Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன விஷயம், அருணாச்சலம் சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 22-03-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா,அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுரேகா காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிற ரேணுகா கூப்பிட்டோம் கேட்காமல் இருக்க கிட்டே வந்து கூப்பிட்டு ரூமை துடைக்க வேண்டும் என்று சொல்ல சரி செய் என சொல்லுகிறார். உங்க காலேஜ்ல நிறைய லீவ் விடுவாங்க போல நீங்க காலேஜ் போய் நான் பாக்கலையே என்று சொல்ல என்ன நக்கலா என்று கேட்க நான் யதார்த்தமா தான் கேட்டேன் என்று சொல்லுகிறார். நீ உன் வேலைய மட்டும் பாரு என்று சொல்லி திட்டுகிறார். உடனே டிவி பக்கத்துல இருக்குற டஸ்டையும் கிளீன் பண்ணு என்று சொல்ல அங்கு துடைக்கும் போது ஒரு ஆல்பம் இருக்க அதை எடுத்து பார்த்து நீங்க சின்ன வயசுல அழகா இருக்கீங்க என்று சொல்ல அப்ப இப்ப இல்லையா என்று கேட்டுவிட்டு உன் வேலையை மட்டும் பாரு என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து சுரேகாவிற்கு ஃபோன் வர அவர் வெளியில் பேச சென்று விடுகிறார். உடனே அந்த ஆல்பத்தில் இருக்கும் போட்டோக்களை ரேணுகா வெளியில் எடுத்து புடவையில் மறைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் அர்ச்சனா காரில் காத்துக் கொண்டிருக்க ரேணுகா மறைந்து மறைந்து வந்து அங்கு எடுத்த போட்டோக்களை அர்ச்சனாவிடம் கொடுக்கிறார். சூப்பர் ரேணுகா நான் நினைச்சதை விட நீ நிறைய போட்டோ எடுத்துக்கிட்டு வந்திருக்க என்று சொல்லுகிறார். இந்த போட்டோவ வச்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க என்று கேட்க இது வெறும் போட்டோ இல்ல ரேணுகா சுந்தரவல்லி குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாமே இது தான். ஏற்கனவே மாதவியோ அசோகனையோ வச்சு நந்தினிக்கு எதிராக திருப்பி ஆச்சு அதே மாதிரி இன்னொரு பில்லரை உடைக்கணும். சுந்தரவல்லிக்கு மானம், மரியாதை, கௌரவம் தான் பெருசு அந்த கெடுத்து அந்த பழிய நந்தினி மேல போட்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் நந்தினி மல வெறுப்பை காட்டுற மாதிரி பண்ணனும் என்று சொல்லி ரேணுகாவிற்கு பணத்தை கொடுக்க அங்க என்னென்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் சொல்லணும் என்று சொல்ல, அதுக்கு தானே நான் இருக்கேன் என்று சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

ரேணுகா சுந்தரவல்லி சுரேகா அசோகன் எனக்கு சாப்பாடு பரிமாற சுந்தரவல்லி இந்த தக்காளி தொக்கு நல்லா இருக்கு யார் பண்ணது என்று கேட்க ரேணுகா நான் தான் பண்ணேன் என சொல்ல நல்லா இருக்கு சுரேகாவுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு என்று சொல்ல எனக்கு தெரியுமா என்று சொல்கிறார் தெரியுமா அப்போ நாளை காலை நீ பிரேக்ஃபாஸ்ட் பண்ணிடு என்று சொல்ல எனக்கு அவ்வளவு எல்லாம் தெரியாதுமா கொஞ்சம் தான் தெரியும் என்று சொல்ல அந்த கொஞ்சம் நான் என்ன முட்டை வேக வைக்கிறது வெளில வாங்குன புட்ட அவன்ல வச்சு சூடு பண்ணி சாப்பிடுறது இதுதானே தெரியும் என்று சொல்லி திட்டுகிறார் சீக்கிரமா கத்துக்குறேன்மா என்று சொல்லுகிறார் சுரேகா. கொஞ்ச நேரத்தில் மாதவி சாப்பிட உட்கார நந்தினி பரிமாற கோபப்பட்டு மாதவி ரேணுகாவை கத்தி கூப்பிட்டு இனிமே அவ எனக்கு பரிமாறக்கூடாது நீ தான் பரிமாறணும் என் கண்ணு முன்னாடி வந்தானா அவ்வளவுதான் அவளை போக சொல்லு என்று சொல்ல நந்தினி பேச வர நீ பேச வேண்டாம் கிளம்பு என்று அனுப்பி விடுகிறார்.

பிறகு நந்தினி கல்யாணத்திடம் தனியாக உட்கார்ந்து என் மேல என்ன தப்பு இருக்கு எல்லா தப்புக்கும் நான் தான் காரணம் என்ற மாதிரி அவங்க மூஞ்சில முழிக்காதென திட்றாங்க என்று சொல்ல, அதெல்லாம் நீ கண்டுக்காதம்மா அவங்க அந்த பக்கம் போனா நீ இந்த பக்கம் போய்கிட்டே இரு, இது மட்டும் இல்லாம டெண்டர் விஷயத்துல சிவாஜி கணேசனும் பத்மினியும் நடிச்சு தள்ளுற மாதிரி தள்ளன அங்க ரெண்டு பேரும் என் தம்பியோட உசுர காப்பாத்த தான நாடகம் ஆனாங்க அதுவும் இல்லாம அந்த தங்க காசு அவங்க கைக்கு போய் இருக்க வேண்டியது அது சிக்கனதனால் தான் இந்த பிரச்சனை என்று சொல்ல அதெல்லாம் இருந்தாலும் எனக்கு வேற ஒரு பிரச்சனை மனசுல ஓடுது. மாதவி அம்மா சூர்யா சார் கிட்ட நான் வேணும்னே குடுத்ததா சொல்றாங்க. ஆனா வெளிய இருந்து வந்தவங்க சூர்யா சார் கிட்ட குடுக்க சொன்னாங்க, சூர்யா சாருக்கோ அல்லது மாதவி அம்மாவுக்கு கொடுக்க வேண்டியதா இருந்தா அவங்களையே நேரடியா கூப்டு கொடுத்திருக்கலாம் என்ன எதுக்கு கூப்பிட்டாங்க என்று சொல்ல நீ இப்பதான்மா கரெக்டா யோசிக்கிற என்று சொல்ல நீ இப்ப என்கிட்ட சொன்னது சின்னையா கிட்ட சொல்லி இருக்கலாம் என்று கேட்க, அதெல்லாம் எதுக்கு அண்ணே என்று சொல்லி அமைதியாகி விடுகிறார். உடனே ரேணுகா இதை அர்ச்சனமாக நேரில் பார்த்து சொல்லனும் என்று சென்று விடுகிறார்.

என்ன திடீர்னு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து நிக்குற என்ன என்று கேட்க நந்தினியும் கல்யாணமும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன் அதனால தான் நேர்ல வந்து சொல்ல வந்தேன் என்று சொல்ல,நந்தினி முதல்ல எனக்குன்னே பிரச்சனை தேடி வருது எல்லாம் பழியும் என் மேல விழுகுது அப்படின்னு புலம்பிட்டு தான் இருந்தா ஆனா நீங்க தங்க காசு அவ கைல கொடுத்து பிரச்சனை உண்டு பண்ணிங்கள்ல அந்த தங்க காசு பெட்டி என் கையில குடுக்க காரணம் என்ன என்று யோசிக்க ஆரம்பிச்சிருக்கா என்று சொல்ல, வேற என்ன சொன்னா என்று கேட்க வேற ஒன்னும் இல்ல இதுதான் என்று சொல்ல இதுக்காக தான் இவ்வளவு தூரம் ஓடி வந்தயா இதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அவளுக்கு சந்தேகம் வந்தா வரட்டும் பாத்துக்கலாம் நீ கெளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுநாள் காலையில் சுந்தரவல்லி அருணாச்சலம் உட்கார்ந்திருக்க அசோகன் மாதவி வருகின்றனர் என்ன மாப்ள கிப்ட் எல்லாம் வாங்கிட்டீங்க போல என்று சொல்ல அதெல்லாம் வாங்கிட்டேன் மாமா என்று சொல்லுகிறார்.

உடனே சூர்யாவும் வர அருணாச்சலம் தங்கச்சி பர்த்டேக்கு ரெடி ஆயிட்ட போல என்று சொல்ல தங்கச்சி பிறந்தநாளுக்கு நான் எதுக்கு ரெடி ஆகணும் என்று கேட்கிறார். அருணாச்சலம் கிப்ட் எதுவும் வாங்கலையா என்று கேட்க அதெல்லாம் வாங்கல என்று சொல்லுகிறார் உடனே மாதவி சின்ன கிஃப்ட் ஆவது ஏதாவது வாங்கலாம்ல சந்தோஷப்படுவா என்று சொல்ல அதுதான் நீங்க எல்லாம் வாங்குறீங்களே போதும் என்று சொல்லுகிறார்.சுரேகா புது டிரஸ்ஸில் அழகாக ரெடியாகி வர குடும்பத்தினர் வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகின்றனர் சுந்தரவல்லி கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல அருணாச்சலம் வாழ்த்து சொன்ன பிறகு நினைச்சதெல்லாம் சாதிக்கணும் என்று சொல்ல சூர்யா அவன் நினைச்சா தானே என்று கிண்டல் பண்ணுகிறார். பாருங்க டாடி இன்னைக்கு கூட கிண்டல் பண்றான் என்று சொல்ல அமைதியா இரு சூர்யா என்று சொல்லுகிறார் உடனே சூர்யா சரி அண்ணன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்று சொல்ல அதற்கு சுரேகா நான் முதல்ல அம்மா அப்பா காலில் தான் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன் என்று சொல்லி இருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க என்னோட கிப்ட் எங்கே என்று கேட்கிறார்.

முதலில் ஒரு கிப்ட் கொடுத்துவிட்டு பிறகு இதுல கோவாவுக்கு டிக்கெட் இருக்கு பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஜாலியா போயிட்டு வா என்று சொல்ல சூர்யா சூப்பர் கிப்ட் என்று சொல்கிறார். உடனே சுரேகா சந்தோஷப்பட்டு இரண்டு பேருக்கும் நன்றி சொல்லுகிறார். உடனே மாதவி மற்றும் அசோகனிடம் கிப்ட் கேட்க அவர் ஒரு கிப்ட் கொடுக்கிறார். பிறகு சூர்யாவிடம் கிப்ட் கேட்கிறார். நான் உனக்கு அண்ணனா பொறந்ததே பெரிய கிஃப்ட் தானே என்று சொல்ல இந்த மழுப்புற வேலை எல்லாம் வேண்டாம் கிப்ட் எங்கே என்று கேட்கிறார். வாங்க வேணாம்னு தான் நினைச்சேன் ஆனா பாவம்னு வாங்கிட்டேன் என்று கிப்ட் கொடுக்கிறார். அதில் நீ எல்லாம் ஒரு ஆளு உனக்கு ஒரு பிறந்த நாளு என்று கிண்டல் பண்ணி எழுதி இருக்கிறார். பாருங்கப்பா ஒரு பர்த்டே விஷ்ல கூட எவ்வளவு நக்கல் இருக்கு என்று சொல்லுகிறார்.

இது சூர்யாவோட ஸ்பெஷல் கிப்ட் சுரேகா அப்புறம் பிரிச்சு பாரு என்று சொல்லுகிறார். உடனே நந்தினி பக்கம் திரும்பி நீ எதுக்கு அங்க நின்னுகிட்டு இருக்க நீ ஏதோ கிப்ட்டு தரேன்னு சொன்னியே கொடு என்று சொல்ல எனக்கு பரிசு கொடுக்கிற அளவுக்கு எதுவும் தெரியாது எனக்கு தெரிஞ்சத பண்ணி இருக்கேன் என்று சொல்லி ஒரு அட்டையில் டெக்கரேஷன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் என எழுதி இருப்பதை கொடுக்க சுரேகா முகம் மாற சூர்யா சூப்பரா இருக்கு நந்தினி எப்படி பண்ண என்று சொல்லி நந்தினியை சந்தோஷப்படுத்துகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா ஒரு பையனிடம் நான் சொல்ற மாதிரி நீ பண்ணுனா அவளே வந்து உன்கிட்ட ஐ லவ் யூ என்று சொல்லுவாள் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி என்னோட ஃப்ரெண்ட் ஹேமா அவளோட பையன் தீபக்கு சுரேகாவை கேட்கிறார் என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் இப்போதைக்கு தேவையில்லாத விஷயமோ என்று தோணுது என்று சொன்னவுடன் சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது.

நந்தினி சமைத்த சமையலை சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் வாங்கி கிச்சனில் சாப்பிடுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 22-03-25
Moondru Mudichu Serial Promo Update 22-03-25