் சமைக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்களே என்று சொல்லுகிறார். இப்போ சொல்லிட்டாங்க இல்ல போய் சமை என்று சொல்லுகிறார். மாதவி எனக்கு இடியாப்பமும் தேங்காய் பாலும் தேவை என்று சொல்ல, சுந்தரவல்லி எனக்கு கடலைக்கரி,புட்டி அசோகா அல்வா வேண்டுமென சொல்லுகிறார். உடனே கல்யாணம் நைட் நேரம் என்று ஆரம்பிக்க அது எங்கள் இஷ்டம் நாங்க சாப்பிடுவோம் என சுரேகா சொல்ல உங்களுக்கு என்ன மாமா வேண்டும் என்று கேட்க எனக்கு மட்டன் கிரேவி ஃபிஷ் ஃப்ரை என லிஸ்ட் சொல்ல நீங்க தான் சூப்பரா என்னோட வேவ் லெந்துல சொல்லி இருக்கீங்க மாமா என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அவ இங்கதான் இருக்கா அவள கூட்டிட்டு வர போறீங்களா இல்லையா என்று கோபப்பட்டு சொல்ல சுந்தரவல்லி அவ இல்லை என்று சொல்லுகிறார் உடனே உச்சகட்ட கோபம் ஆன சூர்யா சரக்கு பாட்டில்கள் அனைத்தையும் போட்டு உடைக்க குடும்பத்தினர் ரூமில் இருந்து அலறி ஓடுகின்றனர். மறுபக்கம் நந்தினி கருப்பசாமி அருவாலை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு நான் சூர்யா சாரை பாக்கணும் என்று வேண்டிக் கொண்டு இருக்க சுந்தரவல்லி நந்தினியை புடித்து வெளியில இழுக்க கையில் ரத்தம் வடிகிறது. மறுபக்கம் சூர்யா வலியில் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டு நந்தினி என கத்திக் கொண்டு வெளியில் வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 29-11-25
jothika lakshu

Recent Posts

“ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது புல்லரிக்கிறது” – தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…

28 minutes ago

அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ஒப்பந்தமா? – “Jailer 2” புதிய சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…

32 minutes ago

“Love Insurance Kompany” வசூல் அப்டேட் – முதல் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி சாதனை!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…

38 minutes ago

மிஸ்டர் எக்ஸ் திரை விமர்சனம்

இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…

46 minutes ago

SINGHA Official Teaser

SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir

1 hour ago

Kattalan Tamil Trailer Cubes

Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…

23 hours ago