தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி ஆபீஸில் இருந்து வந்து இந்த வருஷம் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி பேசுகின்றனர். நீங்கதான் விளக்கேத்தி வைக்கணும் என்று சொல்ல கண்டிப்பாக வந்து விடுவேன் என்று சொல்லுகிறார். புது மெஷினுக்கு நீங்கதான் ஆன் பண்ணி வைக்கணும் என்று சொல்ல ஒரு மிஷினை நான் ஆன் பண்ணுவேன் இன்னொரு மெஷினை மாதவி ஆன் பண்ணுவா என்று சொல்லுகிறார். உடனே மாதவி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க சூர்யா வருகிறார். சூர்யா என்ன விஷயம் என்று கேட்க அவரிடம் மெஷின் ஆன் பண்ண போகும் விஷயத்தை சொல்லுகிறார். அதில் திருத்தம் இருக்கு என்று சூர்யா சொல்லுகிறார். ஒரு மிஷினை என் தாய்க்குலம் ஆன் பண்ணுவாங்க அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இன்னொரு மெஷினை ஆன் பண்ண போறது மாதவி கிடையாது என்று சொல்லி நந்தினியை கூப்பிட்டு இன்னொரு மிஷினை ஆன் பண்ணப் போவது என்னோட பொண்டாட்டி தான் என்று சொல்லுகிறார். என் பொண்டாட்டி ரொம்ப ராசியானவ நல்ல எண்ணங்கள் இருக்கிறவங்களை தானே ஆன் பண்ண வைக்கணும் என்று சொல்ல அவர்களும் ரொம்ப சந்தோஷம் சார் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றன.
ரூமுக்கு வந்த மாதவி அசோகனிடம் கோபமாக பேசுகிறார். அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா அப்படி சொல்லி இருப்பான் எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்தது தெரியுமா? இதை இப்படியே சும்மா விடக்கூடாது அந்த மிஷினை ஆபரேட் பண்றது எல்லாம் யாரு என்று கேட்க அது எல்லாமே என்னோட பொறுப்பு தான். அதுக்கான சாவி எல்லாம் என்கிட்ட தான் இருக்கு என்று சொல்ல அந்த மிஷினை அவ தொடம்போது அவளுக்கு ஷாக் அடிக்கணும் அவ செத்தாலும் பரவாயில்லை என்று சொல்ல, அசோகனும் சரி என்ன சொல்லுகிறார். இது ரொம்ப பெரிய விஷயம் அம்மாவுக்கு தெரிய வேணாம் தெரிஞ்சா வேண்டாம்னு சொல்லிடுவாங்க என்று சொல்லி அனுப்புகிறார் மறுபக்கம் ரூமில் நந்தினி நின்று கொண்டிருக்க சூர்யா வருகிறார். அந்த மெஷினை எதுக்காக என் ஆன் பண்ண சொல்றீங்க அது உங்களோட கம்பெனி, நீங்க கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கீங்க நீங்க சம்பந்தப்பட்டவங்க தான் அதை ஆன் பண்ணி வைக்கணும் எனக்கு என்ன சம்பந்தம் இருக்கு என்று கேட்கிறார்.
மாதவி அம்மா தான் அந்த மிஷினை ஆன் பண்ணி வைக்கணும்னு உங்க அம்மா ஆசைப்படுறாங்க அதுவும் சரிதானே என்று சொல்லுகிறார். முதலே சொல்லியிருந்தாலும் பரவால்ல ஆனா அவங்க தான் ஆன் பண்ணனும்னு சொன்னதுக்கு அப்புறம் அவங்க சந்தோஷப்பட்டதுக்கு அப்புறம் இது மாதிரி சொன்னா அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க என்று சொல்லுகிறார். ஏற்கனவே என்னை இந்த வீட்டு அதிகாரத்திற்கு ஆசைப்படுறதா நினைக்கிறாங்க இந்த நேரத்தில் நீங்க இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க என்று கேட்கிறார். இது சரியா வராது கடைசி வரைக்கும் இத நினைச்சுக்கிட்டு இருப்பாங்க என்று சொல்ல, அத பத்தி உனக்கு என்ன கவலை என்று சூர்யா கேட்கிறார். இந்த விஷயத்தில் நீங்க விட்டுக் கொடுங்க நாளைக்கு நான் கம்பெனிக்கு வரல மாதவி அம்மாவே ஆன் பண்ணட்டும் என்று சொல்ல ஆனால் சூர்யா கட்டாயமாக நீ வர நாளைக்கு மிஷின் ஆன் பண்ற அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு தூங்கச் சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி என்னோட கம்பெனிக்கு அவ வந்து மிஷின் ஆன் பண்ணுவாளா? கம்பெனி ஆளுங்க எல்லாம் என்ன அவளுக்கு ஈக்குவலா நினைக்க மாட்டாங்களா அது நான் கஷ்டப்பட்டு உருவாக்கின கம்பெனி என்று கோபப்பட்டு நான் நாளைக்கு கம்பெனிக்கு போக மாட்டேன் என்று சொல்ல மாதவி கண்டிப்பா நீங்க போகணும் இது சூர்யா போடுற பிளான் நீங்க கம்பெனிக்கு போகாம இருந்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா உங்கள கம்பெனி பக்கம் வர விடாம பண்ணிடுவான் உங்கள வச்சு அவன் அவளை உங்க இடத்துக்கு ரிப்ளை பண்ணிடுவான் என்று சொல்லுகிறார். எனக்கும் கோபமா தான் இருக்குமா ஆனா நம்மளே ஒதுங்கி நின்னா நம்மலே ரூட்டை கிளியர் பண்ண மாதிரி ஆகும் நீங்க நாளைக்கு கம்பெனிக்கு போங்க உங்களோட மரியாதையை விட்டுக் கொடுக்காதீங்க என்று சொல்ல சுந்தரவல்லியும் சம்மதிக்கிறார்.
மறுநாள் காலையில் மாதவி சுரேகா கிளம்பி வந்துவிட கொஞ்ச நேரத்தில் சுந்தரவள்ளியும் கிளம்பி வருகிறார். உடனே சரி போகலாம் என்று சொல்ல அருணாச்சலம் சூர்யாவும் நந்தினியும் வந்துடட்டும் போகலாம் என்று சொல்ல சுந்தரவல்லி அவர்களுக்கு நம்ம எதுக்கு வெயிட் பண்ணனும் என்று சொல்லுகிறார். உடனே மாதவி மெஷின் ஆன் பண்ண வேண்டியது நான் என்ன விட்டுட்டு அவன் பொண்டாட்டியை ஆன் பண்ண சொல்றான் எனக்கு கடுப்பாகாதா இது என்னோட மானம் மரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி இப்ப வர போறீங்களா இல்லையா என்று கேட்க ஏற்கனவே இந்த வீட்ல என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்குன்னு கம்பெனில பேச ஆரம்பிச்சிட்டாங்க இதுல தனித்தனியா போனா இன்னும் பிரச்சனை பெருசாகும் இது தேவையா என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சுந்தரவல்லி சுரேகா என அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க மாதவி நான் ஆண் பண்ண வேண்டிய மிஷினை அவ ஆன் பண்றா என்று குழம்பிக் கொண்டு இருக்கிறார். விட்டா சூரியா அவளை ஆபீஸ்க்கு நடக்க விடாமல் தூக்கிட்டு போயிடுவான் போல என்று சொல்ல சத்தமா பேசாத வந்துகிட்டு இருக்கான் விட்டு அதையும் செய்வான் என மாதவி சொல்லுகிறார். எனக்கு என்னவோ அவளோட ஆட்டத்தை இப்பதான் லைட்டா ஆரம்பிச்சிருக்காலுன்னு தோணுது என்று சொல்லுகிறார் கொஞ்ச நாள்ல சூர்யாவும் மொத்தமா கைக்குள்ள போட்டுக்கிட்டு மொத்த சொத்தையும் அவர் பேர்ல மாத்திக்கிட்டு எடுத்துனு போயிட்டே இருக்க போறா பாருங்க என்று சொல்ல அருணாச்சலம் எப்ப பார்த்தாலும் காசு பணத்தை பற்றிய தான் பேசிக்கிட்டு இருப்பீங்களா என்று கேட்கிறார். சூர்யா நந்தினி சாரி சரி பண்ணி விட அருணாச்சலம் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா அவன் வந்துட்டான் கிளம்புற நேரத்துல எந்த பிரச்சனையும் வேண்டாம் என சொல்ல சூர்யாவும்,நந்தினியும் வருகின்றனர். பிறகு அனைவரும் கிளம்புகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


