Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவள்ளி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 30-07-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சா நான் பத்தடி அடிப்பேன் ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவுக்கு என்று சொல்லுகிறார். அன்னைக்கு மண்டபத்துல எங்க அப்பா அம்மாவ வர வச்சி ஊர கூட்டி அசிங்கப்படுத்தினீங்களே அப்ப எனக்கு எப்படி இருக்கும் ஆனா சூர்யா மேல நான் வச்சிருக்கிற ஆசை பொய் கிடையாது. சூர்யாவை என் புருஷனா தான் நினைக்கிறேன். இவ்வளவு நாளா நான் மறைமுகமா செஞ்சதை இதுக்கு மேல நேரடியாக செய்த உங்க மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைக்கும் வரை நான் ஓயமாட்டேன் நடத்திக் காற்றனா இல்லையான்னு பாருங்க என்று சொல்லிவிட்டு வா ரேணுகா என்று கூப்பிட டயலாக் பேசிட்ட இல்ல நீ கிளம்பு அவ வருவா என்று சொல்லுகிறார். சூர்யா போலீசுக்கு போன் பண்ண சொல்ல அர்ச்சனா கிளம்பி விடுகிறார். பிறகு போலீஸ் வந்து ரேணுகாவை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

சூர்யா இவங்க கேட்ட பணம் அந்தஸ்து படிப்பு எல்லாமே இப்ப போனவ கிட்ட இருக்கு ஆனா குணம் இவகிட்ட இருக்கு, இவ்வளவு நாளா அர்ச்சனா பண்ணதுக்கு எல்லாம் நந்தினி மேல பழி போட்டாங்க ஆனா இவங்க எல்லாரும் இப்போ நந்தினி கிட்ட மன்னிப்பு கேட்கணும் ஆனா நம்ம வீட்ல இருக்கிறவங்க கேட்க மாட்டாங்க அது தெரியும் இதுக்கு மேல அவ மேல இருக்கிற அபிப்பிராயத்தை மாற்றுங்கள் இல்லன்னா இது மாதிரி நிறைய பேர் வந்து மிளகாய் அரைச்சிட்டு போயிடுவாங்க என்று சொல்லிவிட்டு நந்தினியை அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவிடம் வந்து பாராட்ட, இவ இப்படி எல்லாம் பண்ணுவா என்று நான் நினைக்கல என்று சொல்லுகிறார். அவ பண்ண எல்லா பிரச்சனையிலும் நந்தினியை இழுத்து விட்டு இருக்கா இதனால நந்தினி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா என்று சொல்ல, ஆனா இவ்வளவு நாள் நந்தினி திட்டினவங்க அவ மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சும் மன்னிப்பு கேட்க மாட்டேங்கிறாளே என்று சொல்ல அதெல்லாம் அவங்களுக்கு புரியாது என்று அருணாச்சலம் சொல்லிவிட்டு நந்தினி இடம் போய் பேசு என அனுப்பி வைக்கிறாய்.

மறுபக்கம் கிச்சனில் கல்யாணம் மற்றும் நந்தினி இருவரும் ரேணுகாவை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். அவளை நான் பார்த்து தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் கடைசியா உங்க வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டா என்று நந்தினி சொல்லுகிறார். தப்பு செஞ்சவன் கண்டிப்பா தண்டனையை அனுபவிச்சு ஆகணும் சின்னையா தண்டனை வாங்கி கொடுத்துட்டாரு ஜெயில்ல புடிச்சு போட்டுட்டாங்கல்ல ஆளுங்க கிட்ட பார்த்து பழகணும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குனு தெரியாது என்று கல்யாணம் சொல்லுகிறார். நந்தினி சூர்யாவிற்கு பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க குடித்துவிட்டு இதை எல்லாம் சூப்பரா தான் செய்ற ஆனா எல்லாரையும் ஒண்ணா நினைக்காத புரிஞ்சு நடந்துக்கோ என்று சொல்லுகிறார். எத்தனையோ தடவை அந்த அர்ச்சனாவே நம்பாதன்னு சொன்ன கேட்டியா இப்போ எவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்கா பாரு என்று சொல்லுகிறார்.

அவளை இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் நான் எவ்வளவு அசிங்கப்படுத்தி திட்டினேன் அப்பயும் துடைச்சு போட்டுட்டு வந்து நிக்கிறா, அவ பேசின எல்லாத்தையும் யோசிச்சு பாரு உனக்கே புரியும் என்று சொல்ல, புரியுது சார் அவங்க உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறாங்க ஆனா உங்களுக்கு அவங்களை புடிக்கல ஆனாலும் ஆசைப்படுறாங்க என்று கேட்க தான் நினைச்சது தான் நடக்கணும் என்ற எண்ணம் என்று சொல்லுகிறார். இனிமேலாவது கொஞ்சம் கவனிச்சு உஷாரா இரு என்று சொல்ல சாரி சார் அந்த ரேணுகாவை நான் நல்லவன்னு நினைச்சு இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல அதுக்கு நானும் தான காரணம் என்று சொல்லுகிறார். நீ அதை நினைத்து எல்லாம் ஃபீல் பண்ணாத என்று சொல்ல சரி நீங்க பால் குடிங்க நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நந்தினி போகிறார்.

நந்தினி சூர்யாவிற்கு இட்லி எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட கொடுக்க சூர்யா சாப்பிட போக கையில் கட்டு இருப்பதால் தயங்கி இப்போதைக்கு எனக்கு பசி எடுக்கல நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் நந்தினி, எனக்கு கம்பெர்ட்டபிளா இல்லை என்று சொல்லுகிறார். இப்படியே விட்டா நீங்க சாப்பிட மாட்டீங்க குடுங்க நானே ஊட்டி விடுறேன் என சொல்லி நந்தினி சாப்பாடு ஊட்டி விடுகிறார். பிறகு உங்களுக்கு எப்ப சார் கை சரியாகும் என்று கேட்க ஏன் என்று கேட்கிறார் உங்களுக்கு கை சரியாயிடுச்சு என்றால் நீங்களே கையெழுத்து போட்டுப்பீங்க நான் ஊருக்கு போயிடுவேன் என்று சொல்லிவிட்டு போக சூர்யாவின் முகம் மாறுகிறது. அருணாச்சலம் சுந்தரவளியிடம் காலையிலிருந்து ஏன் சாப்பிடல என்று கேட்க பசிக்கல என்று சொல்லுகிறார். எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க முதுகுல குத்துறாங்க என்று சொல்ல,அவளை நம்பாதே என்று எவ்வளவு வாட்டி சொல்ல எல்லோர் கண்ணுக்கும் கெட்டவளா தெரிஞ்ச அர்ச்சனா உனக்கு மட்டும் எப்படி நல்லவளா தெரிகிறார் என்று கேள்வி கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கல்யாணத்தை நம்பி எல்லாம் இந்த பொறுப்பை விட முடியாது என்று சொல்ல நந்தினியை நம்பலாமே என்று சொல்ல அமைதியாக இருக்கிறார். பிறகு அருணாச்சலம் நந்தினி இடம் பேச சூப்பரா பண்ணிவிடலாம் என்று சொல்ல சூர்யா இதுவரைக்கும் இவ்வளவு கான்ஃபிடண்டா பேசி நான் பார்த்ததே இல்லை டாடி என்று என்று சொல்கிறார்.

வரும்போது எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் பக்காவாக இருக்கணும் சூர்யா என்று சொல்லிக் கொண்டிருக்க அதெல்லாம் கரெக்டா இருக்கும் டாடி என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 30-07-25