Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அசோகன் கேட்ட கேள்வி, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 31-07-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நீயாகவே இல்லை. உன்னோட கோபம் தான் இந்த அளவுக்கு எடுத்துக்கிட்டு வந்திருக்கு என்று சொல்ல, பிசினஸ்மேன் ஒருவர் போன் போட்டு மிகப்பெரிய கம்பெனி ஒன்று உங்க கூட இணைந்து ஒர்க் பண்ண போவதாக சொல்ல சுந்தரவல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார் பிறகு அவர் ஆபீஸ்ல நாளைக்கு மீட் பண்ணலாம் என்று சொல்ல, சுந்தரவல்லி அதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வர வச்சு மிகப்பெரிய விருந்து வச்சுட்டு அப்புறம் கம்பெனிக்கு போகலாம் என்று சொல்ல அவரும் சரி என சொல்லுகிறார் பிறகு சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் மிகப்பெரிய கம்பெனி நம்ம கூட இணைஞ்சு வேலை பாக்க போறாங்க என்ற விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார்.

உடனே எந்த பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருந்து வர வைக்கலாமென்று கேட்க அருணாச்சலம் நந்தினியை பண்ண சொல்லலாம் என்று சொல்லுகிறார்.சுந்தரவல்லியும் சரி பண்ண சொல்லுங்க எதையாவது நல்லா பண்ண சொல்லுங்க என்று சொல்லி அனுப்ப அருணாச்சலம் ரூமுக்கு வந்து கதவை தட்டுகிறார். பிறகு வந்தவுடன் சூர்யா மற்றும் நந்தினி இடம் விஷயத்தை சொல்லி அவங்க எல்லாரும் நாளைக்கு விருந்துக்கு நம்ம வீட்டுக்கு வராங்க அவங்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு ராஜ விருந்தா தான் இருக்கணும் என்று சொல்லுகிறார்.

அதுக்காக தான் நந்தினியை பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் என்று சொல்ல தாராளமா செஞ்சிடலாம் ஐயா என்ன பண்ணலாம் என்று கேட்க எந்த ஹோட்டல்லையும் சாப்பிடாத புட்டா டிஃபரண்டா நம்ம ஒரு ஸ்டைல் மாறாம பாத்துக்கணும் என்று சொல்ல நந்தினி சந்தோஷமாக சிரித்துக்கொண்டு சொல்ல இவ இது மாதிரி சந்தோஷப்பட்டு நான் பாக்கவே இல்ல டாடி என்று சொல்ல அருணாச்சலம் கிளம்பி விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினியும் கல்யாணமும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவுடன் என்ன சமைக்கலாம் என்று கேட்கிறார்.

நந்தினி கேள்விப்படாத டிஷ்களை சொல்ல கல்யாணம் சொல்லும்போதே நாக்கு ஊறுது என்று சொல்ல பிறகு இருவரும் வேலையை ஆரம்பிக்கின்றனர். சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் இந்த விஷயம் நல்லபடியா நடக்கணும் எல்லா கரெக்டா இருக்கணும் என்று சொல்ல அருணாச்சலம் அத பத்தி தான் பேசிகிட்டு இருக்க என்று சொல்ல ஆபீஸ்ல யாராவது இருக்கணும் என்று சொல்ல, அருணாச்சலம் சூர்யா அங்க தான் இருக்கா அவ எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவான் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் சூரியாவிற்கு ஃபோன் போட்டு எல்லா ரெடியா என்று கேட்க எல்லாம் ரெடியா இருக்கு என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் பிசினஸ் மேன் வந்து விடுகிறார். அவரை குடும்பத்துடன் சென்று சுந்தரவல்லி வரவேற்கிறார்.

கொஞ்ச நேரம் ஆபீஸ் விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க, இந்த வீடு கட்டி எவ்வளவு நாள் ஆகுது என்று கேட்க 30 வருஷம் ஆகுது என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் பிறகு ஏர்போர்ட்டில் இருந்து ரொம்ப கிட்ட இருக்கீங்க என்று சொல்லிவிட்டு உங்க சொந்த ஊர் இதுதானா என்று கேட்க நாங்க பிசினஸ்காக தான் இங்கே இருக்கோம் சொந்த ஊர்ல இல்ல, அப்பப்போ கோவில் திருவிழா விசேஷம் அப்ப போவோம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் கல்யாணமும் நந்தினியும் சமையல் வேலையை முடித்துவிட்டு டைனிங் டேபிளில் அடுக்கி வைக்கின்றனர். நம்ம கம்பெனிக்கு கிளம்பலாமா என்று கேட்க சுந்தரவல்லி நம்ம சாப்பிட்டு போகலாம் உங்களுக்காக ஸ்பெஷலா ரெடி பண்ணி இருக்கோம் என்று சொல்லி சாப்பிட அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு அவர்களை உட்கார வைத்து நந்தினி சாப்பாடு பரிமாறுகிறார். பிஸ்னஸ் மேன் சாப்பாடு ஸ்மெல் சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு நம்ம ஊரு பாரம்பரியத்தை சூப்பரா மெயின்டைன் பண்றீங்க என்று சொல்லி பாராட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அசோகனிடம் எந்த காரணத்தை கொண்டு நந்தினி ஆபீஸ்க்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு போக அசோகன் நந்தினியிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொல்லி கேட்க சூர்யா சார் சொல்லாம நான் எதையும் கையெழுத்து போடக்கூடாது என்று நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

நந்தினி ஆபீசுக்கு வந்துவிட இவங்க உங்க வீட்ல சமையல் செய்றவங்க தானே என்று கேட்க அவங்க சமையல் செய்றவங்க இல்லை என்னோட வைஃப் நந்தினி என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 31-07-25