தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லியை பாராட்டி பேசுகின்றனர். இது என்ன இருக்கு இதுக்கு மேல நான் ஆட போற ஆட்டத்தை அவங்களால தாங்க முடியாது என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்து டென்ஷனாகாம வந்து படுங்க என்று சொல்ல, அப்படியெல்லாம் விட முடியாது என்று சூர்யா சொல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று நந்தினி சொல்லியும் சூர்யா நீ போய் படு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க சுந்தரவல்லி இன்விடேஷன் கொடுக்கப் போகலாமா என்று கேட்க என்னோட பிறந்த நாள் எப்படி வர முடியும் நீயே போ என்று சொல்லி அனுப்ப சுரேகாவை பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கைகளை கவரில் போட்டு எடுத்துட்டுவா என்று அனுப்புகிறார்.
உடனே சுந்தரவல்லி பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, சூர்யா கீழே இறங்கி வந்து அசோகன் மாதவி இடம் வம்பு இழுக்கிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கையை எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். வந்தவுடன் நந்தினியையும் கூப்பிட்டு பார்சலை பிரிக்க சொல்லி முதல் பத்திரிக்கை கல்யாணத்துக்கு தான் என சொல்லி இருவரும் பத்திரிக்கை கொடுக்க கல்யாணம் கண் கலங்குகிறார். அதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் நீ முதல்ல பத்திரிக்கையை சத்தமா படி என்று சொல்ல அதில் நந்தினி பெயர் மருமகள் என இருப்பதை பார்த்து மாதவி சுரேகா அசோகன் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யாவும் விக்ரமும் காரில் வர இன்விடேஷன் எடுத்துப்பாரு என்று சொல்லுகிறார். ஆன்ட்டி அடிச்ச பத்திரிக்கையில நந்தினி பேரா என்று ஆச்சரியப்பட்டு கேட்க கீச்சாங்க என்று கோபப்படுகிறார். பிறகு சூர்யா நடந்த விஷயத்தை பெயர் மாற்றிய விஷயத்தையும் விவேக்கிடம் சொல்லுகிறார்.
அப்போதுதான் சூர்யா தான் பிரிண்ட் அடிப்பவர்களிடம் நந்தினியின் பெயரை அடிக்கச் சொல்லி பத்திரிக்கையை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. உடனே சூர்யாவிடம் விவேக் நீ நல்ல வேலை தான் பண்ண ஆனா இது தங்கச்சி இவ்ளோ பாதிக்கும்னு நீ நெனச்சு பார்த்தியா என்று சொல்ல சூர்யா விவேக்கிடம் பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் சுந்தரவல்லி அம்மாகிட்ட என்ன நடந்ததுன்னு விலாவரியா சொல்லிருப்பாங்க அவங்க ஆக்ரோஷமா கிளம்பி இங்கதான் வந்துட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லிக்கு அவரது தோழி போன் போட்ட உன்னோட மருமக பேரு நந்தினி என்று நல்ல போட்டு இருக்கியே என்று கேட்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் டாடியோட பர்த்டேக்கு அவர் பக்கத்துல தான் இருக்கணும் அவரை நீ மனசார வாழ்த்தணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


