Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா போட்ட திட்டம்.. எப்படி சமாளிக்கப் போகிறார் நந்தினி?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

moondru mudichu serial promo update 26-01-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் செம்பருத்தி இலையை நந்தினி உளர்த்திக் கொண்டிருக்க சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார் மாதவி அங்கே வந்து என்னது இது என்று கேட்கிறார். உடனே சூர்யா இந்த இலையை சாப்பிட்டால் பணம் கொட்டோ கொட்டோ என்று சொல்லிவிட்டு கிளம்ப நந்தினி இடம் இது உண்மையா என்று கேட்க இது செம்பருத்தி இல டீ போடுவதற்காக ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். சரி ஊர்ல இருந்து எங்களுக்கு என்ன எடுத்துக்கிட்டு வந்தேன் என்று அசோகன் கேட்க நானா என்று யோசிக்க சுரேகா இவை என்ன ஜமீன் பரம்பரையா எடுத்துக்கிட்டு வாரத்துக்கு என்று சொல்ல நான் ஒன்னு எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லி மருதாணி இலையை எடுத்துக்கொண்டு மேலே வருகிறார்.

இது என்னது என்று கேட்க இது மருதாணி இலை அரைச்சு கையில போட்டா செவக்கும் என்று சொல்லுகிறார். உடனே மாதவி இது எனக்கு அரச்சு கொடு நந்தினி எனக்கு இப்பவே போடனும் போல ஆசையா இருக்கு என்று சொல்ல, நான் அரைச்சு வைக்குறேன் அதுக்குள்ள நீங்க சாப்பாடு சாப்பிடுங்க காலைல வரைக்கும் அழிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு நந்தினி அம்மியில் உட்கார்ந்து அரைத்துக் கொண்டிருக்க கல்யாணம் மிக்ஸியில் அரைச்சுக்கலாம் இல்லம்மா என்று சொல்ல நல்லாதான் இருக்கும்னு இருந்தாலும் இதுல அரைக்கலாம்னு அரைக்கிறேன் என்று சொல்லுகிறார்.இப்பல்லாம் யாருமா மருதாணி அரைக்கிறாங்க கடையில கோன் மாதிரி விக்கிறாங்க அதை வாங்கி போட்டு வேலையை முடிக்கிறாங்க என்று சொல்ல அசோகன் வந்து இன்னும் அரைக்கலையாமா என்று கேட்டு அரச்சதை வரைக்கும் வாங்கிக்கொண்டு செல்கிறார். சீக்கிரம் வாங்க என்று மாதவி கூப்பிட இவ்வளவு சீக்கிரம் போட்டுட்டு என்னமா பண்ண போற என்று கேட்க சுரேகா மருதாணி போட்டு அக்கா உங்களோட மயக்கப்போறா என்று சொல்ல நான் மறுபடியும் ஏமாற்றத்துக்கா என்று சொல்லுகிறார். உடனே அவர்கள் மருதாணி வைக்க ஆரம்பிக்க மாதவி சுரேகாவிற்கு வைத்துவிட அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வருகிறார். என்னமா மருதாணி எல்லாம் என்று கேட்க நந்தினி ஊரிலிருந்து எடுத்துக்கிட்டு வந்தா என்று சொல்ல ஓ அப்படியா என்று சொல்லி உட்கார சுரேகா உங்களுக்கு என்னையும் அக்காவையும் பிடிக்குமா இல்ல நந்தினி பிடிக்குமா என்று கேள்வி கேட்கிறார். சொல்லிடுவேன் ஆனால் உங்க மனசு கஷ்டப்படும் பரவாயில்லையா என்று கேட்கிறார் பரவால்ல சொல்லுங்க என்று சுரேகா சொல்ல, உன்னையும் மாதவியையும் பிடிக்கும் என்று சொல்றதுக்கு இந்த வீட்ல எல்லாரும் இருக்காங்க ஆனா அந்த பொண்ண புடிக்கும்னு சொல்றதுக்கு யாருமே இல்ல என்று சொல்லுகிறார்.

உனக்கு இத பத்தி இப்ப புரியாது நீ கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போகும்போது தான் தெரியும் என்று சொல்லுகிறார். மாதவி அதை விடுங்கப்பா நீங்க மருதாணி போட்டு இருக்கீங்களா என்று கேட்க எனக்கு வயசு ஆயிடுச்சு மா எனக்கு எதுக்கு என்று சொல்ல சுந்தரவல்லி அப்படி என்ன வயசு ஆயிடுச்சு என்று வந்து எனக்கும் எவ்வளவு நாளா மருதாணி வைக்கணும்னு ஆசை இருந்துச்சு தெரியுமா என்று கேட்கிறார். சுரேகா கையில் நன்றாக இருக்கிறது என்று சொல்ல நான் இப்ப வச்சுக்க போறேன்மா என்று மாதவி சொல்லுகிறார் உனக்கு அப்புறம் நானும் வச்சுக்கவா என்று சுந்தரவல்லி கேட்க அனைவரும் முழிக்கின்றனர். பிறகு சுரேகா எழுந்தவுடன் மாதவிக்கு அசோகனும் சுந்தரவல்லிக்கு அருணாச்சலமும் மருதாணி வைக்கின்றனர். மருதாணி எல்லாம் எங்கிருந்து வந்தது யார் கொடுத்தது என்று கேட்கிறார் சுந்தரவல்லி.சுரேகா அப்பா தான் எடுத்துட்டு வந்தார் என்று கோர்த்து விட அருணாச்சலம் உடனே ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்தது என்று சொல்லி சமாளிக்கிறார். பிறகு அனைவரும் மருதாணி வைத்துக் கொள்கின்றனர்.

பிறகு ரூமுக்கு வந்த நந்தினி எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு மருதாணி வைக்க எடுத்து வைக்க சூர்யா குடித்துவிட்டு வர இது எனது கையில் என்று கேட்க மருதாணி சார் ஊரிலிருந்து எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்துல கழுவிட்டா லைட்டா சிவப்பா இருக்கும் காலையில் வரைக்கும் வச்சிருந்தா நல்லா சிவப்பா இருக்கும் என்று சொல்ல அப்போ எனக்கு என்று சூர்யா கேட்கிறார். உங்களுக்கா இது பொண்ணுங்க மட்டும் தான் வைப்பாங்க ஒரு சிலர் மட்டும்தான் பையன் வைப்பாங்க என்று சொல்ல கொஞ்சம் பேர் போடுவாங்கல்ல அப்போ எனக்கு இது வேண்டும் என்று வச்சுவிட வற்புறுத்துகிறார். நீங்க வேணா காலையில போட்டுக்கோங்க என்று சொல்ல எனக்கு இப்பவே இங்கேயே போட்டே ஆகணும் என்று முடிவாக இருக்கிறார். உடனே நந்தினியும் போட்டு விட சம்மதிக்கிறார்.நந்தினி மருதாணி வைக்க சூர்யா அதிரசம் மாதிரி இருக்கு என்று சொல்லி பேசிக்கொண்டே இருக்க எனக்கு தெரிஞ்ச மாதிரி வைக்கிறேன் என்று சொல்லி வைக்கிறார். நைட்டு தூங்கும்போது கையை மட்டும் மடைக்கிடாதீங்க இல்லனா நல்லாவே இருக்காது என்று சொல்ல சரி நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் அர்ச்சனா தூக்கம் வராமல் மாறி மாறி படுத்து தூங்க அவருக்கு தூக்கம் வராமல் இருக்கிறது. நந்தினி எதிரில் உட்கார்ந்திருக்க இது நல்லா இல்ல இங்க வந்து உட்காரு என்று பக்கத்தில் உட்கார வைக்கிறார். சூர்யா நந்தினி ரொமான்டிக்காக பார்த்துக்கொண்டே இருக்க எதுக்கு சார் இப்படி பாக்குறீங்க என்று கேட்க, இல்ல சும்மா என்று சொல்ல, நீங்க ஒரு மாதிரி பார்த்தீங்க என்று கேட்க, எப்படி பார்க்கிறேன் என்று சூர்யா கேட்கிறார் நான் எப்படி பார்த்தேன் என்று தெரியவில்லை ஆனால் இப்பொழுது நீ பார்த்தல்ல அது சூப்பரா இருந்தது என்று சொல்லுகிறார். உடனே நந்தினி சிரிக்க இது மாதிரி சிரி எவ்வளவு அழகா இருக்க தெரியுமா என்று கேட்க சும்மா எப்படி சார் சிரிக்க முடியும் என்று சொல்ல,அதெல்லாம் ஒன்னும் இல்ல சரி என்று சொல்லி, நீ சிரிக்கும்போது உன் கன்னம் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்று சொல்லி, மருதாணியை நந்தினி கன்னத்தில் பூசி விடுகிறார். பிறகு இருவரும் ரொமான்டிக்காக டான்ஸ் ஆடுகின்றன. பிறகுதான் இது அர்ச்சனாவின் கனவு என்பது தெரிய வருகிறது. நந்தினி சூர்யாவிற்கு மருதாணி வைத்துவிட அவர் படுத்து விடுகிறார். பிறகு நந்தினி அவருக்கு வைத்துக் கொள்கிறார் இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் எந்த கௌரவத்தை பெருசா நெனச்சி நந்தினியை அவமானப்படுத்துறாங்களோ அதை ஒண்ணுமே இல்லாம உடைக்க போறேன். டாடி தாத்தா சொத்து பேரனுக்கு தான் என்று சொல்லுகிறார் சூர்யா.

நடக்கப் போற ஃபங்ஷன்ல இந்த வீட்டுக்கு உண்மையான மகாராணி யார் என்று எல்லாரும் தெரிந்து இருப்பாங்க எங்கம்மா தல குனிஞ்சு நிக்க தான் போறாங்க அதை இந்த சூர்யா பார்க்க தான் போறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

moondru mudichu serial promo update 26-01-25
moondru mudichu serial promo update 26-01-25