தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு யாரும் காசு போடாததால் நீ பாக்குறதுக்கு பளபளன்னு இருந்தா யாரும் போட மாட்டாங்க முதல்ல கெட்டப்பை மாத்தணும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் பிச்சைக்கார என்கிட்ட ஒரு வேஷ்டி இருக்கு அதை கொடுக்கிறேன் என்று சொல்லி அதை கொடுக்க எழுந்து வந்து அதை மாற்ற சொல்லுகிறார். சூர்யாவும் அந்த அழுக்கு வேஷ்டியை கட்டிக் கொள்ள உடனே டி-ஷர்ட்டை கழட்டி கொடுக்க சொன்ன பிச்சைக்காரன் அதை தரையில் போட்டு அழுக்கு பண்ணி சூர்யாவுக்கு போட சொல்லி கொடுக்க சூர்யாவும் போட்டுக் கொள்கிறார். பிறகு தலை முடியை கலைத்துவிட்டு உடம்பில் அழுக்கு பூசி விடுகிறார்.பிறகு கையில் தட்டை கொடுத்து எப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து அழைத்து வந்து உட்கார வைக்கிறார். உடனே சூர்யாவும் அதே போல் பிச்சை எடுக்க காசு அதிகமாக வருகிறது. உடனே சூர்யா ஆர்வமாக பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்.
விவேக் விஜியிடம் அவன் படுற கஷ்டத்தை என்னால பாக்க முடியல, ஆமா கோடி கணக்குல வருமானத்தை பார்க்கிறவன் பிச்சைக்காரங்க கூட ஒக்காந்து பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான் என்று சொல்ல, சூர்யா அண்ணன மாதிரி ஒரு புருஷன் கிடைக்கிறதுக்கு நந்தினி கொடுத்து வச்சிருக்கணும், யாரும் இதை செய்ய மாட்டாங்க, அவங்க வீட்ல தெரிஞ்சா இது எவ்வளவு பிரச்சனையாகும் அவர் தெரிஞ்சோ இத பண்றாருன்னா அப்போ நந்தினி மேல் அவருக்கு எவ்வளவு பாசம் இருக்கும் என்று கேட்கிறார். நீங்க அண்ணன் கூட இருங்க அவர தைரியமா இருக்க சொல்லுங்க என்று சொல்ல சரி விஜி நான் பாத்துக்குறேன் என போனை வைக்கிறார். பிறகு அருணாச்சலம் இதுக்கு முன்னாடி ஒரு புடவை கட்டிக்கிட்டு இருந்த இப்ப திடீர்னு மாத்திட்ட என்று கேட்டுக்கொண்டிருக்க மாதவி சுரேகா அசோகன் என அனைவரும் கிளம்பி வருகின்றனர். எங்க கிளம்பிட்டீங்க என்று கேட்க வெளியே டூர் போலாம்னு இருக்கோம் என சுந்தரவல்லி சொல்லுகிறார். வீட்ல என்ன நடந்துகிட்டு இருக்கு உங்களுக்கெல்லாம் இங்கீதம் இல்லையா என்று கேட்க அவளுக்கு உடம்பு சரியில்லைன்னா நாங்களும் கூட படுத்துக்க முடியுமா என்று கேட்க சுரேகா அவர் செத்துப்போன நானும் செத்துப் போக முடியுமா என்ன என்று கேட்க அருணாச்சலம் திட்டுகிறார்.
முதல்ல கிளம்புங்க டூருக்கு தானே போறீங்க காசி ராமேஸ்வரம் போய் நல்ல புத்திய கொடுன்னு வேண்டிகிட்டு வாங்க என்று சொல்லி திட்டி அனுப்புகிறார்.
விவேக் விஜியிடம் இப்போ எப்படி இருக்கு என்று கேட்க என்னத்த சொல்றது எப்பயாவது கண்ணு முழிக்கிறா சாப்பிடுறியான கேக்குறதுக்குள்ள திடீர்னு மயங்கிட்றா எதுவும் சாப்பிட மாட்டேங்குற உடம்பு முழுக்க அனலா இருக்கு, பக்கத்துல ஒக்காந்துகிட்டு இருக்க என்னாலையே உட்கார முடியல, உடம்புக்கு ஃபுல்லா அம்மை அதிகமாய் கிட்டே போகுது என்று சொல்லுகிறார் அருணாச்சலம் சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல சொன்னா மட்டும் என்ன பண்றது அம்மாவோட கோபம் ரொம்ப உக்கிரமா இருக்கு என்று சொல்லுகிறார்.என்னாலயும் இந்த சூர்யாவை பார்க்கவே முடியல பிச்சை போட்ற வரவெல்லாம் உனக்கு என்ன கை கால் நல்லா தானே இருக்கு திட்டிட்டு போறான் துணி எல்லாம் கிழிச்சுகிட்டு அழுக்கு பூசிக்கிட்டு அவன் பிச்சை எடுக்கிறத பார்க்கவே கஷ்டமா இருக்கு இது மாதிரி நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று சொன்ன விஜி விடுங்க நந்தினி நல்லாவதற்கு தானே வேண்டிக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். புரியுதுங்க எல்லாமே ஒரு நாள் மட்டும் தான் என்று சொல்லுகிறார். அண்ணனோட வேண்டுதல் கட்டாயம் அந்த தெய்வத்துக்கு கேட்கும் நந்தினி நலமாகி வருவா என்று சொல்லுகிறார். மாதவி எங்கதம்மா போறோம் என்று கேட்க கோவிலுக்கு போறோம் என்று சொல்லுகிறார்.
நந்தினிக்கு சரியாகணும்னு கோவிலுக்கு போறீங்களா என்று சுரேகா கேட்க, அவளுக்கு என்ன ஆனா எனக்கு என்ன, அம்மா போட்டு இருக்கும்போது நம்ம கோவத்துல பிரியாணி சாப்பிட்டோம் ஆனாலும் அது தப்பு தானே அதுக்காக கோவிலுக்கு போய் மன்னிப்பு கேட்கலாம்னு தோணுச்சு என்று சொல்லுகிறார். ஒருவேளை என்னையும் உங்களையும் தண்டிச்சா என்ன பண்றது சாமி தானே மன்னிப்பு கேட்டுடலாம் என்று சொல்லுகிறார். உடனே இவர்கள் சூர்யா பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கோவிலுக்கு வந்து இறங்குகின்றனர். விவேக் இதை கவனித்து சூர்யாவிடம் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சூர்யா கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கோபமாக வர பிச்சைக்காரர்கள் சுந்தரவள்ளியின் புடவையை தொட உடனே கோபப்பட்டு திட்டுகிறார் உங்களை எல்லாம் என்ன பண்றேன் பாரு என்று சொல்லி போலீசை கூப்பிடுகிறார். உடனே போலீஸ் அனைவரையும் வந்து அடித்து விரட்ட சூர்யாவை அடிக்கப் போக இங்கு யாரும் யார்கிட்டயும் பிரச்சனை பண்ண பொய்யான கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்து சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் உங்க பையன் சூர்யா கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் எவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தோட சக்கரவர்த்தி அவன் இவளுக்காக அவன் நேத்தி கடன் பண்ணனும் என்று கேட்க நந்தினி கண் திறக்க கண்கலங்குகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
