Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா செய்த வேலை, நந்தினி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

moondru mudichu serial promo update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நண்பருடன் கோவிலில் நந்தினிக்காக காத்துக் கொண்டிருப்பதை நந்தினி பார்த்து விடுகிறார். இவங்க என்ன அக்கா இங்க இருக்காங்க என்று கேட்க எங்க ஹஸ்பண்ட் தான் உன்ன கூட்டிட்டு கோவிலுக்கு வர சொன்னாங்க ஆனா பார்த்தா இவங்க இங்க இருக்காங்க என்னன்னு கேட்கலாம் வா என்று கூப்பிடுகிறார் ஆனால் நந்தினி வர மறுக்கிறார். பிறகு விஜி நந்தினியை சமாதானப்படுத்த அதற்குள் சூர்யா பார்த்து அவர்களை கூப்பிடுகிறார். வந்தவுடன் நந்தினி எதுக்கு அண்ணா நீங்க வர சொன்னீங்க இவர் வேற இங்க இருக்காரு என்று கேட்கிறார்.

என்ன சொல்வது என புரியாமல் உடனே விஜி நீ எதுவும் சொல்லி கூட்டிட்டு வரலையா இன்னைக்கு நம்மளோட கல்யாண நாள் தானா என்று சொல்ல நந்தினி சந்தோஷப்பட்டு விஜிக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லுகிறார். உடனே சூர்யா நம்ம இவங்களோட அனிவர்சரி செலிப்ரேட் பண்ண முதல்ல சாமி கும்பிடுவோம் என்று கூப்பிடுகிறார். பிறகு நால்வரும் பேர் ராசியை சொல்லி மாலையை கொடுத்து அர்ச்சனை செய்கின்றனர். ஐயர் பூஜையை முடித்து மாலையை கொடுத்தவுடன் நால்வரும் போட்டுக் கொண்டு சாமி கும்பிட்டு விட்டு , நடந்து கொண்டு வர உடனே சூர்யா எல்லோரும் செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று சூர்யா நிற்க வைத்து நந்தினியை பக்கத்தில் இருக்குமாறு போட்டோவை எடுத்துக் கொள்கிறார். உடனே சூர்யாவின் நண்பன் வந்த வேலை முடிஞ்சிடுச்சு கிளம்பலாமா என்று சொல்ல, நந்தினி இவர் கூட போமாட்ட இவர் கூட போனாலே சண்டை தான் வரும் நான் பஸ்ல போகிறேன் என்று சொல்கிறேன்.

சரி என் கூட வரல நான் கேப் புக் பண்றேன் என்று கேட்க வேணா என்று மறுத்துவிட அக்கா நம்ம போகலாமா நான் உங்க கூடவே வரேன் என்று சொல்லி கூப்பிட்டு விட்டு இருவரும் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

நந்தினி ஆட்டோவில் இருந்து இறங்கி வந்ததை மாதவி மற்றும் சுரேகா பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போ இவளுக்கு விஜிதா பிரண்டா இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன கூட்டு என்று கேட்டு விசாரிக்கலாம் என்று வருகின்றனர். எங்க போயிருந்தாய் என்று கேட்க, கோவிலுக்கு விஜி அக்கா கூட போயிருந்த, யார்கிட்ட சொல்லிட்டு போன என்று சுரேகா கேட்க ஐயா கிட்ட சொல்லிட்டு போன என்று சொல்லுகிறார். திடீர்னு என்ன கோவிலுக்கு என்று கேட்க இன்னைக்கு விஜி அக்காவோட கல்யாண நாள் அதுக்காக தான் என்று நந்தினி சொல்ல சூர்யா தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவங்களோட கல்யாண நாள் ஆகஸ்ட் 1 என்று சொல்லுகிறார் மாதவி. இல்ல அவங்க இன்னைக்குன்னு தான் என்கிட்ட சொன்னாங்க என்று நந்தினி சொல்லுகிறார். நான் பொய் சொல்லல, நீங்க வேணா அவங்க கிட்டயே கேளுங்க என்று சொல்லிவிட மாதவி சரி போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு நந்தினி தனியாக நின்று யார் சொல்வது உண்மை என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே விஜி நந்தினிக்கு போன் போடுகிறார். நானே உங்களுக்கு கால் பண்ணனும் நினைச்சேன் அக்கா, என்ன நந்தினி சொல்லு என்று சொல்ல எப்படி கேட்கிறது என்று தெரியவில்லை அக்கா. உங்க கல்யாண நாள் இன்னைக்கு தானா என்று கேட்க அதை சொல்ல தான் நானும் பண்ணேன் இன்னைக்கு என்னோட கல்யாண நாள் கிடையாது என்று சொல்லுகிறார். இப்போ வீட்டுக்குள்ள வந்த உடனே சூர்யா சார் ஓட அக்காவும் தங்கச்சியும்b சொன்னாங்க என்று சொன்னார் ஆமா நந்தினி எங்களோட கல்யாண நாள் ஆகஸ்ட் 1. என்ன மன்னிச்சிடு நந்தினி நான் பொய் சொல்லிட்டேன் என்று சொல்ல ,இது மட்டும் இல்லாம இன்னொரு விஷயமும் நான் உன்கிட்ட பொய் சொல்லிட்டு அவரு தான் எனக்கு போன் பண்ணி உன்ன கோயிலுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு தேவையில்லாம உனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு என்று சொல்ல பரவால்லக்கா விடுங்க என்று சொல்லி போனை வைக்கிறார்.

சூர்யா குடித்துக்கொண்டே வந்து இதெல்லாம் ஒரு வீடு இதுக்கு வர டெய்லி வரவேண்டும், எங்க அப்பா மட்டும் இல்லன்னா நான் இந்த வீட்டுக்கே வரமாட்டேன் ஹோட்டல்ல ஜாலியா ஸ்டே பண்ணுவ என்று தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். கல்யாணம் கண் திருஷ்டி பொம்மையுடன் வர அதே எங்க அம்மா மட்டும்தான். நீ வேணா எங்க அம்மா போட்டோ மாட்டி விடு என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி சூர்யா வந்தவுடன் எதுக்கு இன்னைக்கு விஜி அக்காக்கு கல்யாண நாளில் பொய் சொன்னீங்க என்று கேட்க, அது ஒரு முக்கியமான விஷயம் சொல்ற வெயிட் பண்ணு என்று சொல்ல நந்தினி சொல்லுங்க சொல்லுங்க என்று சொல்ல உடனே சூர்யா மட்டையாகி படுத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் நந்தினி ஏதோ ஒரு யோசனையில் இருக்க, கல்யாணம் என்னாச்சும்மா என்று கேட்கிறார். உடனே புஷ்பா அது என்னைக்கும் இருக்கிற மூஞ்சி தானே என்று சொல்ல கல்யாணம் அவரை திட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் ரிமோட் கொடுத்து ஓபன் பண்ண சொல்லுகிறார் அதனை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கோபப்பட்ட சுந்தரவல்லி இதை பார்த்துட்டு நான் டெய்லி வந்துட்டு போயிட்டு இருக்கணும்மா என்று கேட்கிறார். இத பண்ணது அதுக்கு தானே என்று சூர்யா சொல்லுகிறார். நந்தினி சூர்யாவிடம் என்கிட்ட இருந்து சந்தோஷம் நிம்மதிய பறிச்சிட்டீங்க அது கூட சேர்ந்து உயிரையும் பறிச்சிட்டீங்கன்னா நான் போய் நிம்மதியா சேர்ந்திடுவேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update