தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சிmமுத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சீட்டு போட்டு பார்த்துக் கொண்டிருக்க சூர்யா வந்துவிடுகிறார் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க ஆபீஸ்க்கு வரலாமா வேணாமா சீட்டு போட்டு பாக்கறேன் என்று சொல்ல நீ வரணும்னு தான் சொல்லுவாரு என்கிட்ட சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார். ரேணுகா தூங்கிக் கொண்டிருக்க அர்ச்சனா போன் போட்டு அந்த சூர்யா குடும்பத்தை மொத்தமா முடிச்சுடனும் சுந்தரவல்லி அம்மா இப்ப என்ன சீட்ல உட்கார வைக்கிற அளவுக்கு நம்புறாங்க இந்தu வாய்ப்பை தவற விடக்கூடாது. எனக்கு இது எல்லாத்துக்கும் ஒரு வாரம் தேவைப்படுது மொத்த கம்பெனியும் வாஷ் அவுட் பண்ணிடுவேன். அதுக்காக நீ ஒன்னு பண்ணனும் குறைஞ்சது பத்து நாளுக்கு சூர்யாவும் நன்றியும் ஆபீஸ் பக்கமே வரக்கூடாது அதுக்காக நான் சொல்றதை நீ செய்யணும் என போனில் விஷயத்தை சொல்லுகிறார்.
நான் கொடுக்கிற மாத்திரையை சூர்யாவுக்கும் நந்தினிக்கும் பால்ல கலந்து கொடுத்துரு. மீதி நான் பாத்துக்குறேன் என்று சொல்ல ரேணுகா சரி என்று சொல்லுகிறார் . மாதவி சுந்தரவல்லி இடம் நானும் சுரேகாவும் ஆபீஸ்க்கு போக போறோம் என்று சொல்ல, எதுக்கு தேவையில்லாம இப்போ யாரை எப்போ அனுப்பனும் எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்ல, சூர்யா வந்து சுந்தர வள்ளியை கவனித்து விட்டு இன்னைக்கு ஆபீஸ்ல போய் வேக வேகமா வேலை செய்யலாம் தீய சக்தி கெடுக்க பாப்போம் அதெல்லாம் நம்ம கண்டுக்க கூடாது என்று சொல்லிவிட்டு இருவரும் ஆபிசுக்கு கிளம்ப ரேணுகா நந்தினி மற்றும் சூர்யாவிற்கு பால் எடுத்துக் கொண்டு வந்து குடிக்கச் சொல்லிக் கொடுக்க, சூர்யா எங்க ரெண்டு பேருக்கும் வேணாம் நீ குடிச்சிடு என்று சொல்ல வேண்டாம் என சொல்ல சூர்யா குடி ரேணுகா என்று சொல்லிக்கொண்டே இருக்க நீதான் ஏலக்காய் போட்டு கொண்டு வந்திருக்கல குடி என்று சொல்லுகிறார்.
வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்க குடிக்கிறியா இல்லையா என்று கோபப்படுகிறார். யார் சொன்னாலும் அந்தப் பாலை குடிக்க மாட்டா, என்ன நடந்தது என்று நான் சொல்வதை விட நந்தினி சொன்னா நல்லா இருக்கும் என்று சொல்ல நந்தினி அர்ச்சனாவிடம் போனில் பேசியதை கேட்ட விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இப்போ இவ கொண்டு வந்திருக்காளே இந்த பால் இது பாதாம் பாலோ பருத்திப்பாலோ கிடையாது பாய்சன் பால் என்று சொல்லுகிறார். இத நாங்க குடிச்சு ஒரு வாரத்துக்கு படுத்த படுக்கையா இருக்கணும் இதுதான் சுந்தரவல்லி அம்மா சைனிங் அத்தாரிட்டி கொடுத்திருக்காங்க அந்த மேடத்தோட பிளான் என்று சொல்ல சுந்தரவல்லி இரண்டு பேரு சேர்ந்து கதை விடாதீங்க என்று கோபப்படுகிறார். அவ இது மாதிரி கீழ் தரமான வேலை செய்ய மாட்டா என்று சொல்லுகிறார். உடனே ரேணுகா கையில் இருக்கும் பால் கிளாஸை கீழே போட்டுவிட்டு சுந்தரவல்லி காலில் விழுந்து என் மேல பொய் சொல்றாங்க காப்பாத்துங்க என்று சொல்லுகிறார். இப்பவும் நம்ப மாட்டீங்களா என்று சொல்லிவிட்டு ரேணுகா போன் வாங்கி அர்ச்சனா பேசிய வீடியோவை ஆன் பண்ணி காட்டுகிறார்.
குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக, இப்போ நம்புறீங்களா எல்லாரும் என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி கல்யாணத்தை கூப்பிட்டு அய்யாவோட பெல்ட் ரூம்ல இருக்கு எடுத்துட்டு வா என்று சொல்ல சந்தோஷமாக எடுத்துக்கொண்டு வருகிறார். சுந்தரவல்லி வாங்கி ரேணுகாவை அடி வெளுத்து வாங்குகிறார். அருணாச்சலம் தடுத்து நிறுத்தி இப்போ இந்த வீட்டுக்கு வந்து என்னெல்லாம் பண்ணி இருக்கேன்னு இப்பவே சொல்லு இல்லனா அர்ச்சனா ஓட நீயும் ஜெயில்ல இருக்கணும் என்று சொல்ல நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் என சொல்லுகிறார். பிறகு சூர்யாவிற்கு நாட்டு மருந்து நந்தினி கொடுக்கும்போது அதுல அர்ச்சனா சொல்லித்தான் நான் வேற ஒரு மருந்தை கலந்தேன் அதனாலதான் சாருக்கு உயிர் போற அளவுக்கு ஆபத்து வந்தது என்று சொல்லுகிறார்.
உடனே சுந்தரவல்லி என் புள்ளை உயிரை எடுக்க பார்த்தியா என்று மீண்டும் அடிக்க போக அருணாச்சலம் தடுக்கிறார். நீ சொல்லு என்று சொல்ல அதுக்கப்புறம் உங்களுக்கு கால் வழுக்கி அடிபட்டது கூட அவங்க சொல்லித்தான் செஞ்சேன். அதுக்கப்புறம் டெண்டர் விஷயத்துல நீங்க உங்கள தோக்க வச்சதுக்கு காரணம் அர்ச்சனா அம்மா தான் அதுக்கப்புறம் சுரேகா ரூமுக்குள்ள அந்தப் பையன் வந்தப்போ கதவை சாத்தி லாக் பண்ணி மேல பழி போட்டது நான்தான் அதுவும் இல்லாம பூத்தொட்டிக்குள்ள நகையை மறைத்து வச்சதும் நான்தான் என சொல்லுகிறார். அதுக்கப்புறம் இந்த வீட்ல இருந்து செக்கை திருடி எடுத்துக்கொண்டு போய் கொடுத்ததும் நான் தான் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா ஆக மொத்தம் அந்த அர்ச்சனா பழிவாங்குறதுக்காகவே வந்திருக்கா என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அர்ச்சனா போன் போட அந்த போனை சூர்யா எடுத்து ஸ்பீக்கரில் போடுகிறார்.
நான் கொடுத்த மருந்தை பாலில் கலந்து குடுத்தியா இல்லையா அந்த வீட்டில் திமிரு புடிச்ச ஆயா இருக்கே என்று சொல்ல ரேணுகா யார் என்று கேட்க அதுதான் சுந்தரவல்லி என்று சொல்ல இதைக்கேட்டு சுந்தரவல்லி அதிர்ச்சி ஆகிறார்.
அர்ச்சனா வீட்டுக்கு வந்தவுடன் எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்க என்று சொல்ல உடனே அர்ச்சனா உங்க குடும்பத்தை நடுத்தெருவுக்கு நிக்க வைக்காமல் விடமாட்டேன் என சவால் விடுகிறார். என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
