moondru mudichu serial promo update 28-12-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நீ படிக்கிற நந்தினி உன்ன படிக்க வைக்கிறேன் கவலைப்படாதே உன் கூட நான் இருக்கேன் என்று சூர்யா சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி ஆபீஸ் ரூமுக்குள் புலம்பி கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார் என்ன புலம்பி கிட்டு இருக்க என்று கேட்க என் போட்டோவை எடுத்துட்ட அவனுக்கு எல்லாம் மாறிடுமா அவளே ஒரு தண்டம் என்று சொல்ல, நீ வேணும்னே நந்தினி அசிங்கப்படுத்துற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்ல, ஒருவேளை நந்தினி இங்கிலீஷ் கத்துக்கிட்டா நீ என்ன பண்ணுவ என்று கேட்க அவ இங்கிலீஷ் பேசுவது மட்டும் தான் உங்களுக்கு பிரச்சினையா வேலையில் இருக்கிற திறனும் புத்தியும் அவளுக்கு வரணும் இவ யாரு நாலு பேர் அதட்டி பேசினா மூளையிலே உட்கார்ந்து அழுவா, அவளுக்கு தெரிஞ்ச ஒரே வேலைக்காரியா இருக்கிறது மட்டும்தான் அதை மட்டும் ஒழுங்கா பார்க்க சொல்லுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த சூர்யா நந்தினி இடம் படிக்கணும் என்று சொல்ல இதுக்கு மேல நீங்க என்ன படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவீங்க என்று சொல்ல ஒரு விஷயம் நம்மளுக்கு வரலைன்னா நம்ம அதை தானே செய்யணும் அதானே தீர்வு என்று சொல்லுகிறார். என் மனசு இப்போ ஒரு நாலு கட்டிங் போடுற அளவுக்கு இருக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஒரு கட்டிங் போட்டுக்கலாம் என்று கேட்க நந்தினி முறைக்கிறார். அப்படியெல்லாம் குடிக்கணும்னா நான்தான் ஃபர்ஸ்ட் குடிக்கணும் என்று சொல்ல வேண்டாம் தண்ணியே குடிச்சுகிறேன் என்று சொல்ல நந்தினி சிரிக்கிறார். சுந்தரவல்லி ஆபீஸில் இருக்க பிஏ இன்விடேஷன் கொடுக்க என்ன என்று கேட்க உங்களோட பர்த்டே இன்விடேஷன் கிராண்டா பண்ணனும் என்று சொல்ல அருணாச்சலம் சந்தோஷப்படுகிறார் இன்விடேஷன் எடுத்து பார்க்க அதில் நந்தினி பேர் மட்டும் இல்லாமல் இருப்பதால் அருணாச்சலம் ஏன் நந்தினி பெயர் இல்லை என்று கேட்கிறார்.
சூர்யா இதை பார்த்தால் எவ்ளோ பீல் பண்ணுவான் என்று சொல்லி விட்டு அருணாச்சலம் சென்று விடுகிறார். நந்தினி சூர்யாவுக்கு சாப்பாடு பரிமாற இவ்வளவு நாளா சமைச்சுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். நான் சின்ன வயசுல இருந்தே சமைச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிற அருணாச்சலமும் சுந்தரவள்ளியும் பத்திரிக்கையுடன் வீட்டுக்கு வருகின்றனர். சுந்தரவல்லி கல்யாணத்திடம் வீட்டில் இருக்கிற எல்லாரையும் கூட்டிட்டு வா என்று அனுப்புகிறார். அனைவரும் வந்தவுடன் பத்திரிக்கையை காட்ட அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் எந்த ஹோட்டல்ல என்று கேட்க வீடு கடல் மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டு அந்த பத்திரிக்கையை சத்தமா படிங்க என்று சொல்ல மாதவி படித்து முடித்தவுடன் சூரியா நந்தினி பெயர் இல்லாததை பார்த்து டென்ஷன் ஆகி மேலே சென்று விடுகிறார்
நந்தினி மேலே வந்து எதுக்கு சார் கோபப்படுறீங்க என்று கேட்க அது எப்படி நந்தினி எல்லாரும் போட்டு இருக்காங்க உன் பேர் மட்டும் போடல என்று கோபப்படுகிறார். என்னோட தாய் குளம் என்னோட டாடி மேல இருக்கிற பாசத்தினால் இந்த பிறந்தநாள் கொண்டாடும் இல்ல நந்தினி என்ற ஒருத்தி எங்க குடும்பத்துல இல்லன்றது அடையாளப்படுத்துவதா இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, நந்தினி நான் எங்க என்னோட பேரை போட்டு இருப்பாங்களோ என்று தான் நினைச்சேன் அதுக்கு இது எவ்வளவோ மேல் என்று சொல்லுகிறார். சாரிடா இந்த விஷயம் எனக்கு தெரியாது அவ முதலிலேயே சொல்லியிருந்தா இது மாதிரி நடக்க விடமா பண்ணி இருப்பேன் என்று சொல்ல எனக்கு தெரியும் டாடி என்று சொல்லி அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி மீது கோபப்பட்டு பேசுகிறார்.
இந்த சொசைட்டிக்கு அவங்க என்ன புரிய வைக்க போறாங்க என்று கேட்க நான் என்ன புரிய வைக்கிறேன்னு பாருங்க என்று சொல்ல அருணாச்சலம் மற்றும் நந்தினி இருவரும் சமாதானப்படுத்த எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு நான் திருப்பி அடிக்க போற அடியை எப்படி தாங்கறாங்கன்னு நான் பாக்குறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுந்தரவல்லிக்கு போன் போட்டு முதல்ல நீங்க பத்திரிகையை பாருங்க என்று பதட்டமாக சொல்ல அதில் நந்தனியின் பெயர் இருப்பதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகி பத்திரிக்கையை கிழித்து விடுகிறார்.
யாரோட வேலை இது என்று சுந்தரவல்லி கேட்க எல்லாம் அந்த சூரியாவோட வேலை தான் என்று சொல்லுகிறார். உடனே நான் நந்தினி நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல என்று சொல்ல பின்ன உன் பேரை விட்டுட்டு அவங்க பத்திரிக்கை போடுவாங்க நான் சும்மா இருக்கணுமா என்று கேட்கிறார். அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் என்று சுந்தரவல்லி மாதவி மற்றும் சுரேகாவிடம் சொல்லுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…