அருணாச்சலம் சொன்ன வார்த்தை ,சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி குடும்பத்தினருடன் பீட்சா சாப்பிட, மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க என்று கேட்க இன்னைக்கு தான் என்னமோ நம்ம வீட்ல இருக்குற பீலா இருக்கு என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் என்ன பேசுறேன் என்று கேட்க அந்த தோட்டக்காரி இருந்தாலே எங்க பாத்தாலும் அவ மூஞ்சி தான் தெரியுது ஒன்று என்று கோபமாக பேச சூர்யா இதையெல்லாம் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அவ இருந்தா போதும் திட்டிகிட்டு இருந்தா இப்ப இல்லாதப்பவும் திட்டிக்கிட்டு இருக்க, ஒரு நாளாவது அந்த வாசல் பெருக்கி கோலம் போட்டு இருப்பியா கிச்சன் எப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு அவ வேலைக்காரியா இருக்க தகுதி இருக்கு ஆனா சுந்தரவல்லி ஓட மருமகளா இருக்க தகுதி இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க சூர்யா வந்து உட்காருகிறார்.

சூர்யாவும் இந்த வீட்டில ஏதோ ஒன்னு மிஸ் ஆவுது டாடி, நந்தினியோட அழகான முகத்தில் தான் டெய்லியும் முழிப்பேன் சூர்யா சார் சூர்யா சார் என்று சுத்தி வருவா அவள பாத்தாலே பாசிட்டிவா பீல் ஆகும் என்று சொல்லி சுந்தரவல்லி வெறுப்பேற்ற மாதவி ,சுரேகா, அசோகன் வந்து நிற்கின்றனர். அவர்களைப் பார்த்தவுடன் ரூமில் இருந்து வெளியே வந்தாலே பேய் வீட்டுக்குள்ள இருக்குற மாதிரி இருக்கு இப்பவே நந்தினி வீட்டுக்கு போய் அவங்க கூட சாப்பிட்டு கையோட நந்தினி கூட்டிட்டு வரேன் என்று சொல்லி, வரும்போது உங்களுக்கு மீன் குழம்பு எடுத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புகிறார். சுந்தரவல்லி முறைக்க அருணாச்சலம் நைசாக எழுந்து சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினியில் வீட்டுக்கு வர நந்தினியின் மாமா வரவேற்று குடும்பத்தினரை கூப்பிடுகிறார். உடனே நந்தினியின் மாமா ஆளே மாறிட்டீங்க தகதகன்னு என்று சொல்ல அப்படியே நந்தினி என்று கேட்க, நந்தினி அமைதியாக இருக்க, நந்தினி நல்லாதான் இருக்கீங்க என்று சொல்லுகிறார்.

உடனே சூர்யா மோப்பம் பிடித்தே மட்டன் பிரியாணியா என்று கண்டுபிடிக்கிறார். உடனே குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட உட்கார நந்தினி அனைவருக்கும் பரிமாறுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி வீட்டிலும் சாப்பிட உட்கார, இந்தப் பக்கம் சூர்யா சீக்கிரம் சாப்பிடு நந்தினி வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, நந்தினி தயங்குகிறார். உடனே சூர்யா இது சூப்பரான மொமென்ட். இது அப்பா பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று போன் பன்னி மட்டன் பிரியாணி செம டேஸ்டா இருக்கு என்று சொல்லுகிறார். நீங்க சாப்டீங்களா டாடி என்று கேட்க இப்பதான் சாப்பிட உட்கார்ந்து இருக்கோம் என சொன்னவுடன் எல்லாருமேவா அப்ப இருங்க வீடியோ கால்ல வரேன்னு சொல்லி வீடியோ கால் பண்ணுகிறார். இது எல்லாமே என் பொண்டாட்டி செஞ்சது பட்டுக்கோட்டை பிரியாணி என்று சொல்ல சூப்பரா இருக்குமே என்று அருணாச்சலம் சொல்லுகிறார். நம்ம வீட்டில டைனிங் டேபிளில் உட்கார்ந்து எப்ப எந்த பிரச்சினை வரும்ங்கற இப்ப ப்ராப்ளமே இல்ல, இங்க எவ்வளவு அழகா ஒண்ணா உக்காந்து சாப்பிடுறாங்க தெரியுமா என்று கேட்கிறார். சரி சும்மா இருடா தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காத என்று சொல்ல நான் சொல்றது சொல்றவங்களுக்கு கரெக்டா புரியும் என்ற சொல்லி சுந்தரவல்லியை வெறுப்பேத்துகிறார். நம்ம பேமிலி மெம்பர்ஸ் மூஞ்ச காட்டுங்க என்று சொல்ல சுந்தரவல்லி முன் அருணாச்சலம் கேமராவை திருப்புகிறார்.

உடனே புல் நெகட்டிவிட்டி தயவு செய்து காட்டாதீங்க என்று சொல்லி மற்றவர்களை காட்டி பேசிக் கொண்டிருக்க நீ வெறுப்பு ஏத்துனது எல்லாம் கிளம்பி ஓடிட்டாங்க நீ சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பி வாங்க என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.சூர்யா நந்தினி உடன் வீட்டுக்கு வர வீட்டுக்குள் நுழைந்தவுடன் டாடி டாடி என கத்துகிறார் எதுக்கு சார் இப்படி கத்துறீங்க என்று கேட்க அருணாச்சலம் வந்து எப்படி இருக்கீங்க ஐயா என்று கேட்க நல்லா இருக்கமா ஆனா நீ இல்லாம தான் நம்ம வீடு லட்சணமா இல்லை என சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி அப்ப நாங்கெல்லாம் இருந்தா அவலட்ச்சனமா என்று என்று கேட்க நீ தப்பா புரிஞ்சுகிட்ட சுந்தரவல்லி என்று சொல்லுகிறார். நீங்க பேசுறத கேட்டு புரிஞ்சுதா சொல்றேன் என சொல்ல நீ நிறைய வேலையை ஸ்மார்ட்டா முடிக்கிற நீ ரொம்ப திறமைசாலி ஆனா வீட்ட கவனிக்க உனக்கு டைம் இல்ல அதைதான் சொல்ல வந்தேன் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லை என சுந்தரவல்லி ஆரம்பிக்க இல்லம்மா, பேசி முடிச்சிடுறேன் நீ டைம் இருந்தா வீட்ட நல்லா பாத்துப்ப, ஆனா நம்ம வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்க சும்மாதான் இருக்காங்க அவங்களுக்கு நீ எந்த வேலையும் சொல்லிக் கொடுக்கல என்று சொல்ல, அப்போ நான் எல்லா அம்மா மாதிரி அவங்களுக்கு எதுவும் கத்துக் குடுக்கல அவங்கள சரியா வளக்கலைன்னு சொல்ல வரீங்களா என்று சொல்ல நான் உன்ன மட்டும் சொல்லல சுந்தரவல்லி நானும் தான் காரணம் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி இந்த வீட்டுக்கு வர வரைக்கும் அது ஒரு பிரச்சனையா தெரியல ஆனா வந்த பிறகு எப்படி மாத்திருக்க என்னன்ன செஞ்சிருக்கா இந்த சின்ன சின்ன விஷயம் கூட இந்த வீட்ல பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கு. உடனே சூர்யா வீட்டை விடுங்க டாடி என் தங்கத்தை பாருங்க முகத்தை பாருங்க முகத்தைப் பார்த்தாலே மனசு ஹேப்பியா ஆயிடும் என்று சொல்ல நந்தினி கொஞ்சம் அமைதியா இருங்க சார் என்று சொல்ல, சுந்தரவல்லி டென்ஷனாக, எதுக்கு அமைதியா இருக்கணும் என்று சூர்யா கேட்கிறார். டாடி சொன்ன எல்லா பாராட்டும் உனக்கு சேரும். இந்த வீட்டை கோவில் மாதிரி மாத்திட்ட நீ இல்லாம இந்த வீடு என்னமோ மாதிரி இருந்துச்சு அதுக்கு தான் சொன்னேன் என சொல்லுகிறார்.

இதையெல்லாம் பார்த்த நந்தினி எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு என்று நழுவி விட சூர்யா அருணாச்சலத்தை கொஞ்சி முத்தம் கொடுக்கிறார். கிச்சனுக்கு வந்த கல்யாணம் அருணாச்சலம் சொன்னதைப் போல சொல்ல, இப்பதானே எல்லாத்தையும் கேட்டுட்டு வரேன் என்று சொல்லுகிறார். நீ பாட்டுக்கு உன்னோட சொந்தம் வந்ததுக்கப்புறம் உங்க அண்ணன் மறந்துட்ட இல்ல, என்று கேட்க நான் தான் உங்களுக்கு போன் பண்ண ஆனா நீங்க எதுவுமே பேசல என்று சொல்ல நீ எனக்கு பண்ணியா என்று அதிர்ச்சியாக கேட்டு நான் சூர்யா சார நல்லா பாத்துக்க சொன்ன, நீங்க எதுவுமே சொல்லல அதனால உங்க கிட்ட வந்து சண்டை போடணும்னு தான் நெனச்சேன் நீங்கள் ஏன் ஞாபகப்படுத்துங்க என்று சொல்ல நான் எப்படிமா உன் கிட்ட பேசாம இருந்திருப்பேன் என்று சொல்லுகிறார். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்ல, எப்படின பிரச்சினை இல்லாம இருக்கும், ஏதாவது வேலை தேடணும், ரஞ்சிதாவுக்கு ஸ்கூல்ல சீட்டு வாங்கணும் என்று சொல்ல, எவ்வளவோ பள்ளிக்கூடம் இருக்கு அதுல சேர்த்து விட வேண்டியது தான என்று சொல்ல இருக்குனு பீஸ் கட்டணும் இல்ல என்று சொல்லுகிறார். உனக்கு பீஸ் தான் பிரச்சனையா இருக்கவே இருக்காரு ஐயா படிக்க வைக்க போறாரு அவ்வளவு தானே என்று சொல்ல வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார். எந்த ஸ்கூல் பாத்திருக்கீங்க என்று ரேணுகா கேட்க,ரெண்டு மூணு ஸ்கூல் பார்த்து இருக்கேன் ஆனா இன்னும் முடிவு பண்ணல என்று நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் புனிதா நின்று கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் வெளியில் இருக்கின்றனர் சூர்யா என்ன டார்லிங் வெளியே நின்னுகிட்டு இருக்க என்று நந்தினியை பார்த்து கேட்க, உடனே பக்கத்தில் இருப்பது யார் என பார்த்து ஓ புனிதா நீயா இவள வெல்கம் பண்ண தான் நீ வெளியே வந்தியா என்று கேட்கிறார் உடனே சூர்யா வா புனிதா உள்ள போகலாம் என்று கூப்பிட இல்ல சார் நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல ஓ அப்போ ரொம்ப நேரம் முன்னாடியே வந்துட்டியா உன்னை வழி அனுப்ப தான் இவங்க எல்லாம் வந்திருக்காங்களா என்று கேட்கிறார். அந்த மரியாதை எல்லாம் இந்த வீட்ல கிடைக்குமா என்று கேட்க மரியாதையாக மச்சினிக்கும் மரியாதை இல்லையா என்று சூர்யா கேட்கிறார்.

உடனே புனிதா இங்க பாருங்க சார் என்று சாப்பாடு கொட்டி இருப்பதை காட்ட அதற்கு சூர்யா மோப்பம் பிடித்து விட்டு நந்தினி இது அம்மாச்சி செய்த சாப்பாடு தானே என்று சொல்லுகிறார். அது ஏன் கீழ கொட்டி இருக்கு கீழே விழுந்துட்டியா என்று கேட்க அதெல்லாம் வீட்டுக்குள்ள வர தகுதி இல்லாத சாப்பாடா சூர்யா உங்க அம்மா தூக்கி வீசிட்டா என்று அருணாச்சலம் சொல்லுகிறார். தகுதி இல்லாத சாப்பாடா என்று சூர்யா சொல்லி கல்யாணத்திடம் நான் சாப்பிடுற தட்டு எடுத்துக்கிட்டு வா என்று சொல்லிவிட்டு கீழே கொட்டிய சாப்பாடு பக்கத்தில் சென்று தட்டு எடுத்துக்கொண்டு வந்தபின் சூர்யா சாப்பாடை பார்த்துவிட்டு தட்டை தூக்கி போட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிடுகிறார் இதனால் சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 26-04-25
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago