தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கோபப்பட்டு பேசிக்கொண்டு இருக்க மாதவி, சுரேகாவும் அழைத்துச் சென்று விடுகின்றனர். சூர்யாவும் பிச்சை எடுத்துக் கொண்டே இருக்க போதும் மச்சான் நீ சம்பாதிச்சது சரியா இருக்கும் என்று சொல்லி அங்கிருந்து அழைத்து வந்து ஒரு ஹோட்டலில் 11 பேருக்கு சாப்பாடு வேண்டும் என்று சொல்லி மொத்த காசையும் கொடுத்து என்ன அதில் இருவது ரூபாய் குறைகிறது என்று சொல்லிவிட சூரியா கேசியரிடம் கெஞ்சி கேட்கிறார் அப்படியும் அவர் கொடுக்க மறுக்க உங்க கால்ல கூட விழற நீங்க எனக்கு பிச்சையா கூட கொடுங்க என்று சொல்லி கெஞ்சி கதறியும் அந்த ஆள் கொடுக்காததால் விவேக் கடுப்பாகுகிறார். உடனே சூர்யா நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு தெருத்தெருவாக வந்து 20 ரூபாய் பிச்சை கேட்க யாரும்கொடுக்காமல் திட்டி அசிங்கப்படுத்துகின்றன.
அதையும் மீறி சூர்யா அனைவரிடமும் பிச்சை கேட்க ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கோவிலில் கண் தெரியாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் என்கிட்ட உங்களுக்கு கேட்கணும்னு தோணலையா அண்ணா என்று கேட்கிறார். சூர்யா வேண்டாம் என சொல்லியும் உங்க வேண்டுதல் நிறைவேறட்டும் எடுத்துக்கோங்க அண்ணா கொடுக்கிறேன் என சொல்லி சூர்யாவுக்கு கொடுக்க நீ பிச்சை எடுக்கிற பொண்ணு இல்லம்மா என் வேண்டுதல நிறைவேற்றி வைத்த தெய்வம் என சொல்லிவிட்டு நன்றி சொல்லுகிறார். பிறகு விவேக் உடன் சேர்ந்து சாப்பாடு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு ஒரு கோவிலில் 11 சாமியார்களுக்கு இருவரும் சாப்பாடு பரிமாற அவர்களும் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடுகின்றனர். பிறகு நந்தினி கண் முழித்து விஜியிடம் தண்ணீர் கேட்டு குடிக்கிறார். பிறகு சூர்யா அவர்கள் சாப்பிட்ட இலைகளை எடுத்துப் போடுகிறார்.
அந்த சாமியார்கள் நீங்க எந்த நோக்கத்துக்காக அன்னதானம் பண்ணுங்களோ கண்டிப்பா அது நடக்கும் என்று சூர்யாவிற்கு ஆசீர்வாதம் பண்ண விவேக் கிளம்பலாமா என்று கேட்க ஒருவாட்டி குளிச்சிட்டு சாமி கும்பிட்டு போடலாம் என்று சொல்லி சூர்யா சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் பிச்சைக்காரர்களிடம் வந்து உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லோரும் பத்ரமா இருங்க என்று ஒருத்தர் விடாமல் எல்லோர்கிட்டயும் சொல்லிவிட்டு சூர்யா கிளம்புகிறார். அருணாச்சலம் விஜியிடம் இப்போ எப்படி இருக்குமா என்று கேட்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணு முழிச்சு கொஞ்சம் தண்ணி குடிச்சா என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி மீண்டும் கண் முழிக்க விஜி மீண்டும் நந்தினிக்கு தண்ணீர் கொடுக்க இதுக்கப்புறம் எதுவும் பயப்பட வேண்டாம் சரியாயிடுவா சூர்யா அண்ணனோட வேண்டுதல் பளிச்சுடுச்சு என்று சொல்லுகிறார். வீட்டுக்கு வந்து சூர்யா அருணாச்சலத்திடம் நந்தினி எப்படி இருக்கா என்று கேட்க இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லுகிறார் சரி நீ போய் பாரு என்று மேலே அனுப்பி வைக்கிறார்.
சூர்யாவும் விவேக்கும் வந்து விஜி இடம் நந்தினி எப்படி இருக்கா என்று கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் ரொம்ப முடியாம இருந்தா இப்ப கண்ணு முழிச்சிட்டு நல்லா தான் பேசுறா நீங்க பண்ண வேண்டுதல் நிறைவேறிடுச்சு இதுக்கு அப்புறம் சரியாயிடும் என்று சொல்லுகிறார். முதல் தண்ணி ஊத்திடலான்னு நினைக்கிறேன் என்று சொல்ல எனக்கு இது போதும் விஜி இதுல பிரசாதம் இருக்கு நந்தினிக்கு வெச்சி விட்டுட்டு உடம்பு புல்லாவும் தடவி விடு என்று சொல்லிவிட்டு சூர்யாவும் விவேக்கும் கிளம்பி விடுகின்றனர் பிறகு விஜி பொட்டு வைத்துவிட நந்தினி சூரியா சார் எதுக்கு சோகமா இருக்காரு என்று கேட்க அதற்கு அப்புறமா சொல்றேன் என சொல்ல பரவால்ல இப்பவே சொல்லுங்க என்று நந்தினி சொல்லுகிறார். நான் நிஜமா சொல்றேன் சூரியான்னா உனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருவார் என நான் நினைச்சு கூட பாக்கலாமா. உனக்காக அன்பு கொடுப்பாரு பாசத்தை கொடுப்பார் அவங்க குடும்பத்தை கூட எதிர்த்து நிப்பார் என்று தெரியும் ஆனால் இப்போ என்ன பண்ணி இருக்காரு தெரியுமா? கோவில்ல போய் பிச்சை எடுத்திருக்காரு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி இடம் விஜி இந்த ஜென்மத்துல இப்படி ஒரு புருஷன் கிடைக்கிறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல அருணாச்சலம் சூர்யாவிடம் நீ நந்தினி மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிற என்று கேட்கிறார். மறுபக்கம் சிங்காரம் அது வாழப் போற ஒவ்வொரு நாளும் நீங்க போட்ட பிச்சை என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
