moondru mudichu serial promo update 20-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா கோவில் வாசலில் பிச்சை எடுக்க ஒரு நபர் உனக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா பார்த்தா பிச்சை எடுக்கிற மாதிரியா இருக்க என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். நான் பிச்சைக்காரன் தான் அஞ்சோ பத்து கொடுங்க என்று சூர்யா கேட்க உடனே சக பிச்சைக்காரர்கள் ஒரு பத்து ரூபா குடுக்க இவ்வளவு பேசுறீங்க என்று சொல்லி அவரை திட்டி அனுப்புகின்றனர். பிறகு நீங்க இதையெல்லாம் கண்டுக்காதீங்க தம்பி நம்ம வந்த வேலையை பார்க்கலாம் என்று சொல்லி மீண்டும் பிச்சை எடுக்க ஆரம்பிக்கின்றனர். சூர்யாவின் கையில் ஒரு பெண்மணி ஒரு ரூபாய் கூட சூர்யாவை ஆச்சரியமாக பார்க்கிறார். மறுபக்கம் சிங்காரம் இதுக்கு மேல என் பொண்ணு உசுரோட இருப்பான்னு எனக்கு தோணல என் வீட்ல என்னோட புள்ள உசுர போகட்டும் அனுப்பி விட்டு விடுங்கள் என்று அழுது கொண்டே சொல்லுகிறார். அருணாச்சலம் என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது சரியாகிவிடும் கண்டிப்பா பழைய மாதிரி வந்துடுவா என்று சொல்லுகிறார்.
மீண்டும் சிங்காரம் என் புள்ள பொழைக்க மாட்டா, அனுப்பிடுங்க என்று சொல்ல முதல்ல நீ பேசுவதை நிறுத்து நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்னு உனக்கு தெரியுமா முதல்ல சூர்யா இப்ப எங்க இருக்கான்னு தெரியுமா என்ன பண்றான்னு தெரியுமா என்று கண்கலங்கி அழுது கொண்டே நந்தினிக்கு சரியாக வேண்டும் என்பதற்காக கோவில் வாசலில் போய் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான் என்னோட புள்ள என்று சொல்லி அழ சிங்காரம் அதிர்ச்சி அடைகிறார். உனக்கே தெரியும்ல அவன் எவ்வளவு சொகுசா வாழ்ந்தவன் இதுவரைக்கும் யாருக்காகவும் எதுக்காகவும் போய் நின்னது கிடையாது ஆனா இன்னைக்கு நந்தினி காக பிச்சை எடுக்கிறான். நீ என்னனா நீ விட்டுடுங்க கூட்டிட்டு போறேன்னு சொல்ற என்று கேட்கிறார். சூர்யாவோட வேண்டுதலுக்காகவாவது நந்தினி பிழைத்து வருவா நீ நம்பிக்கையா இரு என்று சொல்லுகிறார்.
இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஒரு கதை இருக்கு எல்லோரும் சாதாரணமாக பிச்சை எடுக்க வரல வாழ்க்கையில ஏதோ ஒரு ஏமாற்றம் துரோகத்தினால் தான் இப்படி இருக்கோம் என்று சொல்லிவிட்டு நீ யாருக்காக எதுக்காக இந்த வேண்டுதல் பண்ற என்று கேட்க என்னோட பொண்டாட்டிக்கு அம்மா போட்டு இருக்கு அவ சரியாக நான் இங்க பிச்சை எடுக்கிறேன் என்று சொல்ல உனக்கு பொண்டாட்டி மேல அவ்வளவு பாசமா என்று கேட்டால் எனக்கு அது தெரியாது ஆனா அவ ஒரு அப்பாவி பொண்ணு அவளுக்கு ரொம்ப நல்ல மனசு அவ இப்படி கஷ்டப்படக்கூடாது என்று சொல்லுகிறார். சிங்காரம் நந்தினியிடம் உனக்கு ஒன்னும் ஆகாதுமா தைரியமா இரு உனக்காக சின்னையா கோவிலில் பிச்சை எடுக்கிறார் என்று சொல்லி அழுகிறார். அவர் உன்னோட உசுரை காப்பாற்ற எமனோட போராடிகிட்டு இருக்காரு நம்பிக்கையா இருமா என்று சொல்லுகிறார்.
பிறகு விஜி நீங்க வீட்டுக்கு போங்க நந்தினியை நான் பார்த்துக்கிறேன். ஆத்தா எல்லாத்தையும் சரி பண்ணவா நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஆறுதல் சொல்ல சிங்காரமும் கிளம்புகிறார். அருணாச்சலம் ரூமில் நடந்து கொண்டு இருக்க, எதுக்கு இவ்வளவு டென்ஷன் என்று சுந்தரவல்லி கேட்கிறார். நீங்க அம்மா போட்ட வீட்ல பிரியாணி சாப்பிடக்கூடாது சாப்டா எங்களுக்கு ஏதாவது ஆயிடும்னு சொன்னீங்க நாங்க நல்லா தானே இருக்கோம் என்று சொல்ல வாயை மூடு நீ பண்ண கஷ்டத்துக்கு அவன் மோசமான நிலைமையில் இருக்கா என்று கோபப்படுகிறார். நீ போய் அவளை மேல பாரு எப்படி இருக்கா என்று கேட்க, அவள பாக்குற அளவுக்கு எங்களுக்கு ஒன்னும் வேலை இல்லாம கிடையாது என்று சொல்லுகிறார். எதை கிண்டல் பண்ணனும்னு கூட உனக்கு தெரியல, அந்த அடிப்படைய அறிவு கூட எனக்கு இல்லை என்று சொல்லுகிறார்.
சரி அதை விடுங்க எப்பவுமே உங்க கூடவே ஒருத்தன் சுத்திக்கிட்டு இருப்பானே பையன் இரண்டு பேரும் குசுகுசுன்னு பேசிகிட்டு இருப்பீங்க அவன் எங்கே என கேட்க எனக்கு தெரியாது என அருணாச்சலம் சொல்ல நம்பிட்டேன் என சொல்லுகிறார். சூர்யா பிச்சை எடுத்துக் கொண்டிருக்க ஆனால் அவருக்கு யாரும் சரியாக காசு போடாமல் இருக்கின்றனர். உடனே சூர்யா சோகமாக என்னாச்சு தம்பி என்று கேட்கின்றனர் எனக்கு மட்டும் யாரும் சரியா காசு கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன்னை பார்க்கும் போது பணக்கார வீட்டு பையன் மாதிரி இருக்க அப்புறம் எப்படி போடுவாங்க எங்களை மாதிரி இருந்தா தான் போடுவாங்க என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியின் உடல்நிலை மோசமாக சென்று கொண்டு இருக்க சூர்யா யாரும் பிச்சை போடாததால் பிச்சைக்காரர்கள் கெட்டப்பில் துணி கிழிந்த துணி முகத்தில் கரை போட்டு பிச்சை எடுக்கிறார். விஜி நந்தினிக்கு ரொம்ப அதிகமா அம்மா போட்டு இருக்கு என்ற விஷயத்தை சொல்ல சுந்தரவல்லி குடும்பத்துடன் கோவிலுக்கு வர சூர்யாவை பார்த்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]