moondru mudichu serial promo update 27-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி இடம் நாளுக்கு நாள் அவங்க ரெண்டு பேருக்குள்ள பாண்டிங் அதிகமாக்கிக்கிட்டு போய்கிட்டே இருக்கு, இப்போ இந்த பிச்சை எடுத்ததால ஒரு எமோஷனல் பாண்டிங் உருவாகி இருக்கும். இப்போ குழந்தை எதுவும் உருவாகாம இருக்கு அப்படி ஆயிடுச்சின்னா இன்னும் நம்ம நிலைமை மோசமாயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க சூர்யா கல்யாணத்தை தேடி கொண்டு வர அசோகன் கூப்பிட்டு மார்க்கெட்டுக்கு போய் இருக்கும் விஷயத்தை சொல்ல, உடனே போன் பண்ணி மீன் மார்க்கெட் போய் மீன்களை வாங்கிட்டு வா இன்னைக்கு சமைச்சு சாப்பிடுவோம் என சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு ரூமுக்கு வர நந்தினி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க நீ எந்த வேலையும் செய்யக்கூடாது அமைதியா இருக்கணும் என்று சூர்யா பேசிக் கொண்டே இருக்க நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சூர்யா என்னாச்சு எதுக்கு அழுகிற என்று கேட்கிறார். எனக்காக எதுக்கு சார் இவ்வளவு பண்ணீங்க என்று கண்கலங்கி அழுகிறார். என்னால நெனச்சு கூட பாக்க முடியல சார் என்று சொல்ல சூர்யா எனக்கு ஸ்டேட்டஸ்லாம் பெருசு கிடையாது சக மனிதர்கள் தான் பேசு என்று சொல்லி அழாத என்று சொல்லுகிறார்.
எனக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கும்போது நீ பார்த்துக்கிட்ட இல்ல என்று சொல்ல நீங்களும் நானும் ஒன்னா, பெத்தவங்க கூட பண்ண மாட்டாங்க காலம் பூரா உங்க காலடில கிடைக்கிற மாதிரியான ஒரு விஷயத்தை பண்ணியிருக்கேன். நான் எப்பவுமே எங்க அம்மாவ திட்டிகிட்டே இருப்பேன் எதுக்குமா என்ன பெத்தன்னு சொல்லுவ ஆனா இன்னைக்கே எங்க அம்மா நான் கும்பிடுகிற கருப்புசாமி இதைவிட ஒரு படி மேல நீங்க பண்ணி இருக்கீங்க என்று மன்னிப்பு கேட்டு கண்கலங்க சூர்யா ஆறுதல் சொல்லுகிறார். இப்போதைக்கு அழாம ரெஸ்ட் எடு அப்பதான் உனக்கு உடம்பு சரி ஆகும் என்று சொல்லிவிட்டு நந்தினி படுக்க ஏற்பாடு செய்கிறார். கல்யாணத்துக்கிட்ட மீன் குழம்பு வைக்க சொல்லி இருக்கேன் நீ இங்கே சாப்பிட்டு இங்கேயே படுத்து ரெஸ்ட் எடு என்று படுக்க வைக்கிறார். மாதவி ரூமில் டென்ஷனாக நாளுக்கு நாள் இந்த நந்தினி இந்த வீட்ல பவர் ஆகிகிட்டே போறா, இந்த சூரியா வேற, அவளுக்காக போய் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லுகிறார்.
அர்ச்சனா கழுத்தில் தாலி கட்ட விடாம, நந்தினி கழுத்துல தாலி கட்ட வச்சதே நான்தான் ஆனால் இன்னொரு அர்ச்சனாவா நந்தினி மாறிடுவான்னு பயமா இருக்கு என்று சொல்லுகிறார். இதுக்கு நான் ஒரு பிளான் போட்டு இருக்கேன். அவள எதிரியாய் இருந்து ஒன்னும் பண்ண முடியல இப்போ உறவாடி தான் கெடுக்கணும் அவள வீட்டை விட்டு துரத்தாம விட மாட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் விவேக் மற்றும் சூர்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீ நந்தினிக்காக இவ்வளவு விஷயம் பண்ணுவேன்னு நானே நினைக்கல. கோவில் வாசலில் போய் பிச்சை எடுப்ப என நான் நினைக்கவே இல்ல இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று நீ நினைக்கிறாயா?என்று கேட்கிறார். நந்தினிக்கு உன் மேல அக்கறைக்கும் மேல ஒன்னு வந்திருக்கு என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு அவ பாவம். அவ வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி வரைக்கும் அடுத்தவங்க எமோஷனை பத்தின கவலைப்பட்டது கிடையாது. அவளோட பொறுமை நிதானம் அன்பு விட்டுக்கொடுத்து போற தன்மை ஆளு அப்படியே மாத்திடுது. அவை இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து எவ்வளவு அசிங்கத்தை பேஸ் பண்ணிக்கிட்டு இருக்கா தெரியுமா வேற ஏதாவது பொண்ணு இருந்தா சீ போனுக்கு போயிட்டு இருப்பா அவ எவ்வளவு பொறுமையா சகிச்சுக்கிட்டு இருக்கா அவ நல்லா இருக்கணும் என்று சொல்லுகிறார்.
நான் நந்தினியை புடிக்காதுன்னு எப்ப சொன்ன அவள புடிக்கும் ஆனா அன்பை தாண்டி அஃபெக்ஷன் எல்லாம் இல்ல என்று சொல்லுகிறார். நீ எப்படியோ பட்ட குடிகாரன் என்று இப்போ ஏன் குடிக்காம இருக்க என்று கேட்க, அதையெல்லாம் ஃபாலோ பண்ணா தான் நந்தினிக்கு சரியாக எண்ணும்போது நான் இப்படி குடிக்க முடியும். இது மட்டும் இல்லாம அவளுக்கு உடம்பு சரியான உடனே அவளை அவங்க வீட்ல விட்டுட போறேன். சட்ட விஷயத்தில் அவளை அடித்த போது அவ பயத்துல நடுங்கி என்னை எங்க வீட்டுல விட்டுடுங்கன்னு சொல்லும் போது குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்குது. அப்படிப் பார்த்தாலே நான் அவளை அடிச்சதுக்கு அப்புறம் தான் இந்த அம்மாவை போட்டது இதுக்கப்புறம் என்ன ஆசைப்பட்டாலும் பண்ணி கொடுக்க முடிவு பண்ணிட்டேன். எங்க வீட்ல இருந்து அவ பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அவ நிம்மதியா போய் அவ வீட்ல இருக்கட்டும் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி குளித்துவிட்டு சூர்யா தூங்கிக் கொண்டிருக்க அவரது காலை தொட்டு கும்பிடுகிறார். மறுபக்கம் சூர்யா நீ இந்த வீட்ல பட்ட கஷ்டம் எல்லாமே போதும் நீ போய் உன் வீட்டில் சந்தோஷமா இரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் விஜி நந்தினிக்கு போன் போட்டு இதுக்கு அப்புறமாவது பாசமா நடந்துகோ என்று சொல்ல, சூர்யாவுக்கு நந்தினி காபி கொடுத்த பிறகு அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். என்ன அப்படி பாக்குற என்று கேட்க நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே…
தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…