நந்தினி செய்த வேலை, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அசோகனும் குடித்துவிட்டு ஆயிரம் குதிரை பலம் வந்திருக்கு இந்த வீட்டுக்கு முதல் வாரிசை கொடுக்கப் போறது நான்தான் என்ற சொல்லி வீர வசனம் பேசி எழுந்திருக்க கொஞ்ச நேரத்தில் வாய்ஸ் மாரி கை தானாக சல்யூட் அடிக்கிறது. சத்தம் கேட்டு சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலம் இருவரும் வந்துவிட எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கின்றனர்.

அதையும் கேட்காமல் அசோகன் அப்படியே பண்ணிக்கொண்டு இருக்க சுந்தரவல்லி மாதவி சுரேகா என அனைவரையும் கூப்பிட குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். உடனே அசோகன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே இருக்க என்னாச்சு என்று கேட்கின்றனர். சூர்யா அசோகனை கலாய்த்து கொண்டிருக்க நந்தினிக்கும் அசோகன் வணக்கம் சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இப்ப எதுக்கு வேலைக்காரிக்கு உன் புருஷன் உனக்கு வச்சுக்கிட்டு இருக்காரு என்று கேட்க சூர்யா என் பொண்டாட்டி வேலைக்காரி கிடையாது இந்த வீட்டோட மருமக கம்பெனியோட சிஇஓ என்று சொல்லுகிறார் உடனே நந்தினி அவர் வேணுமே பண்ணல அவருக்கு ஏதோ ஒன்னு நடந்திருக்கு என்று சொல்ல மாதவி அசோகனை அழைத்துச் சென்று விடுகிறார். மாதவி ரூமில் அசோகனிடம் என்னாச்சு என்று கேட்க அவரும் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே மாதவி கோபத்தில் அசோகனை திட்டுகிறார். உடனே சுரேகா அந்த கால் பாக்கெட்டில் நெயில் பாலிஷ் கலந்திருந்தோம் நந்தினிக்காக நீங்க ஏன் குடிச்சீங்க என்று கேட்கிறார்.

மாதவி டாக்டருக்கு போன் போட்டு அசோகன் பாலில் நெயில் பாலிஷ் கலந்து குடித்து விட்டார் அதுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கா என்று கேட்க அவரும் மாதவியிடம் சில விஷயங்களை சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவை ரூமுக்கு அழைத்து வந்து இது மாதிரி பண்ணாதீங்க என்று சொல்ல சரி நான் வேலைக்கு கிளம்புகிறேன் என்று சொல்ல ஒரு பத்து நிமிஷம் இருங்க நான் டிபன் ரெடி பண்ணுகிறேன் என்று சொல்ல, சூர்யா சரியென சொல்லுகிறார். சரி உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க என்று சொல்ல பொங்கல் சாம்பார் சட்னி என சொல்ல சீக்கிரம் ரெடி பண்றேன்னு சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி கிச்சனுக்கு வந்து பரபரப்பாக வேலை பார்க்க என்னாச்சுமா உனக்கு என்று கேட்கிறார். சூர்யா சார் அவசர அவசரமா கிளம்புனாரு அவர சாப்பிட்டு கிளம்ப சொல்லி சொல்லி இருக்கேன் அதனால தான் பாஸ்ட்டா செஞ்சுகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார்.

அவ்வளவு தானே இவ்வளவு சீக்கிரத்தில செஞ்சு விடுவோம் என்று சொல்லி இருவரும் வேலையை ஆரம்பிக்கின்றன. கொஞ்ச நேரத்தில் சமையலையும் முடித்து விட சூர்யாவும் வந்து சாப்பிட உட்காருகிறார். உடனே அருணாச்சலமும் சுந்தரவல்லியும் வந்து உட்காரா மூவருக்கும் சாப்பாடு பரிமாறுகின்றனர். நிஜமாவே நந்தினி நீங்க யாரையும் வெறுப்பேத்த நான் இங்க சொல்லல பத்து நிமிஷத்துல இவ்வளவு சூப்பரா சமைச்சு இருக்க என்று சொல்ல அருணாச்சலமும் பாராட்டுகிறார். பக்காவான டேஸ்ட்ல இருக்கு என்று சொல்ல, சுந்தரவல்லி கடுப்பாகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யா சாப்பிட்ட தட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதை கவனித்த சுந்தரவல்லி முறைத்து விட்டு சென்று விடுகிறார் உடனே மாதவி மற்றும் சுரேகா அசோகன் இருக்கும் இடத்திற்கு சென்று அது என்ன மாஸ்டர் பிளான் எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அவன் இந்த வீட்டுக்கு மருமகளா இருக்குறதுக்கும் என்னோட கம்பெனிக்கு சிஇஓ இருக்கிறதுக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதை நிரூபிக்கணும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் கிச்சனில் நந்தினி கல்யாணத்திடம் அவங்க நான் சாப்பிட்டத பார்த்துட்டு எதுவுமே சொல்லாம முறைச்சுட்டு மட்டும் போயிட்டாங்க அதனாலதான் என்ன பண்ணப் போறாங்களோன்னு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 23-12-25
jothika lakshu

Recent Posts

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 minutes ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

18 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

18 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

18 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

19 hours ago

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…

19 hours ago